தேர்தல் களத்தில்..... : தமிழக சட்டப் பேரவைத் தேர்தல் 2021

எடப்பாடி பழனிசாமி நீண்டகாலம் வாழ்ந்து தி.மு..வின் ஆட்சியை பார்க்க வேண்டும் மு..ஸ்டாலின் பேச்சு

சென்னை, மார்ச் 29- தி.மு.. தலைவர் மு.. ஸ்டாலின் காங்கேயம், கோபிசெட்டிபாளையத் தில் தி.மு.. மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர் களை ஆதரித்துப் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது வாக்காளர்கள் மத்தியில் அவர் பேசியதாவது:-

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தோல்வி பயத்தில் ஏதேதோ உளற ஆரம்பித் திருக்கிறார். வாய்க்கு வந்தபடி எல்லாம் பேசத் தொடங்கி இருக்கிறார். ஒரு கூட்டத்தில் தி.மு..வை வீழ்த்துவதற்கு என்னையே பலியிடத் தயார் என்று எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார்.

எடப்பாடி பழனிசாமி தி.மு..வை அழிக்கப் போகிறோம் என்று சொல்கிறீர்களே தி.மு..வை அழிக்க நினைத்தவர்தான் அழிந்து போயிருக் கிறார்களே தவிர, தி.மு.. அழிந்ததாக வரலாறு இல்லை. தி.மு..வை வீழ்த்தவும் முடியாது. அதை நினைத்துப் பார்க்கவும் முடியாது. தி.மு..வை வீழ்த்துவதற்கு இதுவரை ஒருவன் பிறக்கவுமில்லை. இனியும் ஒருவன் பிறக்க போவதும் இல்லை.

எதிர்க்கட்சியை வீழ்த்த இத்தனை பேர்

மத்தியிலும் நம்முடைய ஆட்சி இல்லை. மாநிலத்திலும் ஆளுங்கட்சி இல்லை. எதிர்க் கட்சியாக இருக்கும் ஒரு கட்சியை வீழ்த்த இத்தனை பேர் கூடி இருக்கிறார்கள் என்றால் நம்முடைய சக்தி என்னவென்று பாருங்கள். கலைஞர் இல்லை. அதனால் கட்சியை சுலபமாக வீழ்த்தி விடலாம் என்று நினைத்து விட்டார்கள். கலைஞர் மறைந்துவிட்டாலும் அவரால் உருவாக்கப்பட்டிருக்கும் தொண்டர் கள் இருக்கிறார்கள். அதை மறந்துவிடாதீர்கள்.

கலைஞர் மறைந்துவிட்டாலும் எங்களைப் போன்றவர்களின் உள்ளங்களில் அவர் இன் றைக்கும் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அதை மறந்து விடாதீர்கள். இந்த களத்தில் நிற்பது கலைஞர் தான். களத்தில் நிற்பது உதயசூரியன் தான். 234 தொகுதிகளிலும் நிற்பது இந்த ஸ்டா லின்தான். அதை மறந்துவிடாதீர்கள். இந்த பாசம், நேசம், ஒற்றுமையினால்தான் ஒரு குடும்ப உணர்வோடு நாம் இருக்கிறோம்.

உயிரைத்தரவேண்டிய அவசியம் இல்லை

எடப்பாடி பழனிசாமி அவர்களே தி.மு..வை வீழ்த்த உங்கள் உயிரைத்தர வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் நீண்ட காலம் வாழுங்கள். விரைவில் ஆட்சிப் பொறுப் பேற்று தி.மு.. ஆளுகின்ற காட்சியை நீங்கள் பார்க்க வேண்டும். அதைத்தான் இந்த காங் கேயம் கூட்டத்தின் மூலமாக அவருக்கு நான் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

என்ன குட்டிக்கரணம் போட்டாலும் பா... கட்டாயம் வரப்போவதில்லை. அவர்கள் வாஷ் அவுட். .தி.மு.., பா...வுக்கு சுத்தமாக முடிவு கட்ட வேண்டும். அதற்கு நீங்கள் தயா ராக இருக்க வேண்டும். நானும் வேட்பாளராக உங்களிடத்தில் வாக்கு கேட்க வந்திருக்கிறேன். முதல்-அமைச்சர் வேட்பாளர். இவர்கள் வெற்றி பெற்றால்தான் நான் முதல்-அமைச்சர். எனவே தி.மு..வுக்கு மிகப்பெரிய வெற்றியை தேடி தர வேண்டும்.

நீட்'டை திணித்து விட்டார்கள்

ஒன்றை மட்டும் மறந்து விடாதீர்கள். இந்த தேர்தல் என்பது நாங்கள் வெற்றி பெற வேண்டும் - ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என்பதற்காக நடக்கின்ற தேர்தல் மட்டுமல்ல. தமிழ்நாட்டில் நீட்டை கொண்டு வந்து திணித்து விட்டார்கள். இந்தியை நுழைத்து கொண்டு இருக்கிறார்கள். சமஸ்கிருதத்திற்கு வாசலை திறந்து விட்டார்கள். நம்முடைய தமிழ்மொ ழிக்கு பெரிய ஆபத்தை உருவாக்கி கொண்டி ருக்கிறார்கள். நம்முடைய மாநில உரிமைகள் பறிபோய்க் கொண்டிருக்கின்றன. நம்முடைய சுயமரியாதையை இழந்து கொண்டிருக்கிறோம்.

அப்படிப்பட்ட சுயமரியாதையை காப்பாற்று வதற்காக நாம் தயாராக இருக்க வேண்டும். இது சுயமரியாதை மண். எனவே நம்முடைய தமிழ கத்தை மீட்க, நீங்கள் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும்.

இவ்வாறு தளபதி மு..ஸ்டாலின் பேசினார்.

1221 அஞ்சல் வாக்குகள் பெறப்பட்டுள்ளது: மாவட்ட தேர்தல் அலுவலர் பிரகாஷ் பேட்டி

சென்னை, மார்ச் 29- சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் தேர்தல் நடத்தும் அதிகாரி யான பிரகாஷ் செய்தியாளர்களிடம் கூறியதா வது:

சென்னையில் 16 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள தேர்தல் நடத்தும் அலுவலர்களின் தலை மையில் அனைத்து வேட்பாளர்களின் பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தப் பட்டுள்ளது. மேலும் நேற்று (28.3.2021) நடை பெற்ற ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட அரசியல் கட்சிகள் எழுத்துப்பூர்வமாக சில கருத்துகளை கூறியுள்ளன. அவர்களுடைய கோரிக்கைகள் பெறப்பட்டு காவல்துறை ஆணையருடன் சேர்ந்து ஆலோசனை செய்யப்படும்.

சென்னையில் 7,300 அஞ்சல் வாக்குகளில் நேற்று முன்தினம் (27.3.2021) வரை 1,182 வயதா னவர்கள் மற்றும் 39 மாற்றுத் திறனாளிகள் உள்பட 1,221 பேரின் வாக்குகள் பெறப்பட்டு "ஆர். அலுவலக ஸ்டிராங் ரூமில்" வைத்து உள்ளோம்.பறக்கும்படை மூலம் ரூ.20 கோடி மதிப்பிலான பல்வேறு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இன்னும் ஒரு வாரத்துக்கு சோதனை கடுமையான இருக்கும். மேலும், 1950 என்ற எண்ணிற்கு தேர்தல் தொடர்பான புகார் அளிக்கலாம். 18004257012 என்ற எண்ணிலும் புகார் அளிக்கலாம். தவறான தகவல்களை பகிர வேண்டாம். 'சி-வேஜ் ஆப்' மூலம் புகார் அளிக் கலாம். கொளத்தூரில் 36 பேர் போட்டியிடுவ தால், 3 வாக்கு பதிவு இயந்திரங்கள் வைக்கப் பட்டுள்ளது.  இதுவரை சரியான ஆவணங்கள் இருந்ததால், ரூ.1.75 கோடி திருப்பி அளிக்கப் பட்டுள்ளது.

மேலும் ரூ.14 கோடியை அதிகாரிகள் மூலம் பறிமுதல் செய்துள்ளனர். ஆவணங்கள் சரி  பார்த்து பிடிக்கப்பட்டுள்ளது. இந்த வாரத்தில்  கவனமாக இருக்க வேண்டிய நேரம். அதனால் தான் கூடுதலாக சோதனையை அதிகரித்துள் ளோம். மேலும் எங்கெங்கே பணம் பதுக்கியுள் ளனர் என்பது குறித்து நிறைய தகவல்கள் எங்களிடம் உள்ளது. இதுவரை துறைமுகத்தில் ரூ.7 கோடியே 76 லட்சம் மதிப்பிலான பொருட் கள், அண்ணாநகரில் ரூ.5 கோடியே 31 லட்சம், வேளச்சேரி ரூ.5 கோடியே 50 லட்சம் மதிப் பிலான பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப் பட்டுள்ளது. மேலும் 2 ஆயிரம் காவலர்கள் கூடுதலாக பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இரவு நேரங்களில் மின்சாரம் அடிக்கடி ஆப் ஆவதும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வரு கிறது. இவ்வாறு மாவட்ட தேர்தல் அலுவலர் பிரகாஷ் கூறினார்.

கட்சியினரின் சார்பில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு வழங்கப்படும் உணவுக்கு தடை

சென்னை, மார்ச் 29- தேர்தல் நாளில் வாக்குச் சாவடி அலுவலர்கள், அரசியல் கட்சியினர் சார் பில்ஸ்பான்சர்செய்யப்படும் உணவை சாப் பிட தேர்தல் ஆணையம் தடை விதித்து அறி வுரை வழங்கியுள்ளது. தமிழகம் முழுவதும், வரும் ஏப்ரல் 6 அன்று சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. மாநிலம் முழுவதும் பல ஆயிரம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. தேர்தல் நாளில், பள்ளி ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் வாக்குச்சாவடி அலுவலராக நியமிக்கப்படுவர். தேர்தலுக்கு முதல் நாளில், வாக்குச்சாவடி அலுவலர்கள் தங்களுக்கு ஒதுக் கப்பட்ட வாக்குச்சாவடி அமைந்துள்ள பள் ளிக்கு சென்று தங்குவர். அடுத்த நாள் மாலை வரை, பள்ளியில் தங்கியிருந்து வாக்குச்சாவடி பணிகளை கவனிப்பர். வாக்குச்சாவடி அலுவ லர்களுக்காக உணவுப்படியை தேர்தல் ஆணையம் வழங்கி விடும்.

எனினும், முதல் நாளில் வாக்குச்சாவடிக்கு சென்று விடும் பெரும்பாலான அலுவலர்க ளுக்கு, அந்த பகுதியில் உள்ள அரசியல் கட்சி பிரமுகர்கள் உணவுஸ்பான்சர்செய்து விடு வர். பெரும்பாலான இடங்களில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு, அப்பகுதியைச் சேர்ந்த கட்சிப் பிரமுகர்கள் உணவுக்கு ஏற்பாடு செய்வது உண்டு. அடுத்த நாளில் காலை, மதிய உணவுகளைக் கூட கட்சியினரே ஏற்பாடு செய்து விடுவர். தேர்தல் ஆணையம் உண வுக்கு தனியாக பணம் கொடுக்கும் போதிலும், வாக்குச்சாவடி அலுவலர்கள் பெரும்பாலா னோர் கட்சியினரின்ஸ்பான்சர்' உணவுகளை சாப்பிடுவது வழக்கம்.

ஆனால், இந்த முறை கட்சியினர்  வழங்கும்ஸ்பான்சர்' உணவை சாப்பிடக் கூடாது என தேர்தல் ஆணையம் கண்டிப்பான உத்தரவை வழங்கியுள்ளது. இதுகுறித்து தேர்தல் நடத்தும் அலுவலர் ஒருவர் கூறுகையில், ‘வாக்குச்சாவடி அலுவலர்கள், கட்சியினர் வழங்கும் உணவை சாப்பிடக் கூடாது. தேர்தல் அணையம் வழங் கும் பணத்தில் தான் உணவு வாங்கி சாப்பிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் பாதுகாப்பு பணிக்கு மேலும் 41 கம்பெனி துணை ராணுவம் வருகை

சென்னை, மார்ச் 29- சட்டமன்ற தேர்தல் பணிக்காக 5 சிறப்பு ரயில்களில் 41 கம்பெனி துணை ராணுவ படையினர் சென்னை வந்த டைந்தனர். தமிழக சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் பாதுகாப்புக்காக 235 கம்பெனி துணை ராணுப் படையினரை தமிழகத்துக்கு அனுப்ப வேண் டும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இந்திய தேர்தல் ஆணை யத் துக்கு கடிதம் எழுதி இருந்தார். இதில், ஏற்கெனவே, 65 கம்பெனி துணை ராணுவப் படையினர் தமிழகம் வந்துள்ளனர்.

இந்நிலையில், நேற்று (28.3.2021) காலை அகர்தலா (00282) ரயிலில் 10 துணை ராணுவ கம்பெனிகள், ஜெய்ப்பூரில் இருந்து வந்த ரயிலில் (00290) 8 துணை ராணுவ கம்பெனிகள், குவாலியர்- சென்ட்ரல் வந்த ரயிலில் (00285)  10 துணை ராணுவம், குவாலியர்- சேலம் வந்த ரயிலில் (00296) 5 துணை ராணுவ கம்பெனிகள், சாம்பல்பூரில் இருந்து சென்ட்ரல் வந்த (00309) 8 துணை ராணுவ கம்பெனிகள் என பல்வேறு பகுதிகளில் இருந்து 5 சிறப்பு ரயில்களில் 41 துணை ராணுவப் படையினர் சென்னை வந்த டைந்தனர். இதையடுத்து அவர்கள் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் தொகுதி களுக்கு பேருந்துகள் மூலம் அனுப்பி வைக்கப் பட்டனர்.

Comments
Popular posts
நெடுஞ்சாலை இணைய தளத்தில் சென்னை - அண்ணாசாலை - காமராஜர் சாலை பெயர்களும் மாற்றப்பட்ட கொடுமை! நமது வன்மையான கண்டனம்!
Image
சாரைசாரையாக புறப்படும் தொழிலாளர்கள் பல்வேறு தொழில்கள் முடங்கும் அபாயம்
Image
‘இந்து மதம்' என்ற ஆரிய - சனாதன மதத்தின் ஆணிவேரான வருணதர்மத்தை வேரோடும் வேரடி மண்ணோடும் பெயர்த்து எறிவதே புரட்சியாளர் அம்பேத்கருக்கு புகழ்மாலை சூட்டிப் பெருமை சேர்ப்பதாகும்!
Image
மகாராட்டிராவைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் ஊரடங்கா? - சுகாதாரத் துறைச் செயலாளர் பதில்
Image
பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலையின் பெயரை மாற்றுவதா? அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம்
Image