பெண் அதிகாரிகளால் நிர்வகிக்கப்படும் 201 வாக்குச்சாவடிகள்

கவுகாத்தி,மார்ச்22- அசாம் சட்டசபை தேர்தலில் கச்சார் மாவட்டத் தில் 1,834 வாக்குச்சாவடிகள் அமைக்கப் பட்டுள்ளன. இவற்றில் 201 வாக்குச் சாவடிகள், முற்றிலும் பெண் அதிகாரி களால் நிர்வகிக்கப்படு கின்றன. பெண் வாக்காளர்கள் அதிக அளவில் வாக்களிப் பதை ஊக்குவிப்பதற்காக, மாவட்ட நிர்வாகம் இதை செய்திருப்பதாக மாவட்ட  துணை ஆணையர் கீர்த்தி ஜல்லி தெரிவித்தார். பெண்கள் நல திட்டங்களை நிறைவேற்றுவதில், கீர்த்தி ஜல்லிக்கு 4 பெண் உயர் அதிகாரிகள் உதவிகரமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2016ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் இந்த மாவட்டத்தில் வெறும் 10 வாக்குச்சாவடிகள்தான் பெண் அதி காரிகள் நிர்வாகத்தில் இருந்தன. கச்சார் மாவட்டத்தில் ஏப்ரல் 1ஆம் தேதி வாக்குப் பதிவு நடக்கிறது. மாவட்டத்தின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை சுமார் 12 லட்சம் ஆகும்.

Comments