பெரியார் மருந்தியல் கல்லூரியில் தொண்டறத் தாய் அன்னை மணியம்மையாரின் 43ஆம் ஆண்டு நினைவுநாள்

திருச்சி, மார்ச் 17- திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரியில் தொண்டறத் தாய் அன்னை மணியம்மையார் அவர்களின் 43ஆம் ஆண்டு நினைவு நாளான 16.03.2021 அன்று காலை 9 மணியளவில் அன்னை மணி யம்மையார் அவர்களின் உரு வப்படத்திற்கு கல்லூரியின் முதல்வர் முனைவர் இரா. செந்தாமரை மாலை அணி வித்து மரியாதை செலுத்தினார்.

அதனைத் தொடர்ந்து அம்மா அவர்களின் நினைவு தினத்தை போற்றும் இந் நாளில் சமுதாய பாதுகாப்பு தினமும் கடைப்பிடிக்கப்பட் டது. பெண்கள் சமுதாயத் திற்கு எடுத்துக்காட்டாகத் திகழ்ந்த அன்னை மணியம் மையார் அவர்களின் பிறந்த நாளான மார்ச் 10 அன்று கருத்தரங்கம் உள்ளிட்ட தொண் டற நிகழ்ச்சிகள் நடைபெற் றன.

இந்நிகழ்வில் பேசிய முனைவர் இரா.செந்தாமரை: நினைவு தினமான இன்று கரோனா எனும் மிகக் கொடிய நோயிலிருந்து இச் சமூகத்தை பாதுகாக்க நமது தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் அறிவுறுத்தியபடி முகக்கவசம் அணிவதை கட் டாயப்படுத்துவதுடன் அதற் கான விழிப்புணர்வுப் பணி களையும் துரிதப்படுத்துவதை நாம் ஒவ்வொருவரும் கையி லெடுக்க வேண்டும்.  

முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின் பற்றுதல், வெப்பநிலையை கணக்கிடுதல், வகுப்பறை மற் றும் பயன்படுத்தும் அனைத்து இடங்களையும் சுத்தம் செய்து கிருமி நாசினி தெளித் தல் போன்ற முன்னெச்ச ரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றி வந்தாலும்   மாண வர்களுக்கு பல்கலைக்கழக தேர்வு காலம் என்பதால் இங்கு இருக்கக்கூடிய பேராசி ரியர்கள் இது குறித்த விழிப் புணர்வுகளை தினமும் மாண வர்களுக்கு வலியுறுத்துமாறு கேட்டுக்கொள்வதோடு அனைவரது நலத்தின் பாது காப்பில் நாம் ஒன்றிணைந்து செயல்பட்டு நோயற்ற சமு தாயத்தை உருவாக்க அன்னை மணியம்மையார் நினைவு நாளில் உறுதியேற்போம் என்று உரையாற்றினார்.

இந்நிகழ்வில் பேராசிரியர் முனைவர் .மு. இஸ்மாயில், துணை முதல்வர் முனைவர் கோ. கிருஷ்ணமூர்த்தி, பேராசிரியர்கள் மற்றும் பணி யாளர்கள் கலந்து கொண்டு தியாகத் தாய் அன்னை  மணி யம்மையார் அவர்களுக்கு வீர வணக்கத்தை செலுத்தினர்.

Comments