பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக் கழகத்தின் வேந்தர் டாக்டர் கி. வீரமணி தலைமையில் நடைபெற்ற 28ஆம் பட்டமளிப்பு விழா

பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் இன்று (14.3.2021) நடைபெற்ற 28-ஆம் பட்டமளிப்பு விழாவிற்கு பல்கலைக்கழக  வேந்தர் டாக்டர் கி.வீரமணி தலைமை வகித்தார். கட்டட எழிற்கலை, பொறியியல் தொழில்நுட்பம், கணினி அறிவியல் பொறியியல், கலை-அறிவியல் மற்றும் மேலாண்மைப் புலங்களின்  பல்வேறு துறைகளைச் சார்ந்த மொத்தம் 1172 மாணவர்களுக்கு (இதில் 748 மாணவர்கள், 424 மாணவியர்கள்)   பட்டம் அளிக்கப்பட்டது. விழா மேடையில் பல்கலைக்கழக  வேந்தர் அவர்கள் 26 மாணவர்களுக்கு முனைவர் பட்டமும், 6 மாணவர்களுக்கு ஆய்வு நிறைஞர் பட்டமும், இவ்வாண்டில் தரவரிசையில் தகுதி பெற்றுள்ள 72 பட்டதாரிகளுக்கு 24 தங்கப் பதக்கமும், 21 வெள்ளிப் பதக்கமும், 19 வெண்கலப் பதக்கமும் வழங்கினார்.

சிறப்பு விருந்தினரான ஜார்க்கண்ட் மாநிலத்தின் எஸ்.கே.எம். பல்கலைக்கழகத்தின் மாண்பமை துணைவேந்தர் பேராசிரியர் சோனாஜரியா மின்ஸ் அவர்கள் பட்டமளிப்பு விழாச் சிறப்புரை நிகழ்த்தினார். ஆட்சிமன்றக் குழு உறுப்பினர்கள் வீ.அன்புராஜ், இந்திய தொழில்நுட்பக் கழகப் பேராசிரியர் எஸ்.மோகன், பாரதிதாசன் பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர் பேராசிரியர் பெ.ஜெகதீசன், தமிழகக் காவல்துறை மேனாள் இயக்குநர்   .எக்ஸ். அலெக்சாண்டர் (.கா..) மற்றும் சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர்  முரளிகுமரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வரவேற்புரையாற்றிய பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் செ.வேலுசாமி,   பல்கலைக்கழக கல்விப் பெருமன்ற உறுப்பினர் டாக்டர் எம்..சிக்கந்தர், இணை துணைவேந்தர் மற்றும் பதிவாளர் (பொறுப்பு) பேராசிரியர் எஸ்.தேவதாஸ், தேர்வுக் கட்டுப்பாட்டு நெறியாளர் பேராசிரியர்  சு.அசோகன் ஆகியோர் உள்ளனர்.  (14.03.2021  - வல்லம்).

Comments
Popular posts
நெடுஞ்சாலை இணைய தளத்தில் சென்னை - அண்ணாசாலை - காமராஜர் சாலை பெயர்களும் மாற்றப்பட்ட கொடுமை! நமது வன்மையான கண்டனம்!
Image
சாரைசாரையாக புறப்படும் தொழிலாளர்கள் பல்வேறு தொழில்கள் முடங்கும் அபாயம்
Image
‘இந்து மதம்' என்ற ஆரிய - சனாதன மதத்தின் ஆணிவேரான வருணதர்மத்தை வேரோடும் வேரடி மண்ணோடும் பெயர்த்து எறிவதே புரட்சியாளர் அம்பேத்கருக்கு புகழ்மாலை சூட்டிப் பெருமை சேர்ப்பதாகும்!
Image
மகாராட்டிராவைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் ஊரடங்கா? - சுகாதாரத் துறைச் செயலாளர் பதில்
Image
பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலையின் பெயரை மாற்றுவதா? அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம்
Image