கடந்த 2016 தேர்தலை விட இந்த தேர்தலில் மம்தாவின் சொத்து மதிப்பு 45 சதவீதம் குறைந்தது

கொல்கத்தா, மார்ச். 27-  மேற்குவங்க மாநில சட்டமன்ற தேர்தலில் போட்டி யிடும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தாவின் சொத்து மதிப்பு கடந்த 5 ஆண்டுகளில் 45 சதவிகிதம் அளவுக்கு குறைந்துள்ளது, அவர் தாக்கல் செய் துள்ளஅஃபிடவிட்' மூலம் தெரிய வந்து உள்ளது.

மேற்கு வங்கத்தில் உள்ள 294 தொகுதிகளுக்கும் 8 கட்டங்களாகச் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கிறது. இதில் முதல்கட்டத் தேர்தல் இன்று (27.3.2021) தொடங்குகிறது. இந்தத் தேர் தலில் மூன்றாவது முறையாக ஆட்சி யைத் தக்கவைக்க ஆளும் மம்தா தலை மையிலான திரிணாமூல் காங்கிரஸ் கட்சி கடுமையாகப் போராடி வருகிறது. ஆட்சியை கைப்பற்ற பாஜக கடும் முயற்சி செய்து வருகிறது.

இந்த தேர்தலில் திரிணாமூல் காங் கிரஸ் கட்சி 291 தொகுதிகளில் போட்டியிடுகிறது. கூட்டணிக் கட்சியான கூர்கா ஜன்முக்தி மோர்ச்சா(ஜிஜேஎம்) கட் சிக்கு 3 இடங்களை ஒதுக்கியுள்ளது.

திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவரும், முதல்வருமான மம்தா, நந்தி கிராம் தொகுதியில் போட்டியிடுகிறார்.  அவரது வேட்புமனுவுடன் அவர் தாக்கல் செய்துள்ள சொத்து விவரங்கள் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

அதில், அவர் கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் கொடுத்த சொத்து மதிப்பில் இருந்து, கடந்த 5 ஆண்டுகளில் சுமார் 45 சதவிகிதம் குறைந்துள்ளது தெரிய வந்துள்ளது. பொதுவாக வேட்பாளர் கள், ஆட்சியாளர்களின் சொத்து மதிப்பு பல மடங்கு உயர்ந்து வரும் நிலையில், மம்தாவின் சொத்து மதிப்பு பாதியாக குறைந்துள்ளது குறிப்பிடத் தக்கது.

2016ஆம் ஆண்டு நடைபெற்ற மேற்கு வங்க மாநில சட்டமன்ற  தேர்தலின் போது, மம்தா பவானிபூர் தொகுதியில் போட்டியிட்டார். அப்போது அவர் வேட்புமனு தாக்கலின்போது தெரிவித்த சொத்து மதிப்பானது.30,45,013 ஆகும்.  ஆனால், தற்போது அவருடைய சொத்து மதிப்பு ரூ .16,72,352 என தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதாவது கடந்த 5 ஆண்டுகளில் அவரது சொத்து மதிப்பு   45.08 சதவீதம் குறைந்துள்ளது.

அதுபோல, மம்தா பானர்ஜியின் கட்சி சகாக்களான மம்தா பூனியா மற்றும் சுகுமார் தே ஆகியோரின் சொத்துக்கள் முறையே 37.53 சதவீதம் மற்றும் 36.18 சதவீதம் குறைந்துள்ளதும் அவர்கள் தாக்கல் செய்த அஃபிடவிட் மூலம் தெரிய வந்துள்ளது.

Comments