அமெரிக்காவில் 3 இடங்களில் துப்பாக்கிச் சூடு- 8 பேர் பலி

அட்லாண்டா, மார்ச் 18- அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் மூன்று இடங்களில் நடந்த துப்பாக்கி சூட்டில் 8 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவங்கள் அனைத்தும் மசாஜ் பார்லர்களில் (ஸ்பா) நடந்துள்ளது.

ஜார்ஜியாவின் தலைநகர் அட்லாண்டா புறநகர் பகுதி யான அக்வொர்த் என்ற இடத்தில் யங்ஸ் ஆசியன் மசாஜ் என்ற பார்லருக்குள் புகுந்த அடையாளம் தெரியாத வாலிபர் ஒருவர் துப்பாக் கியால் சுட்டார். இதனால் அங்கிருந்த பெண்கள் அலறிய டித்து ஓடினார்கள். இந்த துப்பாக்கி சூட்டில் 3 பெண்கள் சம்பவ இடத்தி லேயே உயிரிழந்தனர். பின்னர் அப்பகுதியில் உள்ள மற் றொரு மசாஜ் பார்லரில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலியானார்.

காற்று மாசுபாட்டை கண்டுபிடிக்க உதவும்

புதிய செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படுகிறது

துபாய், மார்ச் 18- துபாய் மாநகராட்சி சுற்றுச்சூழல் துறையின் இயக்குநர் அலியா அல் ஹர்மூதி கூறியதாவது:-

அமீரகத்தின் காற்று மாசுபாடு தொடர்பாக அளவீடு செய்யும் வகையில்டிஎம்சாட் 1’ என்ற புதிய செயற்கைக் கோள் உருவாக்கப்பட்டு உள்ளது. முகம்மது பின் ராஷித் விண்வெளி ஆய்வு மய்யம் மற்றும் துபாய் மாநகராட்சி ஒத்துழைப்புடன் இந்த திட்டப்பணி மேற்கொள்ளப்பட்டு வந்தது.

இந்த செயற்கைக்கோள் வருகிற 20ஆம் தேதி அமீரக நேரப்படி காலை 10.07 மணிக்கு கஜகஸ்தான் நாட்டில் உள்ள விண்வெளி மய்யத்தில் இருந்து ஏவப்படுகிறது. 15 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைக்கோள் டொரண்டோ பல்கலைக்கழகத்தின் விண்வெளி ஆய்வகத்தில் உருவாக் கப்பட்டது. இந்த செயற்கைக்கோள் மூலம் கிடைக்கும் தகவல்கள் அமீரக சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாறு பாடு அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்படும் என்றார்.

Comments
Popular posts
நெடுஞ்சாலை இணைய தளத்தில் சென்னை - அண்ணாசாலை - காமராஜர் சாலை பெயர்களும் மாற்றப்பட்ட கொடுமை! நமது வன்மையான கண்டனம்!
Image
சாரைசாரையாக புறப்படும் தொழிலாளர்கள் பல்வேறு தொழில்கள் முடங்கும் அபாயம்
Image
‘இந்து மதம்' என்ற ஆரிய - சனாதன மதத்தின் ஆணிவேரான வருணதர்மத்தை வேரோடும் வேரடி மண்ணோடும் பெயர்த்து எறிவதே புரட்சியாளர் அம்பேத்கருக்கு புகழ்மாலை சூட்டிப் பெருமை சேர்ப்பதாகும்!
Image
கோயிலும், 'தினமணி'யும்!
எங்கும் திருக்குறள் - எதிலும் திருக்குறள் - எல்லோருக்கும் குறள் என்பதை வெறும் முழக்கமாக மட்டுமில்லாமல் உலகத்தினுடைய எல்லா பாகங்களிலும் திருவள்ளுவருடைய திருக்குறள் கருத்துகள் ஒலிக்கட்டும் - அதன்மூலம் மனித குலம் செழிக்கட்டும்!
Image