ஏட்டுத் திக்குகளிலிருந்து...

டெக்கான் கிரானிகல், அய்தராபாத்:

·             வழிபாட்டுத் தலங்கள் குறித்து 1991-இல் இயற்றப்பட்ட சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது. ஆர்.எஸ்.எஸ்ஸின் பகடைக்காயாக  நீதிமன்றம் மாறிவிட்டதாக .ஜி. நூராணி குறிப்பிட்டுள்ளார்.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

· இந்தியாவில் உள்ள ஏழைகள் வாழ்வாதார வருமானத்தைப் பெற பல தலைமுறைகள் ஆகும் என உலக பொருளாதார அமைப்பு கூறியுள்ளது.

தி டெலிகிராப்:

·             லண்டனில் பைனான்சியல் டைம்ஸ் ஏற்பாடு செய்த விழாவில், தற்போது இந்தியா "நரேந்திர மோடி ஆட்சியில் உலகின் சுதந்திரமற்ற ஜனநாயகம்" என்று அமெரிக்காவில் இருந்து வெளிவரும் பைனான்சியல் டைம்ஸ் ஆசிரியர் எட்வர்ட் லூசே விமர்சனம் செய்துள்ளார். இவ்விழாவில் நோபல் பரிசு பெற்ற வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான விஞ்ஞானிகள் கலந்து கொண்டனர்.

- குடந்தை கருணா

22.3.2021

Comments