ஆஸ்திரேலியாவில் 2 முக்கிய அமைச்சர்களின் பதவி பறிப்பு


 சிட்னி, மார்ச் 30- ஆஸ்திரேலிய அமைச்சரவையில் இடம்பெற் றுள்ள பாதுகாப்புத்துறை அமைச் சர் லிண்டா ரெனால்ட்ஸ், அட் டர்னி ஜெனரல் கிறிஸ்டியன் போர்ட்டர் ஆகியோர் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள், அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளன. அவர்க ளுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன. பல்லாயிரக்கணக்கான பெண்கள் வீதிக்கு வந்து போராடியதால் அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், குற்றச்சாட்டில் சிக்கிய 2 அமைச்சர்களையும் அமைச்சரவையில் இருந்து நீக்கி பிரதமர் ஸ்காட் மாரிசன் உத்தரவிட்டுள்ளார். உள்துறை அமைச்சர் பீட்டர் தட்டனுக்கு பாதுகாப்புத் துறை கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்து.

அமைச்சரவை மறுசீரமைப்பின்போது பெண்களுக்கான தொடர்ச்சியான பதவி உயர்வுகளையும் பிரதமர் அறிவித்தார். ஆஸ்திரேலிய அமைச்சரவையில் இதுவரை இல்லாத அளவுக்கு பெண்களுக்கு அதிக பிரதிநிதித்துவம் கொடுக்கப்பட்டிருப்ப தாகவும் அவர் கூறினார்.

கரோனா பற்றிய தவறான தகவல் பரப்பிய வெனிசுலா அதிபரின் முகநூல் கணக்கு முடக்கம்

கராக்கஸ், மார்ச் 30- தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் இதுவரை 1 லட்சத்து 55 ஆயிரத்துக் கும் மேற்பட்டோருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது. 1,500-க்கும் அதிகமா னோர் உயிரிழந்துள்ளனர்.

அங்கு வைரஸ் பரவலை முழு மையாக கட்டுப்படுத்தும் நோக்கில் ரஷ்யாவின் ஸ்புட்னிக் தடுப்பூசி மக்களுக்கு செலுத்தப்பட்டு வரு கிறது.

இந்த நிலையில் அந்த நாட்டின் அதிபர் நிகோலஸ் மதுரோ துளசி செடியில் இருந்து தயாரிக்கப்படும் வாய்வழியாக உட் கொள்ளும் மருந்து ஒன்று  கரோனாவை அழிக்கும் என்று தனது முகநூல் பக்கத்தில் காணொலிப் பதிவு ஒன்றை வெளியிட்டார்.

எனினும் அவர் இதற்கு மருத்துவ ரீதியான எந்த ஆதாரங் களையும் வழங்கவில்லை.

இதையடுத்து கரோனா வைரஸ் குறித்து தவறான தகவல் பரப்பியதாக கூறி முகநூல் நிறுவனம் அதிபர் நிகோலஸ் மதுரோ கணக்கை முடக்கியது.

Comments