பெரியார் கேட்கும் கேள்வி! (264)

மலம் எடுப்பவன் இல்லாவிட்டால் ஊர் நாறிவிடும். துணி வெளுப்பவன் இல்லாவிட்டால் சுத்தமான துணி கட்ட முடியாது. சிரைப்பவன் இல்லாவிட்டால் முகம் தெரியாது. வீடு கட்டுபவன் இல்லாவிட்டால் குடியிருக்க வீடு இருக்காது. நெசவாளி இல்லாவிட்டால் நிர்வாணம் தான். குடியானவன் இல்லாவிட்டால் மக்கள் பட்டினி கிடக்க வேண்டும். இந்த இன்றியமையாத தொழிலாளிகள் இழி ஜாதிகளாம்; நாட்டுக்குப் பயனற்ற பார்ப்பான் மேல் ஜாதியாம்; இது நியாயந்தானா?

- தந்தை பெரியார், “பெரியார் கணினி, தொகுதி - 1

மணியோசை

Comments