இதோ: குடந்தையில் பூத்த ஒரு "குறிஞ்சி மலர்!" (1)

தனது பொதுவாழ்வின் துவக்கத்தில் தந்தை பெரியார் பால் ஈர்க்கப்பட்டு, திராவிடர் கழகத்தில் இணைந்த மானமிகு. குடந்தை எஸ்.ஆர். இராதா அவர்கள் போற்றத்தகுந்த பண்புகள் நிறைந்த மாமனிதராக தான் மறையும் வரை - தனிப்பெரும் சுயமரியாதை வாழ்வே சுகவாழ்வு என்று வாழ்ந்து காட்டியவர்.

நாம் ஜாதி, மதம், பற்றிக் கவலைப்படாதவர்கள். அந்த சிந்தனையே நமது இயக்கத்தவர்களுக்குக் கிடையாது என்பது தான் திராவிடர் கழகத்தின் தனித்தன்மையாகும்!

குடந்தை எஸ்.ஆர்.இராதா முன்னாள் அமைச்சர்,  முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் (.தி.மு..வில் இருந்த நிலையில்). எல்லாவற் றையும் விட அறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர். ஆகியவர்களின் நன்மதிப்பைப் பெற்றவர்.

"புரட்சித் தலைவரின் அன்புத்தம்பி, பகுத் தறிவுச்சுடர் எஸ்.ஆர்.இராதா" என்ற தலைப்பில் ஓர் அருமையான வாழ்க்கை வரலாற்று நூலை சவுராஷ்டிரா கல்ச்சுரல் அகாடமி  வெளியீடாக திரு .(இராமியா) ஆர்.ஆர்.குபேந்திரன் அவர்கள் எழுதியுள்ளார். தோழர் குடந்தை கவுதமன் எனக்குத் தந்தார்!

பல சுவையான தகவல்கள். பொது வாழ்வில் அரசியலில் உள்ளோர் கொள்கையோடு இருக்க முடியுமா என்பதற்கு தக்க விடையளிக்கும் நூலாகும்!

ஜாதி உணர்வுக்கு அப்பாற்பட்டவராக வாழ்ந்த சுயமரி யாதைக்காரர் - சிறுபான்மையின பிற் படுத்தப்பட்டோர் சுவுராஷ்டிரா சமூகத்தில் பிறந்த அவர் கருஞ்சட்டைக்காரர் ஆனது வியக்கத் தக்கது.

நீதிக்கட்சி துவக்கத்தில் டாக்டர் டி.எம்.நாயருடன் இருந்த மதுரை வழக்குரைஞர் எல்.கே.துளசிராம், அச்சமுகத்தவர்.  அவர் திராவிட இயக்கத்தில் இருந்தது அபூர்வமானது. குடந்தை திராவிடர் கழகத்தில் எஸ்.ஆர்.இராதா, கு.பா. ராமமூர்த்தி, அவரது துணைவியார் பத்மாவதி - தீவிர தொண்டர்கள். காஞ்சி .ஆர். வெங்கட்ராமன், எனது மாணவப் பருவகால பிரச்சாரகர். பேச்சாளர்.  அய்யா, அண்ணாவுக்கும் நன்கு பழக்கமானவர்.

இப்படி விரல்விட்டு எண்ணக்கூடியவர்கள் தான் உண்டு. காரணம் அவ்வளவு வைதிகத்தில் மூழ்கிய மக்கள் - அங்கே இப்படி ஒரு "குறிஞ்சி மலர்!"

அந்நூலில், மாணவப் பருவத்தில் எப்படி பெரியாரிடம் ஈர்க்கப்பட்டு, தி..விலிருந்து திமுக வுக்குப் போன பிறகும் பெரியாரை அழைத்துக் கூட்டம் நடத்தியதையும், மறையும் வரை சுயமரியாதை வீரராகத் திகழ்ந்தவர் என்பதையும் விளக்கி அவரது கொள்கைப் பிடிப்புக்கு எடுத்துக்காட்டாக இந்நூல்  திகழ்கிறது.

அதில் உள்ள சில சுவையான தகவல்கள் - எப்படியெல்லாம் இளைஞர்களாலும் லட்சிய இயக்கங்கள் வளர்ந்தன என்பதற்கான எடுத்துக் காட்டாகின்றன.

"நம்மால் முடியாதது வேறு யாராலும் முடி யாது.

வேறு யாராலும் முடியாதது நம்மால் மட்டும் முடியும்" என்பதற்குத் தோழர் எஸ்.ஆர்.இராதா வின் வாழ்க்கையே ஒரு சீரிய எடுத்துக்காட்டு!

(272 பக்கங்களில் தகவல்கள் சுவையுடன் தரப்பட்டுள்ள நூலாசிரியருக்கு நமது பாராட்டுகள்)

புத்தகத்திற்குள் நுழைவோமா?

பள்ளிக்கு வெளியே படிப்பு

"எஸ். ஆர். இராதா தொடக்கத்தில் பள்ளிப் படிப்பில் சிறந்து விளங்காவிட்டாலும், அவரு டைய அண்ணன் இராமசாமி மூட நம்பிக்கை ஒழிப்பு, பகுத்தறிவு வளர்ப்புப் புத்தகங்களை அவருக்கு அளித்துப் படிக்க வைத்த பின், அவரு டைய அறிவுத் திறன் சுடர் விட்டு வெளி வர ஆரம்பித்தது. அதனால் பிராமணர்களின் ஆதிக்கத்தில் இருந்த கும்பகோணம் நகர உயர் நிலைப் பள்ளி நிர்வாகிகளும், ஆசிரியர்களும் இராதாவைத் தேர்வில் வெற்றி பெறா வண்ணம் பல முட்டுக் கட்டைகளைப் போட்டனர். அதனால் வெறுப்படைந்த இராதா பள்ளிப் படிப்பை நிறுத்தி விட்டார்.

ஆனாலும் மேற்கொண்டு படிக்க வேண்டும் என்ற ஆவல் அவர் மனதில் இருந்து கொண்டே இருந்தது. இந்நிலையில் மதுரையில் இருந்த தனிப் பயிற்சிக் கல்லூரி (Tutorial College) ) ஒன்று காசி ஹிந்துப் பல்கலைக் கழகத்தின் (Banaras Hindu University) மெட்ரிகுலேஷன் படிப்பை அஞ்சல் வழியில் கற்பித்து, தேர்ச்சி பெற வைப்பதாக வந்த ஒரு விளம்பரத்தை அவர் கண்டார். அதன்படி அஞ்சல் வழியில் கல்வி கற்று, அதன் பின் கடைசி மூன்று மாதங்கள் காசிக்குச் சென்று அங்கே தங்கி நேர்முகப் பயிற்சியையும் தேர்வையும் முடித்து விட்டு வரவேண்டும். இராதா மிக்க ஆர்வத்துடன் இப்பயிற்சியில் சேர்ந்து விட்டார். அவருடன் நண்பர்கள் சிலரும் இணைந்தனர். அஞ்சல் வழியில் பயிற்சியை முடித்த பின் நேர்முகப் பயிற்சிக்குச் செல்ல வேண்டிய காலமும் வந்தது. இராதாவும் நண்பர்களும் மிக்க உற்சாகத்துடன் காசிக்குச் சென்றனர். அங்கு புத்தகப் படிப்பில் மட்டும் மூழ்கி விடாமல் காசிக்குப் பக்கத்தில் உள்ள அலஹாபாத் உள்ளிட்ட நகரங்களையும் சுற்றிப் பார்த்தனர்.

கும்பகோணத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மகாமகம் திருவிழா நடப்பது போல் அலஹாபாத்திலும் 12ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பமேளா திருவிழா நடக்கும். இராதா காசிக்குச் சென்ற ஆண்டான 1954 கும்பமேளா நடக்கும் ஆண்டாக இருந்தது. இராதாவும் நண்பர்களும் கும்பமேளாவைக் காண அலஹாபாத் சென்றனர். கும்பகோணத்தில் மாகாமகத்திற்குக் கூடும் கூட்டத்தை விட மிக அதிகமாகக் கூட்டம் கூடி இருந்தது.

இந்துக்கள் / இந்தியர்கள் ஒன்று என்ற உணர்வை ஏற்படுத்தி, ஆங்கிலேயர்களுக்கு எதி ராகப் போராடும் உணர்வைத் தூண்டு வதற்காக, இந்தக் கும்பமேளா விழாவை இந்திய அரசியல் வாதிகள் பிரபலப்படுத்தி இருந்தார்கள். ஆங்கிலே யர்கள் வெளியேறிய பின் அலஹாபாத்தில் அவ் வாண்டு தான் முதல் கும்பமேளா நடந்தது. ஆங்கி லேயர்கள் காலத்தில் கலந்து கொண்டதை விட மிக அதிக அளவில் மக்கள் கலந்து கொண்டனர். கும்பமேளா விழாவில் காட்டுமிராண்டிகளை விடப் பழமையான பழக்கமாக, சாமியார்கள் நிர்வாணமாகக் கலந்து கொள்ளும் பழக்கம் இருந்தது / இருக்கிறது. அவ்வாண்டும் அவ்வாறே கலந்து கொண்டார்கள். மேலும் பிரபலமான அரசியல் தலைவர்கள் பலரும் அவ்விழாவில் கலந்து கொண்டனர். மக்கள் நிர்வாணச் சாமியார் களைப் பார்ப்பதற்கும், அரசியல் தலைவர் களைப் பார்ப்பதற்கும் ஒவ்வொரு திசையிலும் போக ஆரம்பித்தனர் அந்நேரத்தில் கங்கை நதியில் திடீரென வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, கரைப் பகுதியின் அளவு சுருங்கியது. இவை அனைத்தும் காரணங்களாக அமைந்து மக்களிடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதில் எண்ணூறு பேர் மரணமடைந் தனர். ஆயிரக்கணக்கானோர் காயம் அடைந் தனர். மரணம் அடைந்தவர்கள் அனைவரும் அடையாளம் கூட காணப் படாமல் ஒரே இடத்தில் புதைக்கப்பட்டனர். இராதாவும் அவரது நண்பர் களும், விழாவின் புனிதத்துவத்தில் ஆர்வம் இல்லாத தாலும், கடவுள் நம்பிக்கையே இல்லாத தாலும், விழாவைத் தொலைவில் இருந்தே பார்த் தனர். ஆகவே அங்கு நடந்த தள்ளு முள்ளுவில் மாட்டிக் கொள்ளாமல் தப்பித்தனர். பொதுவாக இது போன்ற விபத்தில் இருந்து தப்பியவர்கள் கடவுள் காப்பாற்றினார் என்று கூறுவார்கள். ஆனால் இராதாவும் அவரது நண்பர்களும் கடவுள் நம்பிக்கை இல்லாததால் தான் அவ் விபத்தில் மாட்டிக் கொள்ளாமல் தப்பித்தார்கள்.

கடைசியில் அவர்கள் காசிக்கு எதற்காகச் சென்றார்களோ அந்த வேலையை, அதாவது மெட்ரிகுலேஷன் தேர்வை, வெற்றிகரமாக முடித்து விட்டுக் கும்பகோணத்திற்குத் திரும்பினார்கள்.

(தொடரும்)

Comments