பிரான்சில் தொடரும் கரோனா பாதிப்பு:புதிதாக 35,345 பேருக்கு தொற்று உறுதி

பாரிஸ்மார்ச் 22 பிரான்சில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 35,345 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள் ளது.

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் நோய்த் தொற்று அமெரிக்கா, இங்கிலாந்து, இத்தாலி உள்ளிட்ட சில நாடுகளில் மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது. பிரான்ஸ் நாட்டில் தினசரி கரோனா பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைவாக பதிவாகி வந்தது.

இந்த நிலையில் பிரான்சில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனா தொற்று உறுதியானவர் களின் எண்ணிக்கை 35,345 ஆக பதிவாகி உள்ளது. இதன்மூலம் பிரான்ஸ் நாட்டில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர் களின் மொத்த எண்ணிக்கை 42,52,022 ஆக உயர்ந்துள்ளது.

கரோனா பாதிப்பு காரணமாக மேலும் 185 பேர் உயிரிழக்க, கரோனாவால் பலியானோர் மொத்த எண்ணிக்கை 92,167 ஆக உயர்ந்துள்ளது.

கரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 2,79,646 பேர் குணமடைந்துள்ளனர், தற்போது 38,80,209 பேர் கரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாகவும் அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.  உலக அளவில் கரோனாவால் பாதிப்பு அடைந் தோர் பட்டியலில் பிரான்ஸ் தற் போது 6ஆவது இடத்தில் உள் ளது.

Comments