அபுதாபியில் 16 வயதுக்கு மேற்பட்ட மாணவ-மாணவிகளுக்கு கரோனா தடுப்பூசி

 அபுதாபி, மார்ச் 28- அபுதாபி கல்வி மற்றும் அறிவு மேம்பாட்டுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

அமீரக சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத்துறையுடன் இணைந்து அபுதாபி பகுதியில் உள்ள தனியார் பள்ளிக்கூடங்களில் படித்து வரும் 16 வயதுக்கு மேற்பட்ட மாணவ,  மாண விகள் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட் டோருக்கு கரோனா தடுப்பூசி போடும்  பணி தொடங்கப்பட்டுள்ளது.

16 வயதுக்கு மேற்பட்டவர்கள் கரோனா தடுப்பூசி போட தகுதியுடை யவர்களாக இருந்த போதிலும், அவர் களது பெற்றோரோ அல்லது பாது காவலரோ உடன் இருக்க வேண்டும். மேலும் தடுப்பூசி போடுவதற்கு முன் னதாக அமீரக அடையாள அட் டையை வழங்க வேண்டும். அதனை யடுத்து மருத்துவர் சம்பந்தப்பட்ட மாணவ, மாணவிகளை பரிசோதனை செய்வர். அதன்பின்னரே அவர்க ளுக்கு தடுப்பூசி போடப்படும்.

இந்த தடுப்பூசி போடும் பணியா னது ஆரம்பக்கட்டமாக, அபுதாபி யின் சேக்புத் நகரில் உள்ள அல் வதன் பள்ளிக்கூடத்திலும், அல் அய்னில் உள்ள அல் ஜனயின் பள்ளிக்கூடத் திலும், அல் தப்ரா பகுதியில் பாத்திமா மருத்துவ அறிவியல் கல்லூரியிலும் நடக்கிறது.

தினமும் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை இந்த தடுப்பூசி போடப்படுகிறது. ஒரு வார காலம் நடைபெறும் இந்த பணியானது அடுத்த மாதம்(ஏப்ரல்) 1-ஆம் தேதி யுடன் நிறைவடையும்.

அபுதாபி உள்ளிட்ட அமீரகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கரோனா பரவலை தடுக்க தடுப்பூசி போடும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாக அபுதாபி பகுதியில் உள்ள தனியார் பள்ளிக் கூடங்களில் படித்து வரும் மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு போட முடிவு எடுக்கப்பட்டது. இந்த வாய்ப்பினை அனைவரும் பயன்படுத் திக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Comments
Popular posts
நெடுஞ்சாலை இணைய தளத்தில் சென்னை - அண்ணாசாலை - காமராஜர் சாலை பெயர்களும் மாற்றப்பட்ட கொடுமை! நமது வன்மையான கண்டனம்!
Image
சாரைசாரையாக புறப்படும் தொழிலாளர்கள் பல்வேறு தொழில்கள் முடங்கும் அபாயம்
Image
‘இந்து மதம்' என்ற ஆரிய - சனாதன மதத்தின் ஆணிவேரான வருணதர்மத்தை வேரோடும் வேரடி மண்ணோடும் பெயர்த்து எறிவதே புரட்சியாளர் அம்பேத்கருக்கு புகழ்மாலை சூட்டிப் பெருமை சேர்ப்பதாகும்!
Image
மகாராட்டிராவைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் ஊரடங்கா? - சுகாதாரத் துறைச் செயலாளர் பதில்
Image
பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலையின் பெயரை மாற்றுவதா? அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம்
Image