ஆதிச்சநல்லூர் அகழாய்வு அறிக்கை 17 ஆண்டுகள் கழித்து வெளியிடப்பட்டது அறிக்கையின் தமிழாக்கத்தை வெளியிட கோரிக்கை

தூத்துக்குடி, மார்ச் 11- ஆதிச்சநல்லூ ரில் 2004ஆம் ஆண்டு மத்திய தொல்லியல் துறை சார்பில்நடந்த அகழாய்வு அறிக்கை தற்போது 17 ஆண்டுகள் கழித்து வெளியிடப் பட்டுள்ளது. இதனால் தமிழ் ஆர் வலர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஆதிச்சநல்லூர் தாமிரபரணி கரை நாகரீகம். உலக நாகரீகத்தின் தொட்டில் என  கருதுகிறார்கள். இந்தியாவில் முதல்முதலாக 1876 இல் இங்கு அகழாய்வு நடந்துள் ளது. டாக்டர் ஜாகோர் என்பவர்  அகழாய்வு செய்து இங்கு கிடைத்த பொருள்களை ஜெர்மன் நாட் டுக்கு கொண்டு சென்றுள்ளார். தொடர்ந்து பல அகழாய்வுகள் நடந்தது. இதில் 1902இல் அலெக் சாண்டர் இரியா அகழாய்வு செய்த போது நூற்றுக்கணக்கான பொருள் களை எடுத்துச் சென்று சென்னை யில் பார்வைக்கு வைத்துள்ளார்.

மேலும் கிடைத்த பொருள் களை பட்டியல் இட்டுள்ளார். ஆனாலும் முழுமையான அறிக்கை வெளியிடவில்லை. இதற்கிடையில் 1920ஆம் ஆண்டு சிந்துசமவெளியை ஆய்வு செய்த வங்க தேசத்து அறி ஞர் பானர்ஜி சிந்து சமவெளிநாகரீ கத்துக்கு முந்தையது ஆதிச்சநல் லூர் நாகரீகம் என கூறினார். இதனால் உலகமே ஆதிச்சநல் லூரை வியந்து பார்த்தது. ஆனா லும் முறையான அகழாய்வு அறிக்கை ஆதிச்சநல்லூருக்கு வர வில்லை. இதற்கிடையில் இந்திய தொல்லியல் துறை மூலமாக 2004 ஆம் ஆண்டு ஆதிச்சநல்லூரில் அகழாய்வு நடந்தது. இந்த அக ழாய்வை தியாக சத்தியமூர்த்தி தலைமையில் தொல்லியல் துறை யினர் செய்தனர். ஆனால் இதன் அகழாய்வு அறிக்கை வெளியிடப் படவில்லை.

இதுகுறித்து எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, கடந்த 2017 ஆம் ஆண்டு உயர்நீதிமன்ற மதுரை கிளையில்வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கினை வழக் குரைஞர் டாக்டர் அழகுமணி நடத்தினார். இந்த வழக்கில் ஆதிச்சநல்லூரில் 2004 ஆம் ஆண்டு நடந்த ஆய்வறிக்கையை வெளியிடவேண்டும். மீண்டும் அக ழாய்வு செய்யவேண்டும். ஆதிச்ச நல்லூரில் அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என மூன்று கோரிக்கைகள் வைக்கப்பட்டிருந் தது. இதற்கிடையில் இந்த வழக்கை விசாரித்த நீதியரசர்கள் கிருபாக ரன் , சுந்தர் ஆகியோர் உத்தரவின் பேரில் இங்கு எடுத்த முதுமக்கள் தாழி புளோரிடா ஆய்வு மய்யத் துக்கு கொண்டு செல்லப்பட்டு அதன் வயது 2900 என நிர்ணயிக் கப்பட்டது. இதனால் கீழடிக்கு முந்தையது ஆதிச்சநல்லூர் நாகரீ கம் என உறுதி யானது.

கடந்த 2020 ஆம் ஆண்டு பட் ஜெட்டில் மத்திய அரசு ஆதிச்ச நல்லூரில் உலகத் தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்க அனு மதி வழங்கி, அதற்கான இடத் தேர்வு பணி நடந்து வருகிறது. மாநில அரசு ஆதிச்சநல்லூர், சிவ களை உள்பட பகுதியில் கடந்த வருடம் ஆய்வு செய்தது. தற் போதும் மாநில அரசின் சார்பில் மீண்டும் ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கையில் அகழாய்வு பணி துவங்கி விட்டது. இதற்கிடையில் தமிழக தொல்லியல் துறை அமைச் சர், மார்ச் மாதம் மத்தியஅரசின் 2004ஆம் அறிக்கை வெளியிடப் படும் என அறிவித்திருந்தார்.தற் போது தேர்தல் அறிவிப்பு வெளி வந்து விட்டது. இதனால் இந்த அறிக்கை முறைப் படி வெளியிடப் பட வாய்ப்பு இல்லாமல் இருந் தது. ஆனால்தற்போது தொல்லியல் துறை அதிகாரி டாக்டர் சத்திய பாமா பத்ரிநாத் 2020இல்வெளியிட்ட 293 பக்கம் கொண்ட அறிக்கை, 2004இல் நடந்த ஆதிச்சநல்லூர் அகழாய்வு அறிக்கை வெளியிடப் பட்டுள்ளது. இது தற்போது சமூக வலைத் தளத்தில் வேகமாக பரவி வருகிறது.

இதுகுறித்து எழுத்தாளர் முத் தாலங்குறிச்சி காமராசு கூறும் போது, எங்கள் வழக்கில் கேட்ட மூன்று கோரிக்கையும் நிறைவேறிவிட்டது. தொடர்ந்து அகழாய்வு நடந்த வேண்டும் என்ற கோரிக் கையை மாநில அரசும், அருங் காட்சியகம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை மத்திய அரசும் வெளியிட்டது. தற்போது 17 ஆண்டுகள் கழித்து அகழாய்வு அறிக்கையை வெளியிட்டு இருப் பது தமிழர்களுக்கு மணிமகுடம் அமைப்பது போல உள்ளது. அதே வேளையில் தற்போது ஆதிச்சநல் லூரில் மூன்று மொழிகளில் விளம் பர பலகை வைக்கும் பணியும் நடந்து வருகிறது.

ஆனாலும் மாநில அரசை, ஆதிச்சநல்லூரில் பாதுகாக்கப் பட்ட 114 ஏக்கருக்குள் அகழாய்வு செய்ய மத்திய அரசு அனுமதிக்க வில்லை. தற்போது வெளியிடப் பட்ட அகழாய்வு அறிக்கையில் 5 பகுதி உள்ளது. இதில் ஆதிச்சநல்லூ ரில் நெற்றிக்கண் மனிதன் இருந் தான் என்பதற்குபதிலும் கிடைத் துள்ளது. முத்துகுளிக்கும் மக்க ளுக்கு ஒரு வித நோய் வரும். அந்த நோயால் பாதிக்கப்பட்டு புதைக் கப்பட்ட வர்களே இந்த நெற்றிக் கண் மனிதர்கள் என சத்தியபாமா பதிவிட்டுள்ளார். இந்த அறிக் கையை தமிழாக்கம் செய்து வெளியிட மாநில தொல்லியல் துறையின ரும், மத்திய தொல்லியல் துறையி னரும் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது தான் பாமரமக்களுக்கு ஆதிச்சநல் லூரின் அருமை போய் சேரும். இதற்காக உழைத்த நீதித்துறை, பத்திரிகை துறை, மத்திய மாநில அரசுகளுக்கு நன்றி என்றார். 2004 இல் நடந்த அகழாய்வு அறிக்கை 17 ஆண்டுகள் கழித்து வெளியிடப் பட்டது, தமிழ் ஆர்வலர்களுக்கு மகிழ்ச்சயினை கொடுத்துள்ளது.


Comments