பணமதிப்பிழப்பை ஈடு செய்ய மட்டுமே 2000 ரூபாய் நோட்டு அச்சடிக்கப்பட்டதா?

2018-ஆம் ஆண்டுமுதல் அச்சிடப்படவில்லையாம்

 புதுடில்லி, மார்ச் 17- 2018-ஆம் ஆண்டுமுதல் ரூ. 2,000 நோட் டுக்கள் அச்சிடப்படவில்லை என மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற மக்களவை யில் மத்திய நிதித்துறை இணை அமைச்சர் அனுராக் தாக்கூர் அளித்த விளக்கத்தில் கடந்த 2 ஆண்டுகளாக ரூ. 2,000 நோட்டுக்கள் அச்சிடப் படவில்லை என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மத்திய அரசு அளித்துள்ள எழுத்துப்பூர்வ மான விளக்கத்தில், நாட்டில், 2,000 ரூபாய் நோட்டுக்களின் பயன்பாடு படிப்படியாக குறைந்து வருவதாக தெரிவிக் கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ரிசர்வ் வங்கி வெளியிட்ட ஆண்டறிக்கையில், 2019--2020ஆம் நிதியாண்டில் புதிய 2,000 ரூபாய் நோட் டுகள் எதுவும் அச்சிடப்பட வில்லை எனவும், கடந்த சில ஆண்டுகளாக 2,000 ரூபாய் நோட்டுகள் புழக்கம் குறைந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட் டிருந்தது குறிப்பிடத்தக்கது. இதன் படி பண மதிப்பிழப்பின் மூலம் வரும் கருப்பு பணத்தை வெள்ளையாக்க மட்டுமே உயர் மதிப்பு ரூபாய்த்தாளை அச்சிட்டு பணம் அனைத்தும் அரசு கையில் வந்த பிறகு உயர் மதிப்பு ரூபாய் அச்சிடு வதை நிறுத்தியுள்ளது. இது ஒரு திட்டமிட்ட செயல் என்று பொருளாதார நிபு ணர்கள் கூறுகின்றனர்.

Comments