தேர்தல் களத்தில்..... : தமிழக சட்டப் பேரவைத் தேர்தல் 2021

.தி.மு.., பா... இரண்டு கட்சிகளுமே தோற்கடிக்கப்பட வேண்டும்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் இரா.நல்லக்கண்ணு 

மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சைதாப்பேட்டை சட்டமன்றத் தொகுதி தி.மு.கழக வேட்பாளர் மா.சுப்பிரமணியனை ஆதரித்து 

28-3-2021 அன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணியளவில் சைதாப்பேட்டை குயவர் வீதியில் நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் இரா.நல்லக்கண்ணு, இந்தத் தொகுதியில் மா.சுப்பிரமணியன் வெற்றி பெற வேண்டியதன் அவசியத்தையும், அதிமுக பிஜேபி இரண்டு கட்சிகளுமே தோற்கடிக்கப்பட வேண்டும் என்பது குறித்தும் பேசினார்.

அப்போது அவர் தமது உரையில் குறிப்பிட்டதாவது:

சைதாப்பேட்டை சட்டமன்றத் தொகுதியில் கட்சியின் சார்பில் நிறுத்தப்பட்டிருக்கக்கூடிய மரியாதைக்குரிய மா.சு. அவர்களுக்கு முதலில் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மா.சுப்பிரமணியனை மா.சு. என்றுதான் அறிந்திருக் கிறேனேத்தவிர, அவரை இப்போதுதான் வழக்கறிஞர் என கேள்விப்படுகிறேன். அவர் சிறந்த மக்கள் தொண்டர். தன்னலம் பற்றி கவலைப்படாமல், மக்கள் நலனுக்காக உழைக்கக்கூடியவர். மக்களின் தொண்டர். மக்களுக்காகப் பாடுபடக்கூடியவர். மக்கள் அவரை மக்கள் தொண்டராக மதிக்கக்கூடியவராக இருக்கிறார். அவரை நான் வாழ்த்துவதிலே திருப்தியடைகிறேன்.

அவர் எனக்கு அதிக பழக்கமானது, சென்னைத் தலைவராக (மேயர்) அவர் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றியபோதுதான். அப்போது அவர் எப்படி செயல்பட்டார். நிர்வாகத்தை எப்படி நடத்தினார். பணியாற்றக்கூடிய ஊழியர்களை எப்படி மதிப்புடனும், மரியாதையுடனும் வழிநடத்தினார். சிறந்த மக்கள் பணிகளை ஆற்றினார் என்பது எல்லாம் மக்கள் அறிவர். அப்படி மக்கள் தொண்டராக இருந்து, மக்கள் மதிக்கும் தலைவராக உயர்ந்துள்ளார் மா.சு. அவர் வெற்றி பெறுவார் என்ற நம்பிக்கை நமக்கு நிறையவே இருக்கிறது.

காரணம், மாவட்டத் தலைநகரங்களில் படித்து ஆசிரியர் பணிக்கு வருகிறவர்கள். 1937, 1940 ஆம் ஆண்டு வாக்கில். வாத்தியார் எங்கேயிருந்து வந்திருக்கிறார் என்று கேட்பார்கள். படிச்சது நம்ம ஊர்ல. வாத்தியாரானது சைதாப்பேட்டையில் என்பார்கள். கிராமங்களில் படித்துவிட்டு வாத்தியாராக ஆனது சைதாப்பேட்டையில். அப்படி பெருமைமிகுந்த சைதாப்பேட்டையில் போன முறையும் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இப்போதும் தேர்ந்தெடுக்கப்படுவார். அது கட்சியோட விருப்பமாக இருந்தாலும், அது இப்போது மக்களோட விருப்பமாக இருக்கிறது. ‘தொண்டால் பொழுதளந்த தொண்டன் மா.சு.’ அவர் வெற்றி பெறுவார் என்றார்.

மேலும் அவர், கடந்த 10 ஆண்டுகளாக ஓர் ஆட்சி தமிழகத்தில் நடைபெறுகிறது. பத்து ஆண்டுகளாக என்ன செய்தார் தமிழகத்திற்கு? 10 ஆண்டுகளாக தமிழகத்தைப் பாழ்படுத்தியிருக்கிறார் முதல் அமைச்சர். கடந்த 10 ஆண்டுகளாக ஒன்றும் செய்ய முடியவில்லை. இப்போது தேர்தல் அறிக்கை விட்டிருக்கிறார் என்னென்ன செய்வோம் என்று. 10 ஆண்டுகளாக செய்யமுடியாதவற்றை இனிமேல் செய்வார்கள் என்றால் நம்பமுடியாது. இனிமேல் செய்வோம் என்றால் எப்படி நம்புவது?

ஆகையால்தான் .தி.மு..  - பி.ஜே.பி. இரண்டு கட்சிகளுமே தோற்கடிக்கப்பட வேண்டும் என்பதுதான் எங்கள் கொள்கை. எங்கள் கூட்டணி கொள்கை கூட்டணி - மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி. எங்களுக்கென்று கொள்கை இருக்கு. எங்களுடைய தேர்தல் அறிக்கையில் மக்கள் நலன் கருதி பல்வேறுத் திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன. அவற்றையும் நாங்கள் செயல்படுத்துவோம் என்றார்.

தமிழகத்தில் பா.ஜனதா காலூன்ற முடியாதுஇந்திய கம்யூனிஸ்ட் டி.ராஜா பேட்டி

 தமிழகத்தில் பா.ஜனதா காலூன்ற முடியாது. மக்கள் ஆட்சி மாற்றத்துக்கு தயாராகி விட்டார்கள் என்று கோவையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் டி.ராஜா கூறினார்.

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் டி.ராஜா கோவையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தி.மு. தலைமையிலான மதசார்பற்ற ஜனநாயக முற்போக்கு கூட்டணி மக்களிடம் பெரும் எழுச்சியை பெற்றுள்ளது. பா.ஜனதா கட்சி என்பது ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் அரசியல் பிரிவு. இந்திய ஜனநாயக கட்டமைப்பை தகர்த்து, மக்களை பிளவுபடுத்தி அதிகாரத்தை நிலைநிறுத்துவதே ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் சித்தாந்தம்.

பா.ஜனதா ஆளும் மாநிலங்களில் மதம், மொழி, கலாசாரம் மற்றும் கடவுளின் பெயரால் வன்முறைகளை தூண்டி மக்களை பிளவுபடுத்துகிறது. அதானி, அம்பானி போன்ற பெரும் முதலாளிகளின் அரசாக பா.ஜனதா செயல்படுகிறது. தமிழகத்தில் ஒருபோதும் பா.ஜனதா காலூன்ற முடியாது. பா.ஜனதா அரசு இந்திய பொருளாதாரத்தை நிலை குலைத்து வருகிறது. பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்படுகிறது. ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கட்சி என்ற நிலைக்கு கொண்டு செல்கிறது.

அடிப்படை மாநில நலன்களை, மக்கள் உரிமைகளை காப்பதில் .தி.மு.. மிகப்பெரிய தோல்வியை கண்டுள்ளது. பா.ஜனதா-.தி.மு. கூட்டணியை மக்கள் நிராகரிக்க முடிவு செய்துவிட்டார்கள். .தி.மு.. ஆட்சியை மக்கள் விரும்பவில்லை. தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்கு மக்கள் தயாராகி விட்டார்கள். தி.மு..வின் மதசார்பற்ற ஜனநாயக முற்போக்கு கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தேர்தலுக்கு பின்னர் தமிழகத்தில் .தி.மு.. என்ற கட்சியே இருக்காது

- திருமாவளவன் 

.தி.மு.. தலைவர்கள் அனைவரும் பா...வில் இணைந்து விடுவார்கள். தேர்தலுக்கு பின்னர் தமிழகத்தில் .தி.மு.. என்ற கட்சியே இருக்காது என்று திருமாவளவன் கூறினார்.

தஞ்சை மாவட்டம் பாபநாசம் சட்டசபை தொகுதியில் போட்டியிடும் தி.மு.. கூட்டணி வேட்பாளரும், மனிதநேய மக்கள் கட்சி தலைவருமான ஜவாஹிருல்லாவை ஆதரித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் நேற்று (29.3.2021) கபிஸ்தலத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்தார்.

அப்போது அவர் பேசியதாவது:-

 தி.மு.. கூட்டணியில் உள்ள கட்சிகள் ஏதோ தேர்தலுக்காக உருவான கூட்டணி அல்ல. பா...வை உள்ளே விடாமல் தடுக்க வேண்டும். தமிழ்நாட்டை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்ட கூட்டணி. பா...வுக்கு எதிரான யுத்தம்தான் இந்த தேர்தல் யுத்தம் என்பதை யாரும் மறந்து விடாதீர்கள். எதிரணியில் போட்டியிடக்கூடிய 234 தொகுதிகளிலும் பா...தான் நிற்கிறது.

பெரியாரால் பக்குவப்படுத்தப்பட்ட, அண்ணாவால் செழுமைப்படுத்தப்பட்ட, கலைஞரால் பாதுகாக்கப்பட்ட இந்த தமிழர் பூமி, ஜாதி வெறியர்களிடம் சிக்கிவிடக்கூடாது. மதவெறியர்களின் இலக்குக்கு இரையாகிவிடக்கூடாது.

இவ்வாறு அவர் பேசினார்.

கும்பகோணத்தில்...

தொடர்ந்து கும்பகோணம் சட்டசபை தொகுதியில் போட்டியிடும் தி.மு.. வேட்பாளர் சாக்கோட்டை அன்பழகனை ஆதரித்து திருமாவளவன் பேசியதாவது:-

தேர்தலுக்கு பின் .தி.மு.. இருக்காது

தேர்தலுக்கு பின்னர் தமிழகத்தில் .தி.மு.. என்ற ஒரு கட்சியே இருக்காது. .தி.மு.. தலைவர்கள் பா.ஜனதாவில் இணைந்து விடுவார்கள். தமிழகத்தின் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள .பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத் வைத்துள்ள லெட்டர் பேடில் மோடியின் படம் பெரிய அளவில் இருப்பதே இதற்கு சாட்சி.

கூடவே இருந்து கூட்டணி கட்சிகளுக்கு குழிபறிப்பதே பா.ஜனதாவின் வேலை. பீகாரில் நிதிஷ் குமாருக்கு ஏற்பட்ட நிலைதான் தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கும், . பன்னீர்செல்வத்திற்கும் ஏற்படும். வடமாநிலங்களில் பா.ஜனதாவின் 10-க்கும் மேற்பட்ட தோழமைக் கட்சிகள் பலவற்றிற்கும் இதே நிலைதான் ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

.தி.மு.. ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை

கனிமொழி எம்.பி. குற்றச்சாட்டு

.தி.மு.. ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று தேர்தல் பிரசாரத்தில் கனிமொழி எம்.பி. குற்றம் சாட்டினார்.

சென்னை அண்ணாநகர் தொகுதி தி.மு.. வேட்பாளர் அண்ணாநகர் எம்.கே.மோகனை ஆதரித்து அந்த தொகுதிக்கு உட்பட்ட அன்னை சத்யா நகரில் தி.மு.. மகளிர் அணி செயலாளர் மக்களவை உறுப்பினர் கனிமொழி எம்.பி., திறந்த வேனில் வாக்கு சேகரித்தார். அப்போது, அவர் பேசியதாவது:-

 அண்ணாநகர் தி.மு.. வேட்பாளர் மோகன் இந்த தொகுதியில் உள்ள ஏழை எளிய மாணவர்கள் படிக்க வேண்டும் என்பதற்காக அரசு கலைக்கல்லூரி அமைத்து தரப்படும் என்றும், அதற்கு தனது சொந்த நிதியில் இருந்து ரூ.1 கோடி நிதி வழங்குவதாகவும் வாக்குறுதி அளித்து உள்ளார்.

சிறுபான்மை மக்கள் நலனுக்கு எதிரான குடியுரிமை திருத்த சட்டத்தையும், விவசாயிகளுக்கு எதிரான வேளாண் மசோதா சட்டத்தையும் ஆதரித்தார்கள். தற்போது தேர்தலுக்காக இந்த 2 சட்டங்களுக்கும் எதிராக அழுத்தம் கொடுப்போம் என்று சொல்கிறார்கள். .தி.மு.. ஆட்சியில் பெண்கள், குழந்தைகள், கல்லூரி மாணவிகள், முதியோர்கள் என யாருக்கும் பாதுகாப்பு இல்லை. எனவே தி.மு.. ஆட்சி அமைந்தவுடன், மகளிருக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க மாவட்டங்கள் தோறும் தனி நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்று தி.மு.. தேர்தல் அறிக்கையில் மு..ஸ்டாலின் வாக்குறுதி அளித்துள்ளார்.

நமது உரிமைகளை டில்லியில் அடமானம் வைக்காத தமிழன் தான் தமிழ்நாட்டை ஆள வேண்டும். அதை மு..ஸ்டாலின் தான் செய்ய முடியும். எனவே, அனைவரும் உதயசூரியன் சின்னத்துக்கு ஆதரவு அளித்து தி.மு.. வேட்பாளரை வெற்றிபெற செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

ஆட்சி மாற்றத்தின் மூலமே நீட்புதிய கல்விக் கொள்கை பாதிப்புகளில்

இருந்து தமிழக மாணவர்களை பாதுகாக்க முடியும்: கே.எஸ்.அழகிரி

ஆட்சி மாற்றத்தின் மூலமே நீட், புதிய கல்வி கொள்கை பாதிப்புகளில் இருந்து தமிழக மாணவர்களை பாதுகாக்க முடியும் கே.எஸ்.அழகிரி அறிக்கை.

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்ட அறிக்கையில் கூறியி ருப்பதாவது:- நீட் தேர்வையும், மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையையும் எதிர்த்து, தமிழகத்தில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றன. இந்தநிலையில், பி.எஸ்சி. நர்சிங் படிப்புக்கான மாணவர் சேர்க்கையும் நீட் தேர்வின் மூலம் நடத்தப்படும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது, தமிழகத்தக்கு மத்திய பா... அரசு செய்யும் தொடர் துரோகமாக தெரிகிறது. சி.பி.எஸ்.. பாடத்திட்டத்தை மட்டும் வைத்துக்கொண்டு தேர்வு நடத்தினால், தமிழகத்தில் உள்ள அரசு பள்ளி மாணவர்கள் எப்படி நீட் தேர்வை எதிர்கொள்ளமுடியும்?

தி.மு.. கூட்டணி ஆட்சிக்கு வந்ததும், கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும், மத்திய பா... மற்றும் .தி.மு.. அரசால் கசக்கி பிழியப்படும் தமிழக மாணவர்களுக்கு நல்ல எதிர்காலத்தை உருவாக்கித் தரப்படும் என்பதையும் உறுதியாக தெரிவித்துக்கொள்கிறேன். நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் ஆட்சி மாற்றத்தின் மூலமே நீட் மற்றும் புதிய கல்வி கொள்கை பாதிப்புகளில் இருந்து தமிழக மாணவர்களை பாதுகாக்க முடியும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Comments