வாக்காளர்களுக்கு வழங்க 48 லட்சம் கையுறைகள் தயார்!

சென்னை, மார்ச் 27 கரோனா பாது காப்பு நடவடிக்கையாக சென்னையில் வாக்காளர்களுக்கு வழங்க 48 லட்சம் கையுறைகள் தயார் நிலையில் உள்ளன. இவை வாக்குப்பதிவு மய்யங்களில் கொடுக்கப்படும்.

தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடக்கிறது. கரோனா காலம் என்பதால் சட்டசபை தேர்தலை பாதுகாப்பாக நடத்த தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதையொட்டி பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்கள்.

மேலும், முதல் முறையாக மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள் வீட்டில் இருந்தபடியே ஓட்டுப்போட அஞ்சல் வாக்கு அளிக்கும் முறையும் இந்த தேர்தலில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அதே போல், வாக்குப்பதிவு நாளன்று, கரோனா பரவலை தடுக்கும் விதமாக வாக்குப்பதிவு மய்யங்களில், கரோனா தடுப்பு நடவடிக்கைகள் அனைத்தையும் தீவிரப்படுத்தி வருகின்றனர்.

அந்தவகையில், கரோனாவால் பாதிக்கப்பட்ட வாக்காளர்களுக்கு முழு உடல் கவச உடை வழங்குவது, கிருமி நாசினி வழங்குவது, முகக்கவசம் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சென்னை மாவட்டத்தில் வாக்குப்பதிவு நாளன்று வாக்காளர் களுக்கு வழங்குவதற்காக வலது கையுறைகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து மாநகராட்சி சுகாதாரத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

சென்னையில் 40 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். வாக்காளர்கள் ஓட்டு போட வரும் போது, முகக்கவசம், கையுறைகள் அணிந்து வரவேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது. இந்தநிலையில் கையுறைகள் அணிந்து வராதவர்களுக்காக கையுறைகள் வழங்க, 48 லட்சம் கையுறைகள் கொள்முதல் செய்து தயார் நிலையில் வைத்துள்ளோம். தேர்தல் நாளுக்கு முன்பு அனைத்து வாக்குப்பதிவு மய்யங்களுக்கும் அது அனுப்பி வைக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Comments
Popular posts
நெடுஞ்சாலை இணைய தளத்தில் சென்னை - அண்ணாசாலை - காமராஜர் சாலை பெயர்களும் மாற்றப்பட்ட கொடுமை! நமது வன்மையான கண்டனம்!
Image
சாரைசாரையாக புறப்படும் தொழிலாளர்கள் பல்வேறு தொழில்கள் முடங்கும் அபாயம்
Image
‘இந்து மதம்' என்ற ஆரிய - சனாதன மதத்தின் ஆணிவேரான வருணதர்மத்தை வேரோடும் வேரடி மண்ணோடும் பெயர்த்து எறிவதே புரட்சியாளர் அம்பேத்கருக்கு புகழ்மாலை சூட்டிப் பெருமை சேர்ப்பதாகும்!
Image
கோயிலும், 'தினமணி'யும்!
எங்கும் திருக்குறள் - எதிலும் திருக்குறள் - எல்லோருக்கும் குறள் என்பதை வெறும் முழக்கமாக மட்டுமில்லாமல் உலகத்தினுடைய எல்லா பாகங்களிலும் திருவள்ளுவருடைய திருக்குறள் கருத்துகள் ஒலிக்கட்டும் - அதன்மூலம் மனித குலம் செழிக்கட்டும்!
Image