கூட்டணியில் எங்களுக்கு இடமில்லை என்று பேசுவோரே - 234 தொகுதிகளிலும் எங்கள் கொள்கைதான் வெற்றி பெறும் - இது பெரியார் மண்!

தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் தமிழர் தலைவர் எழுச்சியுரை

 நமது சிறப்புச் செய்தியாளர்

சென்னை மார்ச் 20- கூட்டணியில் எங்களுக்கு இடமில்லை என்று பேசுவோரே - 234 தொகுதிகளிலும் எங்கள் கொள்கைதான் வெற்றி பெறும் - இது பெரியார் மண் என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி.

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி  வேட்பாளர்களை ஆதரித்து பேராவூரணி, பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு தொகுதி களில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார் திராவிடர் கழகத் தலைவர். அதன் விவரம் வருமாறு:

பேராவூரணி

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் பேராவூரணி தொகுதி தி.மு..வேட்பாளர் அசோக்குமார் அவர்களை ஆதரித்து  நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் வை.சிதம்பரம் தலைமை வகித்தார்.

தஞ்சை தெற்கு மாவட்ட தி.மு..செயலாளர் ஏனாதி பாலசுப்பிரமணியம்,  தி.மு..பேராவூரணி ஒன்றிய பொறுப் பாளர் அன்பழகன், சேது ஒன்றிய பெருந்தலைவர் முத்து மாணிக்கம்

தெற்கு ஒன்றிய பொறுப்பாளர் ரவிச்சந்திரன், வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் இளங்கோ, நகர செயலாளர் தனம் நீலகண்டன், முன்னாள் ஒன்றிய செயலாளர் சேகர், மேனாள் ஒன்றிய பெருந்தலைவர் ராசரெத்தினம், .தே.காங். மாநில துணை தலைவர் இராசாத்தம்பி, கழக பொதுக்குழு உறுப்பினர் நல்லதம்பி, மேனாள் சட்டமன்ற உறுப்பினர் சிங்காரம், ஒன்றிய கவுன்சிலர் அருள்நம்பி, வி.சி..மாநில துணை தலைவர் குணவழகன், சி.பி.அய் விவசாய சங்க மாவட்ட செயலாளர் பாலசுந்தரம், .தி.மு. ஒன்றிய செயலாளர் பாலசுப்பிரமணியம், சி.பி.எம். மாவட்ட குழு உறுப்பினர் கருப்பையன், .யூ.மு.லீக் ஒன்றிய தலைவர் சம்சுதீன், .வா. மாவட்ட தலைவர் பசீர் அகமது, ..கட்சி மாவட்ட பொறுப்பாளர் அப்துல் சலாம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கழக சொற்பொழிவாளர் அதிரடி அன்பழகன்,  கழக பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் உரையாற்றிய பின் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பேசினார்.

அவர் தனது உரையில்,

பேராவூரணி எனக்கு சொந்த பாசறை போல. மக்கள் முடிவு செய்து விட்டார்கள் தமிழகம் முழுக்க ஒரு பெரிய அலை அடித்து வருகிறது. மீண்டும் நான் வெற்றி விழாவிற்கு இங்கே வருவேன்.

உங்கள் உறுதியை எங்களுக்கு சொல்வதற்காக கூடியிருக்கிறீர்கள்.

மற்ற வேட்பாளர்கள் எல்லாம் ஒரே டிராமா கம்பெனிதான். வடக்கே உள்ளவர்கள் .தி.மு..விற்கு எஜமானர்கள். இந்த வெற்றியை எப்படியாவது சிதைக்கலாமா என்று பார்க்கிறார்கள். தி.மு. ஆட்சி அமைப்பதை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது.

வடக்கே இருந்து வரும் தொற்றுகள் ஒரு நாளும் திராவிடத்தை தாக்க முடியாது.

இந்த கூட்டணி தேர்தலுக்காக உருவானதல்ல. சமுதாய நலனுக்காக உருவான கூட்டணி. எங்கள் தொண்டர்கள் துறவிக்கு மேலானவர்கள் என்று பெரியார் சொன்னார். அப்படிப்பட்ட நாங்கள் ஏன் இப்படி நாடெங்கும் சுற்றி வருகிறோம் என்றால் நீங்கள் ஏமாந்து விட கூடாது என்பதற்காகத்தான். எனவே உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டுகிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

பரப்புரை கூட்டத்தில் தி.மு..மாவட்ட துணை செயலாளர் செல்வராஜ், புதுகை மண்டல தலைவர் பெ.ராவணன்,  தி.வி..மாவட்ட அமைப்பாளர் நீலகண்டன், பேராவூரணி ஒன்றிய தலைவர் தமிழ்செல்வன், ஒன்றிய செயலாளர் மணிகண்டன்,  சேது ஒன்றிய தலைவர் செகநாதன், ஒன்றிய செயலாளர் மூர்த்தி, நகர தலைவர் அரங்கசாமி, நகர் செயலாளர் சந்திரமோகன், மாவட்ட இளைஞரணி பாலசுப்பிரமணியம், கதிர்வேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் பேராவூரணி ஒன்றிய செயலாளர் மணிகண்டன் நன்றி கூறினார்.

திராவிடர் கழக பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார், மாநில அமைப்பாளர் இரா.குணசேகரன், ஒருங்கிணைப்பாளர் பேரா..சுப்பிரமணியம், மாநில மாணவர் கழக செயலாளர் .பிரின்ஸ் என்னாரெசு பெரியார், மாநில மாணவர் கழக அமைப்பாளர் இரா.செந்தூரபாண்டி, தி.என்னாரெசு பிராட்லா உள்ளிட்ட தோழர்கள் பயணத்தில் பங்கேற்றனர்.

பட்டுக்கோட்டை

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் பட்டுக்கோட்டை தொகுதி தி.மு..வேட்பாளர் அண்ணாத்துரையை ஆதரித்து  நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் பெ.வீரையன் தலைமை தாங்கினார். முத்து துரைராஜ் வரவேற்புரையாற்றினார்.

மாவட்ட செயலாளர் வைசிதம்பரம், மாவட்ட துணைத் தலைவர் சின்னக்கண்ணு, பொதுக்குழு உறுப்பினர்கள் அரு.நல்லதம்பி,இரா.நீலகண்டன், மாவட்ட வழக்குரைஞர்  அணி அமைப்பாளர் அண்ணாத்துரை, மாவட்ட ..தலைவர் ரத்தினசபாபதி, ஒன்றிய துணைத்தலைவர் காளிதாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தனது உரையில்,

பட்டுக்கோட்டை மண் சுயமரியாதை இயக்கத்தை வளர்த்தெடுத்த மண். அஞ்சாநெஞ்சன் அழகிரி பிறந்த மண்ணில் உங்களை சந்திக்க வந்திருக்கிறோம். அப்படிப்பட்ட மண்ணில் ஒரு பகுத்தறிவாளர் பண்பாளர், சிறந்த செயல்வீரர் வேட்பாளராக நிறுத்தப்பட்டு இருக்கிறார். இவரை போன்றவர்கள் எம்.எல்..வாக சென்று தளபதி அவர்களை முதல்வராக அமர்த்த வேண்டும்.

ஒவ்வொரு நாளும் தேள் கொட்டுவது போல பாம்பு கடிப்பது போல நஞ்சை கக்கி வருகிறார்கள். கூட்டணியில் எங்களுக்கு இடமில்லை என்று பேசுவோர்களே ஒன்றை தெரிந்து கொள்ளுங்கள் 234 இடங்களும் நாங்கள் தான்.காரணம் இது பெரியார் மண்.

இந்த ஊரை சேர்ந்த மாணவி வைசியா என்பவர் நீட் தேர்வின் கொடுமையினால் தற்கொலை செய்து கொண்டாரே! மறக்க முடியுமா? ஓட்டுச்சாவடிக்கு போகும்போது மாணவி வைசியாவின் நினைவு வரவேண்டும்.

.தி.மு‌.. தோழர்களே உங்கள் தலைவர்கள் யாரேனும் அமித்ஷா பேசியதை கண்டித்து கேட்டிருப்பார்களா?

நாங்கள் ஆட்சியமைப்போம் என்று சொன்ன அமித்ஷாவை பார்த்து கேட்டிருக்க வேண்டாமா? இப்படிப்பட்ட அடிமை ஆட்சியை அகற்றிட உதயசூரியன் சின்னத்தில் வாக்களியுங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் தி.மு..மாவட்ட செயலாளர் ஏனாதி பாலசுப்பிரமணியம், மதுக்கூர் ஊராட்சி மன்ற தலைவர் நாராயணன், பட்டுக்கோட்டை நகர் தி.மு..செயலாளர் செந்தில்குமார், சி.பி.அய். மாநிலக்குழு உறுப்பினர் பக்கிரிசாமி, தி.மு.. வடக்கு ஒன்றிய செயலாளர் பார்த்திபன், மதுக்கூர் ஒன்றிய செயலாளர் இளங்கோவன், ஒன்றிய பெருந்தலைவர் பழனிவேல், தெற்கு ஒன்றிய பொறுப்பாளர் சத்தியவிஜயன், மேனாள் அவைத்தலைவர் அப்துல் நமது, .தி.மு.. ஒன்றிய பொறுப்பாளர்கள் நாராயணமூர்த்தி, ராம்குமார், மாவட்ட தி.மு..மகளிரணி அமைப்பாளர் அசோக்ராணி, சி.பி.அய் ஒன்றிய செயலாளர் கந்தசாமி, வி.சி.. நிர்வாகி சக்ரவர்த்தி, ..ஒன்றிய செயலாளர் புலவஞ்சி காமராசு  உள்ளிட்ட தோழர்கள் பங்கேற்றனர்.

முடிவில் பட்டுக்கோட்டை ஒன்றிய கழக செயலாளர் ஏனாதி ரங்கசாமி நன்றி கூறினார்.

ஒரத்தநாடு

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் ஒரத்தநாடு தொகுதி தி.மு..வேட்பாளர் எம்.ராமச்சந்திரனை ஆதரித்து நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்திற்கு ஒன்றிய தலைவர் .ஜெகநாதன் தலைமை தாங்கினார்.

தஞ்சாவூர் மாவட்ட தலைவர் அமர்சிங், மாவட்ட செயலாளர் அருணகிரி, மாவட்ட துணைத் தலைவர் முத்து ராஜேந்திரன், மாவட்ட இணை செயலாளர் ஞான சிகாமணி,  திருவோணம் ஒன்றிய தலைவர் சாமி.அரசிளங்கோ, ஒன்றிய செயலாளர் சில்லத்தூர் சிற்றரசு, நகர் தலைவர் பேபி.ரெ.ரவிச்சந்திரன், நகர் செயலாளர் ரஞ்சித்குமார், கழக பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார், மாநில அமைப்பாளர் இரா.குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முனைவர் அதிரடி அன்பழகன், கழக பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் உரை நிகழ்த்திய பின் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார். அவர் தனது உரையில்,

இதுவரை பல ஊர்களில் மக்களை சந்தித்து வருகிறோம். கடந்த பத்து ஆண்டுகால முதுகெலும்பில்லாத அடிமைச் சாசனம் எழுதி தந்துள்ள ஆட்சி எட்டுக்கால் பூச்சி ஆக்டோபஸ் போன்று மத்திய பா...அரசு கையில் வைத்துள்ளது.

குளிர் தரு நிழல் போல ஒப்பற்ற தலைவராக தளபதி ஸ்டாலின் அவர்கள் திகழ்ந்து வருகிறார். அவரை பயன் படுத்திக் கொள்ள வேண்டும் என்று மக்களுக்கு தெரிந்துள்ளது. ஆனால் அவரை பார்த்து குறிப்புகளோடு பேசுகிறார் என்று கூறியுள்ளார் முதல்வர் பழனிச்சாமி அவர்கள். நீங்கள் குறிப்பில்லாமல் பேசுவதன் போக்கு தெரியாதா? எங்களுக்கு இடங்கள் முக்கியமில்லை.லட்சியங்கள் தான் முக்கியம் என்று கூட்டணி கட்சிகள் தங்களது ஒற்றுமையை காட்டினார்கள். ஆனால் அந்தக் கூட்டணி ஜாதி வெறி, மதவெறி, பணவெறி, பதவி வெறி என்று கூடியுள்ள கூட்டணி.

தளபதி அவர்கள் வேட்பாளரை தேர்வு செய்ததும் அற்புதமான பணியாகும். ராமச்சந்திரன் போன்ற இரும்பு மனிதர்களை தேர்வு செய்திருக்கிறார்.

நோட்டாவோடு போட்டி போடும் பா... நமது நாட்டை ஆளத் துடிக்கிறது. அதிலிருந்து தமிழகத்தை காப்பாற்ற உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெற செய்யுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

மேனாள் ஒன்றிய குழு உறுப்பினர் ஜெயபால், மாவட்ட தி.மு..விவசாய அணி துணை அமைப்பாளர் தியாக.இளங்கோவன், தி.மு..பொறுப்பாளர் நேதாஜி, உரத்தநாடு கிழக்கு ஒன்றிய செயலாளர் கார்த்திகேயன், ஒன்றிய பெருந்தலைவர் பார்வதி சிவசங்கர், நகர் செயலாளர் கிருஷ்ணகுமார், காங்கிரஸ் வட்டார தலைவர் அய்யப்பன், சி.பி.அய். ஒன்றிய செயலாளர் முருகையன், சி.பி.எம்.ஒன்றிய செயலாளர் சுரேஷ்குமார், தி.மு‌..தலைமை கழக பேச்சாளர் கலைமணி இளையபாரதி, வி.சி..ஒன்றிய செயலாளர் சிவாஜி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மு.கா.காந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் ஒன்றிய அமைப்பாளர் மாநல்.பரமசிவம் நன்றி கூறினார்.

பரப்புரை பயணக் கூட்டத்தில் திராவிடர் கழக பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார், மாநில அமைப்பாளர் இரா.குணசேகரன், ஒருங்கிணைப்பாளர் பேரா..சுப்பிரமணியம், மாநில மாணவரணி செயலாளர் .பிரின்ஸ் என்னாரெசு பெரியார், மாநில மாணவரணி அமைப்பாளர் இரா.செந்தூரபாண்டி, தி.என்னாரெசு பிராட்லா உள்ளிட்ட தோழர்கள் பங்கேற்றனர்.

பேராவூரணி தி.மு.. வேட்பாளரின் நெகிழ்ச்சி!

பேராவூரணி மேனாள் சட்டமன்ற உறுப்பினர் சிங்காரம் உரையாற்றும்போது, திராவிடர் கழகத் தோழர்கள் எந்த ஒரு தேர்தலிலும் போட்டியிட மாட்டார்கள். எந்தப் பதவியையும் நாட மாட்டார்கள். அவர்களது தொண்டுக்கு எங்களது நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம் என்றும்,

பேராவூரணி தொகுதி சட்டமன்ற வேட்பாளர் அசோக்குமார் உரையாற்றும்போது

திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் அய்யா வீரமணி அவர்கள் பேராவூரணி என்றாலே தனி பாசத்தோடு இருக்கக் கூடியவர். அதுவும் 88 வயதிலும் இவ்வளவு தூரம் வருகை தந்து எனக்கு வாக்குகள் கேட்டு அய்யா அவர்கள் வந்திருப்பது, தி.மு.. தலைவர் தளபதி அவர்கள் நூறு முறை வந்ததற்கு சமம் என்றும் பேசினார்கள்.

 ஆறுதல் சொல்ல வந்தாரா பிரதமர்?

கஜா புயல் பாதிப்பின்போது தி.மு.. தலைவர் தளபதி மு..ஸ்டாலின் அவர்களும், நாங்களும் இந்த பகுதி மக்களை எல்லாம் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி நிவாரணப் பொருட்களை வழங்கினோம்.

பிரதமர் மோடி ஒருமுறையாவது  வந்திருப்பாரா? தமிழகத்திற்கு முதல்வர் கேட்ட நிவாரண நிதியை வழங் கினாரா? மக்களைச் சந்தித்து ஆறுதல் சொல்லியிருக்க வேண்டுமல்லவா? இப்போது தேர்தல் நேரத்தில் மத்திய அமைச்சர்களும், பிரதமர் மோடி அவர்களும் தமிழகத்திற்கு அடிக்கடி வருவதன் நோக்கம் என்ன? உங்களை ஏமாற்ற ,வாக்குகளை வாங்குவதற்காக!

புரிந்து கொள்ளுங்கள்!

- பட்டுக்கோட்டை தேர்தல் பரப்புரையில்

தமிழர் தலைவர்

Comments