பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் வேந்தர் டாக்டர் கி.வீரமணி தலைமையில் நடைபெற்ற 28ஆம் பட்டமளிப்பு விழா

 பேராசிரியர் சோனாஜரியா மின்ஸ் பங்கேற்று பட்டமளிப்பு விழா சிறப்புரையாற்றினார்

வல்லம், மார்ச் 15  கல்விப் பணியில் 33 ஆண்டுகளை நிறைவு செய்து, இந்தியாவின் தலைசிறந்த  முதன்மைப் பல்கலைக்கழக விருது பெற்றும்,  அதனைத் தொடர்ந்து முற்றிலும் மாணவியர்களால் தயாரிக்கப்பட்ட "மணியம்மையார் சாட்" எனும் செயற்கைக் கோளினை  விண்ணில் செலுத்தி சாதனை படைத்து  "ஆசியன் புக் ஆஃப் ரெக்கார்டு" சாதனைப் பட்டியலில் இடம்பெற்றுள்ள பெருமைக்குரிய மக்கள் பல்கலைக்கழகமாம்  பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவன நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 28ஆம் பட்டமளிப்பு விழா 14.03.2021 அன்று காலை 10.30  மணிக்கு பல் கலைக்கழக பல்நோக்கு உள்விளை யாட்டு அரங்கில் நடைபெற்றது.

சிறப்பு வாய்ந்த இந்நிகழ்ச்சிக்கு பல்கலைக்கழகத்தின் வணக்கத்திற் குரிய வேந்தர் டாக்டர் கி.வீரமணி அவர்கள் தலைமை வகித்தார். தொடக்கத்தில் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் செ. வேலுசாமி  வரவேற்புரை யாற்றி னார். அதில் அவர் குறிப்பிட்ட தாவது:

துணைவேந்தர் உரை

எங்களை வழிநடத்தும் பல் கலைக்கழக நிறுவனர் மற்றும் வேந்தர் அவர்களின் தொலை நோக்கு சமூக மேம்பாட்டுச் சிந்த னையின் காரணமாக இப்பல்கலைக் கழகம்  வளர்ந்தோங்கி சிறந்து விளங்குவதுடன், 28-ஆம் பட்ட மளிப்பு விழாவும் இன்று நடை பெறுவதும் சிறப்புக்குரியதாகும். சமீபத்தில் மராட்டிய அறக்கட்ட ளையின் நரேந்திர தபோல்கர் விருது  2021 நமது வேந்தருக்கு வழங்கப்பட்டுள்ளது என்ற மகிழ்ச்சி யான செய்தியினை இங்கே குறிப் பிடுவதுடன், அவர்களுக்கு நம் அனைவரின் சார்பாக வாழ்த்துக் களையும் தெரிவித்துக்கொள் கிறோம்.

பெருந்தொற்று நோயான கோவிட் -19 காலத்திலும் வேந்தர் அவர்கள் சமூக அக்கறையுடன் 100 சதவிகிதம் கல்வி உதவித்தொகையை அறிவித்து மாணவர்களின் உயர் கல்விக்கு உதவினார். இன்றைய சிறப்பு விருந்தினராக வருகை தந்துள்ள ஜார்க்கண்ட் மாநில முருமு பல்கலைக்கழகத்தின் முதல் பெண் துணைவேந்தர் சோனா ஜரியா மின்ஸ்  அவர்கள் பழங்குடியினர் வகுப்பை சார்ந்த  சுதந்திர போராட்ட வீரரான நிமில் மின்ஸ் அவர்களின் மகளாவார் என்பது சிறப்புக்குரிய ஒன்றாகும். நமது பல்கலைக்கழகமானது மத்திய கல்வி அமைச்சகத்திலிருந்து அய்ந்து நட்சத்திர தர விருதும், இந்தியாவின் சிறந்த 100 நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களில் 71 ஆவது இடத்தையும், இந்தியா டுடே பத்திரிகை நடத்திய சிறந்த 20 கட்டடக்கலை நிறுவனங் களில் ஒன்றாகவும் இடம் பெற்றுள் ளது. இவ்வாண்டு நடத்திய வளாக நேர்காணலில் 663 மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு பெற்றுத் தரப் பட்டுள்ளது. மேலும் திறமையான 872 மாணவர்களுக்கு இக்கல்வி யாண்டில்  நிர்வாகக் கல்வி உதவித் தொகையாக ரூபாய் 1,94,10,500/- வழங்கப்பட்டது. இவைஇப்பல் கலைக்கழகத்தின் சாதனைகளில் சில எனப் பட்டியலிட்டு அனை வரையும் வரவேற்றுப் பேசினார்.

வேந்தர் உரை

பெரியார் மணியம்மை நிகர் நிலை பல்கலைக்கழகத்தில் நடை பெற்ற 28- ஆம் பட்டமளிப்பு விழா வில் பங்கேற்ற சிறப்பு விருந்தினருக்கு நினைவு பரிசு வழங்கி பல்கலைக்கழக வேந்தர் டாக்டர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய தலைமை உரை:

நம் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவுக்கு சிறப்பு விருந்தினராக வருகைதந்துள்ள பேராசிரியர் டாக்டர்.சோனாஜரியா மின்ஸ் அவர்கள் ஒரு முன்மாதிரியான ஆளுமை ஆவார். சமூக பொருளா தார, கல்வி ரீதியாக பின் தங்கிய சமூகச்சூழலில் பிறந்து, கல்வி பயின்று சிறந்த கல்வியாளராக, புரட்சிகரமான சிந்தனை கொண்ட பெண்ணாக தன்னை தகவமைத்துக் கொண்டு சீரிய சிந்தனையாளராக பரிணமித்திருக்கிறார். இவர்தான் உண்மையான சமூகநீதிகக்கான எடுத்துக்காட்டாகும். சமூகரீதி யான நெருக்கடிகள், இன்னல்கள், சங்கடங்களை எதிர்கொண்டு வெற்றிகரமாக கல்வித்துறையின் மிக உயர்ந்த பொறுப்பான துணை வேந்தர் பொறுப்புக்கு உயர்ந்திருக் கிறார். இவர் சமூகத்தில் மேல்தட்டு சமூகத்தின் அழுத்தங்களை துணிச் சலாக எதிர்கொண்டு, வெற்றியின் அடையாளமாக முன்னேறியிருக் கிறார்.

சமூக நீதி மண்ணுக்கு வரவேற்கிறோம்

கடந்த ஆண்டு ஜுன் மாதம் வெளியான தி மாடர்ன் ரேஷன லிஸ்ட் ஆங்கில இதழில் அவரை பற்றிய முழுமையான விவரங்களை வெளியிட்டு, பாராட்டி பெருமைப் படுத்தியிருக்கிறோம். உங்களை பெரியாரின் சமூகநீதி மண்ணுக்கு வரவேற்கிறோம். சமூகத்தில் ஒடுக் கப்பட்ட, அழுத்தப்பட்ட, பழங்குடியினர் சமூகத்தில் இருந்து மகளிர் மறுமலர்ச்சிக்கான குறி யீடாக உயர்ந்திருக்கும் குறிப்பாக இளம் தலைமுறையினருக்கான உந்துசக்தியாக பேராசிரியர் மின்ஸ் அவர்களின் பயணம், ரோஜா மலர்களின் மெத்தையாக இருக்க வில்லை. ஜார்க்கண்ட் மாநிலத்தின் ராஞ்சி நகரில் அவர் பள்ளிபடிப்பை படித்தபோது, ஆணவம் கொண்ட உயர்ஜாதி ஆசிரியர்களின் ஜாதியரீதியான பாகுபடுகளுக்கு உள்ளா னார்.

இது குறித்து விவரிக்கும் பேராசி ரியர் மின்ஸ் அவர்கள், ஆரியர்களின் மொழியான சமஸ்கிருதத்தை தன் னால் எப்படி சிறப்பாக படிக்க முடிந்தது என்று வினவினராம். அதற்கு பதிலளித்த பேராசிரியர் மின்ஸ், இதற்கு நான் ஏன் விதிவிலக்காக இருக்கக்கூடாது? என்று கூறியிருக்கிறார். அதேபோன்று, கணிதப் பாடத்தில் மூன்று முறை 100க்கு 100 மதிப்பெண் பெற்றிருந்த போதும், உயர் படிப்பில் கணிதப் பாடத்திற்கு பதிலாக உயிரியல் பாடம் எடுத்து படிக்குமாறு அவரது ஆசிரியர் அறிவுறுத்தியிருக்கிறார். அவரது திறமையை ஊக்குவிக்காமல் புறந்தள்ளிய நிலையில், கடினமான உழைப்பால் முன்னேறி இளம் தலைமுறையின் அடையாளச் சின்னமாக உயர்ந்திருக்கிறார். இப்படி உயர்ஜாதி ஆசிரியர்களால் புறந்தள்ளப்பட்ட பேராசிரியர் மின்ஸ், இந்த தடைகளை எல்லாம் உடைத்தெறிந்து முன்னேறியிருக் கிறார். விடாமுயற்சியால் உயர்ந்த அப்படிப்பட்ட பேராளுமையை தான் நமது பல்கலைக்கழகத்தின் சிறப்பு வாய்ந்த பட்டமளிப்பு விழாவிற்கு அழைத்திருக்கிறோம்.

பெரியார் எனும்

தத்துவம்தான் சரியான வழியாகும்

டில்லியில் ஜவகர்லால்நேரு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றியபோது, அப்பல்கலைக் கழக ஆசிரியர்கள் சங்கத்தின் தலை வராகவும் இருந்திருக்கிறார். அந்த காலகட்டத்தில், பேராசிரியர் மின்ஸ் அவர்கள் பல்வேறு நெருக் கடிகளுக்கு ஆளாகியுள்ளார். தன்னை மட்டும் ஏன் குறிவைத்து அழுத்தங்களுக்கு ஆளாக்கு கிறார்கள் என்று பேராசிரியர் மின்ஸ் வேதனைப்பட்டிருக்கிறார். அந்த நெருக்கடிகளால் வேலையை துறந்த பேராசிரியர் மின்ஸ், தமிழ கத்தில் உள்ள புகழ்வாய்ந்த மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பணியில் சேர்ந்துள்ளார். ஜவகர் லால்நேரு பல்கலைக்கழகத்தில் நேர்ந்த நெருக்கடிகள், அவரை பெரியாரின் சமூகநீதி மண்ணுக்கு அனுப்பி வைத்துள்ளது. பெரியார் எனும் தத்துவம்தான் சரியான வழியாகும். இந்த மண்ணில்தான் எல்லா சாலைகளும், எல்லா பாதைகளும், எல்லா இயல்களும் பெரியார் தத்துவத்தை நோக்கி பயணிக்கின்றன. பெரியார் உடலால் மறைந்தாலும், அவரது தத்துவங்கள் இன்றைக்கும் பலரை குலைநடுங்கச் செய்துகொண்டுள்ளன.

ஒரு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் என்பதால் உங் களைப் பாராட்டிக் கவுரவிக்க வில்லை. மாறாக, வாழ்க்கையில் பல கடினமான போராட்டங்களைத் துணிவுடன் எதிர்கொண்டு வெற்றி மங்கையாக உயர்ந்திருப்பதால் உங்களை பாராட்டி மகிழ்கின்

றோம்.

பிறப்பால் ஜார்க்கண்டை சேர்ந் தவராக இருந்தாலும், உங்களை தமிழகத்தின் பெண்ணாகவே கருதி, ஜாதியில்லாத, சமத்துவ சிந்தனை கொண்ட தமிழகத்திற்கு பெருமை யோடு வரவேற்கிறோம் என்று சிறப்புவாய்ந்த தலைமை உரையை ஆற்றி, சிறப்பு விருந்தினருக்கு பயனாடை அணிவித்து, பெரியார் நூல்களின் தொகுப்பை அன்பளிப் பாக வழங்கி, நினைவுக் கேடயம் அளித்து பாராட்டி சிறப்பு செய்து, அவரை பட்டமளிப்பு விழா பேருரை நிகழ்த்துமாறு அழைப்பு விடுத்தார். 

துணைவேந்தர்

சோனாஜரியா மின்ஸ் உரை

அதனைத் தொடர்ந்து சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, அகில இந்திய அளவில் ஆதிவாசிப்  பழங்குடியின மக்களுக்கான சமூகப் போராளியும் பழங்குடியினர் வகுப்பி லிருந்து கல்விப்பணியில் துணை வேந்தர் நிலைக்கு உயர்ந்து திறம்படப் பணியாற்றுபவருமான ஜார்க்கண்ட் மாநிலத்தின் எஸ்.கே. எம். பல்கலைக் கழகத்தின் மாண் பமை துணைவேந்தர் பேராசிரியர் சோனாஜரியா மின்ஸ் அவர்கள் பட்டமளிப்பு விழாச் சிறப்புரை நிகழ்த்தினார்.

அவர்தம் சிறப்புரையில் குறிப் பிட்டதாவது:

அறிவார்ந்த இந்த நிறுவனத்தில் பட்டம் பெறுவது உங்கள் வாழ்க் கையின் ஒரு முக்கியமான பகுதி யாகும். ஏனெனில் சிறந்த முன் னோடியும், அறிவார்ந்த சிந்தனையா ளரும், சமூக சீர்திருத்தவாதியுமான பெரியார் மற்றும் அவர்தம் வாழ்வின் தொண்டின் கூட்டுப் பணியாளரு மான மணியம்மையார் ஆகியோரின் பெயரில் அமைந்துள்ள இந்த நிறு வனத்தில் நடை பெறும் பட்டமளிப்பு விழாவில் நானும் பங்கேற்றது என்பது எனக்கு மிகப்பெரிய வாய்ப்பாகும்.

இப்பல் கலைக்கழகமானது ஒரு தத்து வார்த்தக் கொள்கையின் அடிப் படையில் நிறுவப்பட்டுள்ளது.

எனவே அவற்றை நடைமுறைப் படுத்த மாணவர்களாகிய நீங்கள் ஒவ்வொரு வரும் முன்னோடியாக இருக்கவேண்டும் என வலியுறுத் தினார்.

உண்மையான சமூக நீதி

பெண் விடுதலைக்கு வித்திட்ட தோடு பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதனையும் கொள்கையாகக் கொண்டு 1988-ஆம் ஆண்டில் பெண் களுக்கான உலகின் முதன்மையான ஒரு பொறியியல் உயர்கல்வி நிறுவன மாக இக்கல்லூரி தொடங்கப்பட் டுள்ளது. இந்நிறுவனத்தின் முன் னாள் மாணவர்கள் பலர் உல கெங்கும் பல பகுதிகளில், பல்வேறு முதன்மை நிறுவனங்களில் திறம்பட பணியாற்றி வருவது என்பதும் எம்மை மகிழச்செய்கிறது. 2007-இல் இந்நிறுவனம் பல்கலைக்கழகமாக தரம் உயர்த்தப்பட்டது.

இங்கு பயிலும் பெரும்பாலான மாணவர்கள் கல்வி வாய்ப்பு மறுக் கப்பட்ட கிராமப்புறப் பகுதி களைச் சேர்ந்தவர்கள். அத்தகைய மாண வர்கள் இங்கு பல்வேறு துறைகளில் உயர் கல்விப் பெற்றிட வாய்ப்பளிக் கப்படுகிறது என்பது தான் பெரியார் எண்ணிய உண்மை யான சமூக நீதியை வழங்குவதாகும்.

தமது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்

இந்த அற்புதமான நிறுவனத்தில் பணியாற்றும் அறிவார்ந்த  ஆசிரி யர்களும் மற்றும் அதிநவீன கற்பித் தல் வசதிகளும் உங்கள் திறனை மேம்படுத்துவதோடு உங்கள் வாழ்வில் பல்வேறு சவால்களை எதிர்கொள்ள, சுயமரியாதை, பாலின சமத்துவம் மற்றும் கண் ணியம் போன்ற நெறிமுறைகனைக் கற்றுக்கொள்வதும் உங்களுக்கு கூடுதலான சிறப்பாகும். உங்களைப் போன்ற இளைஞர்களும், ஆர்வலர் களும் இன்று சமூகத்திற்கு பெரிதும் தேவை. நீங்கள் அனைவரும் வாழ்க் கையில் செய்யவேண்டிய சில காரியங்களை கட்டாயம் செய்ய வேண்டும். அதேநேரத்தில் மாணவர் களாகிய நீங்கள் சில நேரத்தில் செய்யக்கூடாதவற்றையும் கட்டாயம் தவிர்க்கவும். இவை தான் உங்களால் உங்கள் நிறுவனத்திற்கு பெருமை சேர்க்கும் என்று கூறி நிறைவாக பட்டம் பெறும் மாணவர்கள் அனைவருக்கும் தமது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டார். 

பட்ட மளிப்பு விழாப் பேருரையினைத் தொடர்ந்து கட்டட எழிற் கலை, பொறியியல் தொழில்நுட்பம், கணினி அறிவியல் பொறியியல், கலை-அறிவியல் மற்றும் மேலாண் மைப் புலங்களின்   பல்வேறு துறைகளைச் சார்ந்த மொத்தம் 1172 மாணவர்களுக்கு (இதில் 748 மாணவர்கள், 424 மாணவியர்கள் என்பது உள்ளடக்கம்)  பட்டம் அளிக்கப்பட்டது. விழா மேடையில் பல்கலைக்கழக  வேந்தர் டாக்டர் கி.வீரமணி அவர்கள் 26 மாணவர் களுக்கு முனைவர் பட்டமும், 6 மாணவர்களுக்கு ஆய்வு நிறைஞர் பட்டமும், இவ்வாண்டில் தரவரி சையில் தகுதிபெற்றுள்ள 72 பட்ட தாரிகளுக்கு 24 தங்கப் பதக்கமும், 21 வெள்ளிப் பதக்கமும், 19 வெண்கலப் பதக்கமும் வழங்கி சிறப்பித்ததோடு தமது வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டார்.

பேராசிரியர் நல்.இராமச்சந்திரன் வளாகம்

முத்தாய்ப்பாக பட்டமளிப்பு விழா நிகழ்ச்சியின் முடிவில் பல்கலைக் கழக வேந்தர் டாக்டர் கி.வீரமணி அவர்கள் ஒரு அறிவிப்பினையும் குறிப்பிடத் தவற வில்லை. அது யாதெனில் : கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு மறை வுற்ற இப்பல்கலைக்கழக வளர்ச் சிக்கு பெரிதும் காரணமான மேனாள் துணைவேந்தர் பேராசி ரியர் நல்.இராமச்சந்திரன் அவர் களின் புகழை நிரந்தரமாக பல் கலைக்கழகத்தில் நினைவு கூரும் விதமாக இப்பல்கலைக்கழகத்தில் இயங்கி வரும் கட்டட எழிற்கலைப் புல வளாகத்திற்கு பேராசிரியர் நல்.இராமச்சந்திரன் வளாகம் எனப் பெயர் சூட்டப்படும் என்று அறிவித்து விழாவினை நிறைவு

செய்தார்.

சிறப்பு வாய்ந்த இப்பட்டமளிப்பு விழாவில் ஆட்சிமன்றக் குழு உறுப் பினர்கள் வீ.அன்புராஜ், இந்திய தொழில்நுட்பக் கழகப் பேராசிரியர் எஸ்.மோகன், பாரதிதாசன் பல் கலைக்கழக மேனாள் துணைவேந்தர் பேராசிரியர்பெ.ஜெகதீசன், தமிழகக் காவல்துறை மேனாள் இயக்குநர் .எக்ஸ். அலெக்சாண் டர் (.கா.. ) மற்றும் சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர் முரளிகுமரன் ஆகியோர் முன்னிலை வகித்துச் சிறப்பித்தனர்.

மேலும் பல்கலைக்கழக கல்விப் பெருமன்ற உறுப்பினர் டாக்டர் எம்..சிக்கந்தர், இணை துணை வேந்தர் மற்றும் பதிவாளர் (பொறுப்பு) பேராசிரியர் எஸ்.தேவ தாஸ், தேர்வுக் கட்டுப்பாட்டு நெறி யாளர் பேராசிரியர்  சு.அசோகன் உள்ளிட்ட அனைத்துப்  புல முதன் மையர்கள், மய்ய இயக்குநர்கள், துறைத் தலைவர்கள், பேராசிரி யர் கள்,  பணியாளர்கள் மற்றும் பெருமள வில் பெற்றோர்களும், மாணவர்

களும் பங்கேற்று விழா வைச் சிறப்பித்தனர்.

Comments