பெரியார் பாலிடெக்னிக்கில் பெரியார் தொழில் நுட்பக் கண்காட்சி 2021

வல்லம், பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியில் பெரியார் அறிவியல் கழகம் நடத்தும்  பெரியார் தொழில்நுட்பக் கண்காட்சி  இன்று (19.03.2021)  காலை  10.30 மணியளவில் நடைபெற்றது, தொழில்நுட்பக் கண்காட்சியை கல்லூரியின் நிறுவனத் தலைவர் டாக்டர் கி.வீரமணி அவர்கள் துவக்கி வைத்தார். கண்காட்சியில் 'கமலா சுப்ரமணியன், மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளி'யின் முதல்வர் திருமதி எம். வினிதா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தார். இந்நிகழ்வில் கல்லூரி முதல்வர் டாக்டர் இரா.மல்லிகா, பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்மாணவர்கள் அமைத்திருந்த தொழில் நுட்பக் கண்காட்சி காண்பவர் கண்ணையும், கருத்தையும் கவர்வதாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

Comments