இந்திய ரயில்வே அறிவிப்பு
இதுகுறித்து இந்திய ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கை: இந்திய ரயில்வே யின் பார்சல் சேவைகள் பரந்த அளவில் உள்ளது. இது சிறு வணிகர்கள் மற்றும் வர்த்தகர்கள் ஆங்காங்குள்ள சிறிய, பெரிய நகரங்கள், உற் பத்தி மய்யங்கள் ஆகிய இடங் களில் இருந்து வணிகம் செய் யும் இடத்திற்கு விரைவாகவும், நம்பகமான மற்றும் மலிவான முறையில் பொருட்களை கொண்டு செல்வதற்கு இந்த சேவையை பயன்படுத்துகின்ற னர். பார்சல்களுக்கான கட்ட ணம் எடை மற்றும் அளவில் மட்டுமே வசூல் செய்யப்படு கிறது.
பொருட்களில் வகையின் அடிப்படையில் வசூல் செய் யப்படுவதில்லை. இந்நிலை யில் ரயில்வேயின் பார்சல் மேலாண்மை அமைப்பின் கணினிமயமாக்கல் 84 இடங் களில்
இருந்து இரண்டாவது கட்டத்தில் 143 இடங்களுக் கும், மூன்றாவது கட்டத்தில் 523 இடங்களுக்கும் விரிவு படுத்தப்படுகிறது. மேலும் பார்சல் அனுப்புவதற்காக <www.parcel.indianrail.gov.in> என்ற இணையதள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலமாக பார்சல்
அனுப்புவதற்கு 120 நாட்க ளுக்கு முன்னதாக முன்பதிவு செய்துகொள்ளலாம். இட வசதி குறித்தும் அறிந்து கொள்ள முடியும். கணினி மயமாக்கப்பட்ட பார்சல் அலுவலகத்தில் தானாகவே பார்சலின் எடை கணக்கிடப் படும்.
பார்சலை கண்காணிப்ப தற்காக ஒவ்வொரு சரக்கு களிலும் பார்கோடிங் வசதி செய்யப்பட்டுள்ளது. பார்சல் முன்பதிவு, ஏற்றுதல், இறக் குதல் ஆகியவற்றிலிருந்து ஒவ் வொரு கட்டத்திலும் வாடிக் கையாளர்களுக்கு (அனுப்பு நர் மற்றும் பெறுநர்) எஸ் எம்எஸ் அனுப்பப்படும். பார் சல் போக்குவரத்து 2020--2121ஆம் ஆண்டில்
(ஜனவரி வரை) 2,098 ஆயிரம் டன்னாக உள் ளது. கோவிட் பாதிக்கப் பட்ட நிலையிலும் கூட இதன் மூலம் ரயில்வேயின் வருவாய் ரூ.1,000 கோடியை கடக்கும் என்று
எதிர்பார்க்கப் படுகிறது. இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.