துபாய் நகர மேம்பாட்டுத் திட்டம் 2040; ஆட்சியாளர் அனுமதி

துபாய், மார்ச் 15 துபாய் நகர மேம்பாட்டுத் திட்டம் 2040-க்கு துபாய் ஆட்சியாளர்  ஷேக் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம் அனுமதியளித்துள்ளார்.

துபாய் நகர மேம்பாட்டு திட்டம் 2040 தொடர்பான உயர் கமிட்டியின் கூட்டம் துபாயில் 13.3.2021 அன்று நடந்தது.

கூட்டத்துக்கு துபாய் ஆட்சியாளரும், அமீரக துணை அதிபரும், பிரதமருமான ஷேக் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம் தலைமை வகித்தார்.

அப்போது அவர் துபாய் நகர மேம்பாட்டுத் திட்டம் 2040 தொடர்பான பணிகளுக்கு அனுமதி யளித்து உத்தரவு பிறப்பித்தார்.

இது குறித்து அமீரக துணை அதிபர் கூறியிருப்பதாவது:-

துபாய் நகர மேம்பாட்டுத் திட்டம் 2040 திட்டப்படி  மேலும் அடுத்த 20 ஆண்டுகளில் துபாய் நகரில் தற்போது இருந்து வரும் கடற்கரை பகுதிகளை கூடுத லாக 400 சதவீத அளவுக்கு விரிவுப் படுத்தப்படும்.

இதன் மூலம் துபாய் நகரின் பொருளாதாரம் மற்றும் பொழுது போக்கு நடவடிக்கைகள் இரு மடங்காக மேம்படும்.

துபாய் நகரம் உலகில் பொது மக்கள் வாழ மிகச் சிறந்த இடமாக மேம்படுத்தப்படும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப் பட் டுள்ளது.

இந்த புதிய திட்டப்பணிகள் பொது மக்களின் வாழ்க்கைச் சூழ் நிலையை பெரிதும் மாற்ற உதவியாக இருக்கும். இந்த திட்ட மானது அமீரகத்தின் 50 ஆண்டு திட்டத்துக்கு ஏற்ற வகையில் மேற் கொள்ளப்பட இருக்கிறது.

துபாய் நகரின் மக்கள் தொகை யானது கடந்த 1960-ஆம் ஆண்டு 40 ஆயிரமாக இருந்தது. கடந்த ஆண்டில் இந்த மக்கள் தொகை எண்ணிக்கை 80 மடங்கு அதிகரித்து 33 லட்சமாக அதிகரித்துள்ளது. அதிகரித்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப இந்த புதிய திட்டங்கள் மேற்கொள்ளப்படுகிறது.

துபாய் நகரை மேம்படுத்த கடந்த 1960-ஆம் ஆண்டில் இருந்து ஆறு மேம்பாட்டுத் திட்டங்கள் மேற் கொள்ளப்பட்டது. 

தற்போது மேற்கொள்ள இருக்கும் இந்த திட்டம் 7-ஆவது மேம்பாட்டுத் திட்டம் ஆகும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Comments