அனைவருக்கும் மே 1ஆம் தேதிக்கு முன் கரோனோ தடுப்பூசி கிடைக்க ஏற்பாடு அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் அறிவிப்பு

வாசிங்டன், மார்ச் 14 அமெரிக்காவில் உள்ள வயதுக்கு வந்த அனைவருக்கும் மே 1ஆம் தேதிக்கு முன் கரோனோ தடுப் பூசி கிடைக்க வழிவகை செய்யப் படும் என அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் செய்தியாளர்கள் முன் இன்று பேசும்பொழுது, கடந்த ஓராண்டுக்கு முன் நாம் ஒரு வைரசால் பாதிக்கப்பட்டோம்.  அமைதியாக, கவனிக்கப்படாமல் அது பரவியது.  பல நாட்களாக, வாரங்களாக பின்னர் மாதங்களாக அது இல்லை என கூறி கொண்டே இருந்ததில் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டு உள்ளன.

அதிக மனஅழுத்தம் மற்றும் தனிமை ஆகியவை ஏற்பட்டது.  ஒவ்வொருவருக்கும் இது வேறு பட்ட நிலையை ஏற்படுத்திய துடன், நாம் அனைவரும் சில வற்றை இழந்து விட்டோம்.  

இருளில் வெளிச்சம் தேடுவது என்று அமெரிக்கர்கள் பலரும் செய்து வருகிறோம்.  அமெரிக் காவில் உள்ள வயதுக்கு வந்த அனைவருக்கும் வருகிற மே 1ஆம் தேதிக்கு முன் கரோனோ தடுப்பூசி கிடைக்க வழிவகை செய்யப்படும்.

கரோனா பாதிப்புகளால் இன்று வரை உயிரிழந்த அமெரிக் கர்களின் எண்ணிக்கை அடங்கிய அட்டை ஒன்று எனது சட்டை பையில் உள்ளது.  அது மனதுக்கு கடினம் அளிக்க கூடியது என உண்மையில் எனக்கு தெரியும்.

அமெரிக்காவில் இதுவரை மொத்த உயிரிழப்பு 5 லட்சத்து 27 ஆயிரத்து 726 ஆக உள்ளது.  இந்த எண்ணிகை, முதல் உலக போர், இரண்டாம் உலக போர், வியட்னாம் போர் மற்றும் இரட்டை கோபுர தாக்குதல் ஆகியவற்றின் கூட்டு எண்ணிக் கையை விட மிக அதிகம் என அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார்.

Comments