5 மாநில தேர்தல்களிலும் பா.ஜ.க.வுக்கு எதிராக களமிறங்கிய விவசாயிகள்!

அதிர்ச்சியில் பா...வினர்

கொல்கத்தா, மார்ச். 15- நந்தி கிராம் தொகுதியில் 13.3.2021 அன்று நடைபெற்ற மகா பஞ்சாயத்து நிகழ்ச்சியில் பா.ஜ.க. வுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்த விவசாயச் சங்க தலை வர் ராகேஷ்திகாய்த் திரிணா முல் காங்கிரஸ் கட்சிக்கு ஆத ரவான முழக்கத்தை எழுப் பினார். மத்திய அரசின் விவ சாய சட்டங்களுக்கு எதிராகத் தலைநகரில் கடந்த நவம்பர் மாதம் இறுதி முதல் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டம் 110 நாட்களைக் கடந்தும் தொடர்கிறது.

ஆனால் விவசாய சட்டங் களை ரத்து செய்யும் எண் ணம் இல்லை என்று மத்திய அரசு திட்டவட்டமாக அறிவித்துள்ளது. இதனால் அதி ருப்தி அடைந்த விவசாயிகள் அய்ந்து மாநில தேர்தல்களில் பா...வுக்கு எதிராகப் பிரச் சாரம் மேற்கொள்ளப்படும் என்று அறிவித்துள்ளனர்.

முதல் கட்டமாக மேற்கு வங்க மாநிலத்தில் விவசாயி கள் பிரச்சாரத்தைத் தொடங் கியுள்ளனர். மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங் கிரஸ் தலைவருமான மம்தா போட்டியிடும் நந்திகிராம் தொகுதியில் விவசாயிகள் 13.3.2021 அன்று பொதுக்கூட் டம் நடத்தினர்.அப்போது விவசாயிகள் மத்தியில் பேசிய ராகேஷ் டிக்கைட், நாங்கள் அய்ந்து லட்சம் விவசாயிகள் சுமார் 110 நாட்களாக, டில்லி யின் எல்லையில் போராட்டம் நடத்தி வருகிறோம். திரிணா முல் காங்கிரஸ் டில்லி எல்லை யில் சாலைகளில் நிரந்தர வீடுகளையும் நாங்கள் கட்ட தொடங்கிவிட்டோம். ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் தொடர்ந்து போராடுவதைக்கூட மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை.கொஞ்சம் யோசித்துப் பாருங் கள், இப்படியொரு அரசு வங் காளத்தில் ஆட்சி அமைத் தால் என்ன நடக்கும் என்று சிந்தித்துப் பாருங்கள் என்றார்.

பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டாம் என்று தொடர்ந்து பேசிய அவர், இது வங்காள மக்களுக்கு எனது செய்தி. பா... தலைமையிலான மத் திய அரசு நாட்டை கொள் ளையடிக்கிறது. அவர்களுக்கு யாரும் வாக்களிக்கக் கூடாது. வாக்கு கேட்டு வந்தால், நீங் கள் அவர்களிடம் குறைந்த பட்ச ஆதரவுவிலை எப்போது கிடைக்கும் என்று கேளுங்கள்.

இவ்வாறு ராகேஷ்திகாய்த் பேசினார்.

Comments
Popular posts
நெடுஞ்சாலை இணைய தளத்தில் சென்னை - அண்ணாசாலை - காமராஜர் சாலை பெயர்களும் மாற்றப்பட்ட கொடுமை! நமது வன்மையான கண்டனம்!
Image
சாரைசாரையாக புறப்படும் தொழிலாளர்கள் பல்வேறு தொழில்கள் முடங்கும் அபாயம்
Image
‘இந்து மதம்' என்ற ஆரிய - சனாதன மதத்தின் ஆணிவேரான வருணதர்மத்தை வேரோடும் வேரடி மண்ணோடும் பெயர்த்து எறிவதே புரட்சியாளர் அம்பேத்கருக்கு புகழ்மாலை சூட்டிப் பெருமை சேர்ப்பதாகும்!
Image
மகாராட்டிராவைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் ஊரடங்கா? - சுகாதாரத் துறைச் செயலாளர் பதில்
Image
பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலையின் பெயரை மாற்றுவதா? அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம்
Image