ஏப்ரல் 17ஆம் தேதி 2 மக்களவை, 14 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்

புதுடில்லி,மார்ச்18 ஆந்திர மாநிலத் தில் உள்ள திருப்பதி மக்களவை உறுப் பினர் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பள்ளி துர்கா பிரசாத் ராவ், கரோனா நோய்த் தொற்று காரணமாக கடந்தாண்டு செப்டம்பரில் உயிரிழந்தார்.

இதேபோல், கருநாடகாவின் பெல் காம் தொகுதியின் மக்களவை உறுப்பினர் முன்னாள் மத்திய அமைச்சர் சுரேஷ் அங்காடியும் கடந்த செப்டம்பரில் உயிரிழந்தார். இதனால், இந்த இரண்டு தொகுதிகளும் காலியானதாக அறிவிக் கப்பட்டது.

இந்நிலையில் திருப்பதி, பெல்காம் மக்களவை தொகுதி இடைத்தேர்தல் வருகிற ஏப்ரல் 17ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள் ளது. இதேபோல், ராஜஸ்தானில் 3, கருநாடகாவில் 2, குஜராத், ஜார்கண்ட், மத்தியப் பிரதேசம், மகாராட்டிரா, மிசோரம், நாகாலாந்து, ஒடிசா, தெலங் கானா மற்றும் உத்தரகாண்டில் தலா ஒரு தொகுதி என மொத்தம் 14 சட்டமன்ற தொகுதிகளிலும் ஏப்ரல் 17ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மே 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

Comments
Popular posts
நெடுஞ்சாலை இணைய தளத்தில் சென்னை - அண்ணாசாலை - காமராஜர் சாலை பெயர்களும் மாற்றப்பட்ட கொடுமை! நமது வன்மையான கண்டனம்!
Image
சாரைசாரையாக புறப்படும் தொழிலாளர்கள் பல்வேறு தொழில்கள் முடங்கும் அபாயம்
Image
‘இந்து மதம்' என்ற ஆரிய - சனாதன மதத்தின் ஆணிவேரான வருணதர்மத்தை வேரோடும் வேரடி மண்ணோடும் பெயர்த்து எறிவதே புரட்சியாளர் அம்பேத்கருக்கு புகழ்மாலை சூட்டிப் பெருமை சேர்ப்பதாகும்!
Image
மகாராட்டிராவைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் ஊரடங்கா? - சுகாதாரத் துறைச் செயலாளர் பதில்
Image
பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலையின் பெயரை மாற்றுவதா? அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம்
Image