570 கோடி ரூபாய் பணத்தோட மாட்டுன கண்டெய்னர் என்னாச்சுனு யாருக்கும் தெரியல...
சேகர் ரெட்டிகிட்ட பிடிச்ச பல கோடி ரூபா ரெண்டாயிரம் ரூபா நோட்டு யாருதுனு தெரியல...
தலைமைச் செயலகத்துல எதுக்காக ரெய்டு விட்டாங்கனு தெரியல...
விஜயபாஸ்கர் கிட்ட தேர்தல் டைம்ல பிடிச்ச பணப்பட்டுவாடா லிஸ்ட்டு என்னாச்சுனு தெரியல..
கொடநாட்டுல நடந்த கொலையெல்லாம் யாரு பண்ணுனாங்க - எதுக்கு பண்ணுனாங்க? தெரியல..
தினகரன் எம்எல்ஏ எல்லாம் பதவி நீக்கம் பண்ண முடியும் போது, ஓபிஎஸ் கூட்டாளிங்க 11 பேரோட கடைசி வரை தப்பிச்சது எப்டினு யாருக்குமே தெரியல..
எல்லாத்தையும் விட ஜெயலலிதாவுக்கு என்ன நடந் துச்சுனே எவருக்கும் இதுவரை தெளிவா தெரியல..
இவ்ளோ தில்லுமுல்லுக்கு பின்னாடியும் நிலைச்சு நீண்ட ஆட்சிய வச்சுகிட்டு, நீட் மூலமா நம்ம குழந்தைங்க டாக்டர் ஆக முடியாம தடுத்தாங்க...
சிஏஏ, புதிய கல்விக் கொள்கை, புதிய சுற்றுச்சூழல் கொள்கை அப்டினு விளிம்புநிலை, சிறுபான்மை மக்களை நேரடியா பாதிக்கிற எல்லா திட்டத்தையும் நிறைவேத்தினாங்க..
பார்ப்பன அதிகார லாபியை தமிழகத்தில் நிலைநிறுத்த கடந்த 4 வருசத்துல எல்லா மட்டத்திலும் ஆர்எஸ்எஸ் சார்ந்த அதிகாரிகளை எறக்கி விட்ருக்காங்க..
வங்கி, ரயில்வே, அஞ்சல்துறை என அரசு வேலை களில் எல்லாம் தமிழர்களை புறக்கணித்து, முழுக்க முழுக்க வட மாநிலத்தவரைக் கொண்டு வந்து எறக்கிருக்காங்க..
சிறப்பா உருவாக்கப்பட்டிருக்கிற மருத்துவம், ரேசன் ஆகிய கட்டமைப்புகளை சிதைக்கிற மாதிரி அடுத்தடுத்த திட்டங்களை ரெடியா வச்சிருக்காங்க..
இவ்வளவுக்கும் மேல திரும்ப அ.தி.மு.க. + பா.ஜ.க. + பா.ம.க. கூட்டணி இங்க ஜெயிச்சு ஆட்சிக்கு வந்தாங்கனா, நமக்கு இருக்கிற ஒரே உரிமையான பேச்சுரிமையைக்கூட இல்லாம பண்ணத் தயங்க மாட்டாங்க.
அலட்சியம் வேண்டாம்! ஒரு தடவை யோசிச்சு, நம்ம தலைமுறையை காப்பாத்துங்க!