தமிழ்நாடு 16 ஆவது சட்டப்பேரவைத் தேர்தல்

சமூகநீதி- மதச்சார்பின்மை- பண்பாடு- மொழி பாதுகாப்பு- பாலியல் நீதி- நாட்டு வளர்ச்சி-சமதர்மக் கூட்டணியாம் தி.மு.. அணியை வெற்றி பெறச் செய்திடுவீர்!

இவற்றிற்கு எதிரான பாசிச பா... - அதற்குப் பலியான .தி.மு.. கூட்டணியை வீழ்த்திடுவீர்!

திராவிடர் கழகப் பொதுக்குழுவில் மக்களுக்கு வழிகாட்டும் முக்கிய தீர்மானங்கள்!

கும்பகோணம், மார்ச் 13 நடைபெறவிருக்கும் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் சமூகநீதி - மதச்சார்பின்மை - பாலியல் நீதி- மொழி- பண்பாடு பாதுகாப்பு - நாட்டு வளர்ச்சி - சமத்துவக் கோட்பாடுடைய தி.மு.. தலைமையிலான கூட்டணிக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்யவேண்டும் என்றும், இதற்கு எதிரான பாசிச பா... - அதற்குப் பலியான .தி.மு.. கூட்டணியைத் தேர்தலில் தோல்வியுறச் செய்யவேண்டும் என்றும் இன்று (13.3.2021) கும்பகோணத்தில் நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை முன்மொழிந்தார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

13.3.2021 சனியன்று கும்பகோணம் ராயா மண்டபத்தில் - திராவிடர் கழகச் செயலவைத் தலைவர் மானமிகு சு.அறிவுக்கரசு தலைமையில் நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக்குழுவில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

தீர்மானம் எண் 1:  இரங்கல் தீர்மானம்

கீழ்க்கண்ட பெருமக்கள் - கழகத் தோழர்கள் மறைவிற்கு இப்பொதுக்குழு தனது இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறது.

பொதுவுடைமை இயக்க சுயமரியாதை வீரர் தோழர் தா.பாண்டியன் (26.02.2021), வரியியல் அறிஞர் .இராசரத்தினம் (18.7.2020),  தந்தை பெரியாருக்கான மருத்துவக் குழுமத்தைச் சேர்ந்த டாக்டர் .சி.ஜான்சன் (18.8.2020), லோக் ஜன்சக்தி தலைவரும், மேனாள் மத்திய அமைச்சருமான ராம்விலாஸ் பஸ்வான் (9.10.2020), உச்சநீதிமன்ற மேனாள் நீதிபதி .ஆர்.இலட்சுமணன் (27.8.2020), ஜஸ்டீஸ் கே.எம்.நடராஜன் (12.9.2020), பாவலர் புதுவை மன்னர் மன்னன் (7.7.2020), எழுத்தாளர் பட்டுக்கோட்டை குமாரவேல், தமிழக லோக் ஜன்சக்தி தலைவர் சமூகநீதிப் போராளி சந்திரகேசன் (11.4.2020), விஜயவாடா கோரா நாத்திக மய்யம் டாக்டர் விஜயம் (22.5.2020), மேனாள் தமிழக அமைச்சர் ரகுமான்கான் (20.8.2020), தி.மு.. சட்டமன்ற உறுப்பினர்கள் ஜெ.அன்பழகன் (10.6.2020), வேதாரண்யம் மா.மீனாட்சி சுந்தரம் (21.9.2020), கோபி ஜி.பி.வெங்கிடு (24.9.2020), குழந்தை தமிழரசன் (10.7.2020), மன்னை அம்பிகாபதி (15.7.2020), மேனாள் மேலவை உறுப்பினர் பாவலர் மீனாட்சி சுந்தரம் - எல்.பலராமன் (22.6.2020), பேராசிரியர் அர.ஜனகன் (4.7.2020), பேராசிரியர் மு.பி.பாலசுப்பிரமணியன் (27.6.2020), டாக்டர் தாராநடராசன் என்ற இங்கர்சால் (15.8.2020), மேனாள் மத்திய அமைச்சர் தலித் எழில்மலை (6.5.2020), சிங்கப்பூர் கே.இராமசாமி (28.4.2020)

மலேசியா சிவப்பிரகாசம் முனியாண்டி (4.10.2020), ம.தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் நாசரேத் துரை (6.9.2020), ஜனதா தளம் பொதுச்செயலாளர் மதுரை  ஜான்மோசஸ் (15.9.2020), பெரியார் மணியம்மை பல்கலைக் கழக மேனாள் துணைவேந்தர் முனைவர் நல்.இராமச்சந்திரன் (13.9.2020), தோழர் கே.வரதராசன் (17.5.2020), தமிழகக் குடியரசு கட்சித் தலைவர் சக்திதாசன் (10.12.2020),

 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தோழர்கள் இலட்சுமணன், தோழர் விஸ்வநாதன் (26.08.2020), கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் எச்.வசந்தகுமார் (29.08.2020), க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி தொகுப்பாளர் எஸ்.இராமகிருஷ்ணன் (17.11.2020), ரஷ்ய தமிழறிஞர் அலெக்சாண்டர் துப்யான்ஸ்கி (19.11.2020), ஓய்வுபெற்ற நீதிபதி ஜஸ்டிஸ் கே.எம்.நடராசன் (12.09.2020), இந்தியன் வங்கி மேனாள் தலைவர் எம்.கோபாலகிருஷ்ணன் (01.10.2020), தமிழ்நாடு வேளாண்துறை அமைச்சர் இரா. துரைக்கண்ணு (01.11.2020). ஆந்திர நாத்திக அறிஞர் கோராவின் மகள் நவகோரா (08.11.2020). தா.மா.கா. துணைத் தலைவர் ஞான தேசிகன் (16.01.2021). லண்டன் தமிழர் முன்னேற்றக் கழகத் தலைவர் நாகதேவன் (27.01.2021). ஒரத்தநாடு கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் தோழர் காந்தி (18.10.2020). ஆராய்ச்சி அறிஞர் பேராசிரியர் தொ.பரமசிவம் (25.12.2020). கவிக்கொண்டல் மா.செங்குட்டுவன் (06.02.2021). பிரபல பல்மருத்துவர் சி.கே.தனசேகரன் (14.02.2021). சிங்கப்பூர் டாக்டர் தேவேந்திரன் (30.12.2020கழகத் தோழர்கள் மண்ணச்சநல்லூர் .அனந்தம்மாள் 11.3.2020, (உடற்கொடை) பெங்களூரு சொர்ணா அரங்கநாதன் 13.3.2020, (உடற்கொடை) புலவர் கடவுள் இல்லை () மு.வேங்கடசாமி (வயது 68) 17.3.2020, திருச்சி உய்யக்கொண்டான் தமிழ்மணி (வயது 83)  29.3.2020, கல்வி அறிஞர் டாக்டர் எஸ்.வி.சிட்டிபாபு 29.3.2020,  முதல்கரை ஆறுமுகநயினார் 5.4.2020, பேராவூரணி சின்னையன் (வயது 80) 5.4.2020,  பட்டீஸ்வரம் இரா. கலைவாணி (வயது 62) 7.4.2020, இராமநாதபுரம் மாவட்டம் முனியாண்டி (வயது 85) 14.4.2020, ஈரோடு மின்னப்பாளையம் .வள்ளியம்மாள் (வயது 74) 17.04.2020, மேலமெஞ்ஞானபுரம் .புஷ்பராணி (வயது - 71) 20.4.2020, நெய்வேலி லட்சுமியம்மாள் (வயது 74) 22.4.2020,  சிங்கப்பூர் கே.இராமசாமி 27.4.2020, குரோம்பேட்டைச.விசாலாட்சி (வயது 80) 7.5.2020, செம்பியம் கி.சரோஜா (வயது 78) 9.5.2020, புலியூர் எஸ்.டி.குப்புசாமி 13.5.2020, முத்தூர் சு.சிதம்பரம் 13.5.2020, திருவையாறு ஆர்.மங்கையர்க்கரசி 15.5.2020, காவேரிப்பட்டணம் குமுதா 15.5.2020, மயிலை கா.கர்ணம்மா (வயது 84) 18.5.2020, திருச்சி சைவராஜ் (வயது 75) 18.5.2020,  திருப்பூர் மிசா இரா.முருகேசன் 20.5.2020, கோமதி திருவாசகம் 21.5.2020, ஆவடி பவுனம்மாள் 21.5.2020, செங்கம் கு.ராஜா 22.5.2020, வவ்வாலடி கிருஷ்ணன் (வயது 92) 24.5.2020, தச்சங்குறிச்சி கு.ரொக்கப்புலி ()நடராஜன்  24.5.2020, கரூர் காமராஜ் (வயது 53) 26.5.2020, சட்டஎரிப்புப்போராட்ட வீரர் கோமாக்குடி முத்தண்ணா (வயது 87) 27.5.2020,  ராஜம் அரங்கசாமி (வயது 87) 27.5.2020, பட்டீசுவரம் சோழன் மாளிகை நா.முத்து (வயது 85) 29.5.2020, தஞ்சை புதுமாத்தூர் பெரியசாமி(வயது 89) 1.6.2020, பொறியாளர் சோம.பொன்னுசாமி 2.6.2020, கே.என்.ஜெகதீசன் (வயது 87) 3.6.2020, மயிலாடுதுறை போலீஸ் நா. சாமிநாதன் (வயது 75) 5.6.2020, பொள்ளாச்சி ஜமீன் ஊத்துக்குளி தி..ரவி (வயது 53) 5.6.2020, செய்யாறு செல்வி அம்மாள் (வயது 80) 7.6.2020, கடலூர் கோ.குப்புசாமி (வயது 85) 13.6.2020, ராயகிரி முத்துக்குமாரசாமி (வயது 46) 17.6.2020, சட்ட எரிப்பு வீரர் விக்கிர பாண்டியம் கோ.கணேசன் 18.6.2020, கண்டாச்சிபுரம்  .ஏழுமலை (வயது 50) 21.6.2020, ஆலங்காயம்  புலவர் அண்ணாமலை 23.6.2020, கீழ்ப்பென்னாத்தூர் வி.தேவராசன் 23.6.2020, பொன்னேரி மாரியம்மாள் 26.6.2020, வடலூர் கிருஷ்ணகாந்தம்  2.7.2020, சி.பால் (வயது 96) 10.7.2020, வடகரை கிருஷ்ணவேணி (வயது 85) 11.7.2020, லால்குடிவே.சுசீலா 13.7.2020, ராஜூ (வயது 72) 25.7.2020, திங்கள்சந்தை பெ.சுப்பிரமணியம் (வயது 91) 25.7.2020, தருமபுரி வகுத்துப்பட்டு ருக்கு அம்மாள் (வயது 85) 28.7.2020, இராஜபாளையம் இல.ஜெயலட்சுமி  29.7.2020, டாக்டர் ஆர்.ஷ்யாம்சுந்தர் 29.7.2020, மதுரை மண்டல திராவிடர் கழகத் தலைவர் மா.பவுன்ராசா (5.7.2020), காரைக்கால் மண்டல திராவிடர் கழகத் தலைவர் ஜி.கே.நாராயணசாமி (15.9.2020),  பழனி மாவட்டக் கழக செயலாளர் நல்லதம்பி, முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் காப்பாளர் நத்தம் சி.பி.கண்ணு (18.4.2020), கழகக் காப்பாளர் காவிரிப்பூம்பட்டிணம் தா.திருப்பதி (15.4.2020), கடலூர் நகர திராவிடர் கழகத் தலைவர் குப்புசாமி (18.6.2020), திங்கள் சந்தை சுப்பிரமணியம் (16.7.2020), வியாசர்பாடி .தணிகாசலம் (28.7.2020), விருகம்பாக்கம் நாதன் (குடந்தை)  (8.4.2020), பேபி இர.குமார் (29.9.2020), கோவிந்தகுடி ஆசிரியர் தெட்சிணாமூர்த்தி (5.10.2020), குடந்தை .பிழைபொறுத்தான் (30.9.2020), மன்னை பழனிவேலு (9.8.2020). தேவக்கோட்டை சுயமரியாதை வீரர், சூறாவளி கொ.லட்சுமணன் (27.08.2020). கல்பாக்கம் வேம்பையன் (29.08.2020), கும்பகோணம் பத்மாவதி (14.9.2020), கடலூர் அரங்க.வீரமணி (10.9.2020), கரூர் கருப்பையா (6.10.2020), நெய்வேலி தனக்கொடி (13.10.2020), கிருட்டிணகிரி கே.வி.சண்முகம் (14.10.2020), பழனி கே.பி.காத்தாயம்மாள் (14.10.2020), தஞ்சை சி.பழனியாண்டி (31.10.2020), பெருவளப்பூர் இரா.அம்புஜம் (31.10.2020), நைனார்பாளயைம் கு.அண்டாரன் (3.11.2020), லால்குடி அமிர்தம் (11.11.2020), புதுவை ஜி.கே.அன்பரசன் (14.11.2020), காரைக்குடி அரவிந்தகுமார் (18.11.2020), திருச்சி .சண்முகம் (28.11.2020), சென்னை - சூளைமேடு கோபாலகிருஷ்ணன் (2.12.2020), செஞ்சி குப்புசாமி (2.12.2020), செங்கல்பட்டு தங்கம்மாள் (10.12.2020), பட்டுக்கோட்டை கே.சுப்புராயலு (10.12.2020), காரைக்குடி .சந்திரசேகரன் (16.12.2020), ஈரோடு பி.என்.நடேசன் (18.12.2020), திருவள்ளூர் - கர்லபாக்கம் பெருமாள் (20.12.2020), காட்பாடி லத்தேரி நாகல் சீனு முனிரத்தினம் (21.12.2020), சிங்கப்பூர் ராஜூ குணசேகரன் (23.12.2020), தமிழக சட்டமன்ற மேனாள் உறுப்பினர் யசோதா (27.12.2020), திருச்சி ஜே.பிரகாஷ் (30.12.2020), தூத்துக்குடி மாவட்டத் தலைவர் தி..பெரியாரடியான் (19.09.2020). சுயமரியாதை வீரர் தாடி சிதம்பரம் (22.09.2020). இசை சாதனையாளர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் (26.09.2020). ராணி ஆசிரியர்அ.மா.சாமி (09.10.2020), சிங்கப்பூர் நகைச்சுவை நடிகர் ஆரூர் சபாபதி (01.11.2020), பின்னையூர் பன்னீர்செல்வம் (அய்..எஸ். ஓய்வு) (15.11.2020), நாகர்கோயில் பழனி சங்கர நாராயணன் (மறைவு16.11.2020), குடந்தை எஸ்.ஆர். ராதா (மறைவு08.12.2020), ஈரோட்டுப் பூகம்பம் முரசொலி முகிலன் (14.12.2020), இயக்க செயல் வீரர் வில்லிவாக்கம் அர.சிங்காரவேலு (16.12.2020), எஸ். ஞானசேகர் (17.12.2020), நாகை நத்தம் நாத்திக சாக்ரடீஸ் (18.12.2020), மலேசிய திராவிடர் கழக மேனாள் தேசிய தலைவர் பி..எஸ்.மணியம் (18.12.2020), நெய்வேலி .தியாகராசன் (20.12.2020), எழுத்தாளர் இளவேனில் (03.01.2021), திருச்சி பீமநகர் முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் நீலமேகம் (16.01.2021), திண்டுக்கல் சுப. ஜெகநாதன் (24.01.2021), கண்ணுக்குடி சா. தண்டாயுதபாணி (27.01.2021), குறிஞ்சிப்பாடி பசுநாதன் (28.01.2021),, பூதலூர் கழகக் குடும்பத்தைச் சேர்ந்த பு.ஆதவன் (28.01.2021), உள்ளிக்கோட்டை பு.நெடுஞ்செழியன் (13.02.2021), மலேசியத் திராவிடர் கழக முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் நாக. ஜீவா (18.02.2021), மலேசிய தொண்டறச் செம்மல் கு.பாலசுப்பிரமணியன் (26.02.2021), கும்பகோணம் என்.அரியபுத்திரன் (21.1.2021), பம்மல் சி.முத்தையா (6.1.2021), நெல்லிக்குப்பம் பார்வதி (7.1.2021), சிதம்பரம் பக்கிரி (17.1.2021), கும்பகோணம் பி.ஜோசப் (21.1.2021), கரகத்திக்கோட்டை வி.பச்சைமுத்து (15.2.2021), சேலம் கே.சின்னராசு (15.2.2021), மன்னார்குடி பொ.நாடிமுத்து (23.2.2021), இராமநாதபுரம் டி.தங்கவேல் (23.2.2021), லால்குடி வெங்கடாசலம் (26.2.2021) ஆகியோர் மறைவிற்கு திராவிடர் கழகப்பொதுக்குழு தனது இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம் எண் 2:

நடைபெறவிருக்கும்தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலும் - நமது கடமையும்!

தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் ஆறாம் தேதி நடைபெற உள்ள 16 ஆவது சட்டப்பேரவைத் தேர்தலில், தி.மு.. தலைமையில் காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய ஓர் அணியும், ...தி.மு.. தலைமையின்கீழ் பா... உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய மற்றொரு அணியும் போட்டியிடுகின்றன.

‘‘போட்டியிடும் இரண்டு முக்கிய கூட்டணிகளில் தி.மு.. தலைமையில் உள்ள மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி - கொள்கை லட்சியங்களால் உருவான கூட்டணி. மற்றொன்று .தி.மு..வின் தலைமை என்றாலும், பா...வின் ஆணையை ஏற்று செயல்படும் கூட்டணி; கொள்கைக்கும், கூட்டணிக்கும் சம்பந்த மில்லை என்று பகிரங்கமாகவே சொல்வதற்கு வெட்கப் படாத ஒரு கூட்டணி.

வேறு சில அணிகளும் உண்டு என்றாலும், அவை கவனத்துக்கு உரியவையல்ல. மறைமுகமாக பா... - .தி.மு.. கூட்டணிக்கு வலிமை சேர்க்கவே உரு வாக்கப்பட்ட கூட்டணியாகும்!

தி.மு.. அணியைப் பொறுத்தவரையில் மதச் சார்பின்மை சமூகநீதி, சமதர்மம், சமத்துவம் பாலியல் நீதி, மாநில சுயாட்சி, மொழி, பண்பாட்டுப் பாதுகாப்பு, சமூக சீர்திருத்தம் ஆகிய முற்போக்குக் கோட்பாடுகளைக் கொண்ட அணியாகும்.

ஊழலற்ற - கருத்துரிமைக்குத் தங்கு தடையற்ற - அனைவருக்கும் அனைத்தும் என்ற சீரிய நோக்கோடு வளர்ச்சித் திட்டங்களை வகுத்து, மக்கள் நலக் கண்ணோட்டத்தோடு தேர்தல் களம் காணும் அணிதான் தி.மு.. தலைமையிலான லட்சியக் கூட்டணியாகும்.

...தி.மு.. தலைமையில், பா...வை உள்ள டக்கிய அணி என்று கூறப்பட்டாலும், அந்த அணியில் ஆதிக்கம் செலுத்தக் கூடியது மத்தியில் ஆளும் பா... தலைமையிலான அணியே என்பது வெளிப்படை யாகவே தெரிகிறது.

அண்ணாவின் பெயரையும்,திராவிட' என்ற கலாச்சாரப் பண்பாட்டுப் பெயரையும் கட்சியிலும் அண்ணாவின் உருவத்தைக் கொடியிலும் தாங்கியுள்ள அண்ணா தி.மு.. - அதற்கு முற்றிலும் முரண்பாடான பா...வுடன் முற்றிலும் இணைந்து செயல்படுவதும், அதன் அதிகாரத்துக்கும், கட்டளைக்கும் அடிபணிந்து செயல்படுவதும் எல்லோரும் அறிந்த வேதனையான உண்மையாகும்.

இந்திய அரசமைப்புச் சட்டத்தில் உறுதி செய்யப் பட்டுள்ள சமூகநீதி, மதச்சார்பின்மை, சோசலிசம், மாநில உரிமைகள் என்பவைகளுக்கு முற்றிலும் விரோதமான சித்தாந்தத்தையும், செயல்முறையையும் தனது இரத்த வோட்டமாகக் கொண்டு நொடிதொறும் நொடிதொறும் அதே சிந்தனையோடும், செயல்பாட்டோடும் இயங்கக் கூடியது ஆர்.எஸ்.எஸ். சின் அரசியல் பிரிவான பாரதீய ஜனதா கட்சியாகும்.

தேர்தல் களத்தில்லேடியா - மோடியா?' என்று சவால் விட்ட செல்வி  ஜெயலலிதா அம்மையாரின் ஆட்சியை அமைக்கப் போகிறேன் என்று மூச்சுக்கு முன்னூறு தடவை கூறிக் கொண்டிருக்கும் ...தி.மு.. அந்த வகையிலும் சுயநலம், பதவி வெறி, மடியில் கனம் இவற்றின் காரணமாக அக்கட்சியின் இரட்டைத் தலைமைச் சிக்கல், அக்கட்சிக்கே துரோகம் இழைக்கும் வேலையில் ...தி.மு.. செயல்பட்டு வருவதை அடையாளம் காண வேண்டும் என்று தமிழ்நாட்டு வாக்காளர்ப் பெருமக்களை இப்பொதுக்குழுக் கேட்டுக் கொள்கிறது.

மாநில  சுயாட்சி, இருமொழிக் கொள்கை, தமிழ் உணர்வு, பண்பாடு, சமூகநீதி, மதச்சார்பின்மை, சமத்துவம்  பெண்ணுரிமை, மனிதநேயம் ஆகியவற்றில் அறிஞர் அண்ணாவின் ஆணித்தரமான லட்சிய நிலைப்பாடு களைத் தூர எறிந்து, ‘‘ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம், ஒரே கலாச்சாரம்'' என்ற கோட்பாடு உடைய ஆர்.எஸ்.எசை தாய் நிறுவனமாகக் கொண்ட பா...வுடன் கூட்டணி என்பதையும் கடந்து பா...வுக்கு அடிமை முறிச் சீட்டு எழுதிக் கொடுக்காத குறை என்கிற அளவுக்கு ...தி.மு.. ஆட்சி எல்லா வகைகளிலும் தோல்வி யுற்றுச் சீரழிந்து கிடப்பதை இப்பொதுக்குழு தமிழ்ப் பெருமக்களுக்கு அடையாளம் காட்டுகிறது.

தமிழ் அடையாளம் காட்டி, தமிழ்நாட்டில் கால் பதிய வைக்கும் பா... - முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர் களின் முயற்சியால் வந்த செம்மொழி நிறுவனத்தை சிதைத்து வருவதை மறந்துவிட முடியாது.

தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், திருவள்ளுவர், எம்.ஜி.ஆர். சிலைகளை அவமதிக்கும் காவிகளான குற்றவாளிகள்மீது நடவடிக்கை எடுக்கத் தவறிய - தவறி வருகிற தமிழக அரசை மன்னிக்கவே முடியாது - கூடாது.

மாநில சுயாட்சிஎன்ற சுய உரிமைக் கொள்கையைக் கைவிட்டதால், மத்திய அரசிடமிருந்து - உரிமையுடன் கூடிய ஜி.எஸ்.டி.மூலம் பெறவேண்டிய நிதியைப் பெறு வதிலும், இயற்கைப் பேரிடர் காலங்களில் கிடைக்க வேண்டிய நிதியைப் பெறுவதிலும் பெருந்தோல்வியைக் கண்டும் வருவதால், தமிழ்நாட்டின் பொருளாதாரம் மிகவும் சீர்குலைந்துள்ளது.

தி.மு..  ஆட்சிக் காலத்தில் வெறும் 60 ஆயிரம் கோடி  ரூபாயாக இருந்த கடன் தொகை ...தி.மு.. ஆட்சியில்   5.78 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்து விட்டது. ஒவ்வொரு குடிமகன் தலையிலும் ரூ.62 ஆயிரம் கடன் என்ற பரிதாப நிலைதான் தமிழ்நாட்டின் பொருளாதார நிலை! எதிலும் ஊழல் - ஊழல்  - நிர்வாகச் சீர்கேடு - சீர்கேடு இவற்றின் ஒட்டுமொத்த வடிவமே .தி.மு.. ஆட்சி!

சமூகநீதியில் இந்தியத் துணைக் கண்டத்திற்கே வழிகாட்டும் - திராவிட இயக்கத்தின், தனித்தன்மை வார்ப்பான சமூகநீதிக் கொள்கையிலும், பா...வின் சமூகநீதிக்கு எதிரான செயல்பாட்டினை எதிர்த்து வெற்றி பெறும் வலிமையை இழந்து தவிக்கிறது தமிழக .தி.மு.. ஆட்சி.

சமூக நீதிக்கு எதிரானநீட்' கூடாது என்று தமிழ்நாட்டு மக்களின் ஒட்டுமொத்த உணர்வின் அடிப்படையில் தமிழ்நாடு சட்டப்பேரவையில் இரு மசோதாக்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டும், தனது இணை பிரியாக் கூட்டணி கட்சியான ஆளும் பா... அரசிட மிருந்து ஒப்புதல் பெற முடியாத நிலையில், ஒடுக்கப்பட்ட மக்களின், கிராமப்புற மக்களின், ஏழை, எளிய முதல் தலைமுறையாகப் படிக்கும் மக்களின் தலையில் பேரிடி விழுந்த நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டது!

அரசமைப்புச் சட்டத்துக்கும், நீதிமன்ற தீர்ப்பு களுக்கும் முற்றிலும் விரோதமாக மத்திய உயர்ஜாதி பா... ஆட்சியால் கொண்டு வரப்பட்ட, ‘‘பொருளா தாரத்தில் நலிந்த உயர்ஜாதியினருக்கு 10 விழுக்காடு இட ஒதுக்கீடு'' என்பதை ஏற்கமாட்டோம் என்று ஒரு பக்கத்தில் சொல்லிக் கொண்டு,  இன்னொரு பக்கத்தில் அண்ணா பல்கலைக் கழகம் மற்றும் தமிழ்நாட்டில் உள்ள தமிழ்நாடு அரசுக்கு உட்பட்ட சில பல்கலைக் கழகங்களில் குறிப்பிட்ட பாடங்களில் அந்த 10 விழுக்காடு இட ஒதுக்கீட்டை அனுமதித்ததைவிட துரோகமும், மத்திய பா... - அரசுக்கு நடுநடுங்கும் கோழைத்தனமும், தமிழ்நாட்டு மக்களால் எந்த வகையிலும் மன்னிக்கவேபட முடியாததாகும்.

மருத்துவக் கல்வியிலும் அகில இந்திய ஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்டோருக்குச் சட்டப்படி கிடைக்கவேண்டிய இட ஒதுக்கீட்டையும் கோட்டை விட்டிருக்கிறது .தி.மு.. அரசு.

தமிழ்நாடு தேர்வாணையம் நடத்தும் தேர்வில் வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்களும் போட்டியிட்டு வேலை வாய்ப்பைப் பெறலாம் என்ற மாபெரும் துரோகத் தைச் செய்திருப்பது .தி.மு.. ஆட்சியே!

புதிய தேசியக் கல்விக் கொள்கை என்னும் பெயரால் இந்தி, சமஸ்கிருதத் திணிப்பு, குலக்கல்வித் திட்டம், பட்டப் படிப்புக்கும் நுழைவுத் தேர்வு இவற்றைக் கொண்டுவரும் பா...வுடன் இணைந்து கூட்டுச் சேர்ந்து தேர்தலில் போட்டியிடும் துரோகமும், அவலமும் இன்னொரு பக்கம்!

ரூபாய் மதிப்பு இழப்பு' என்பதன்மூலம் இந்தியாவில் மிகப்பெரிய பொருளாதாரச் சீரழிவு, சிறு, குறு, நடுத்தரத் தொழில்கள் பெரும் அளவு பாதிப்பு, வேலையிழப்பு அதிகரிப்பு, மாநில அரசின் அதிகாரத்துக்கு உள்பட்ட விவசாயத் துறையில் மத்திய பா... அரசு தலையிட்டு, தன்னிச்சையாக விவசாயிகளின் தலையில் மரண அடியைக் கொடுக்கும் வகையில் இயற்றப்பட்ட மூன்று சட்டங்கள் - அந்தச் சட்டங்கள் நிறைவேற்றப்பட துணை போன ...தி.மு..வின் நிலைப்பாடு - காவிரியின் குறுக்கே மேகதாது அணையினைக் கட்ட கருநாட கத்துக்கு அனுமதி அளிக்கும் மத்திய பா... அரசுடன் கூட்டணி.

தமிழ்நாட்டு மக்களின் உணர்வுக்கும், உரிமைக்கும் எதிரான வகையில் மீத்தேன், ஹைட்ரோ கார்பன், ஸ்டெர்லைட் ஆலை திறப்பு, எட்டுவழிச் சாலை போன்ற திட்டங்களை மத்திய அரசு முரட்டுத்தனமாக செயல்படத் துடிக்கும் முனைப்பு. அதனைத் தடுக்க முடியாத .தி.மு.. அரசின் பரிதாபம்.

ஆண்டுக்கு இரண்டு கோடி பேருக்கு வேலை வாய்ப்புத் தருவதாகப் பொய்யான மத்திய மோடி அரசின் வாக்குறுதி,  இலட்சக்கணக்கான இளைஞர்கள் வேலையின்றித் தவிக்கும் ஒரு காலகட்டத்தில், அரசு ஊழி யர்களின் ஓய்வு வயதை 58-லிருந்து 60 ஆக உயர்த்திய தமிழ்நாடு அரசின் ஏமாற்றுத்தனம் (ஓய்வு பெறும் பணியாளர்களுக்கு அளிக்கப்படவேண்டிய கிராஜூட்டி போன்ற தொகையைக் கொடுக்க இயலாத பொருளாதார நெருக்கடியே காரணம் ஆகும்).

10 ஆண்டுகள் ஆட்சி அதிகாரத்தில் இருந்தும் சாதிக்க முடியாதவற்றை தேர்தல் நெருங்கும் நேரத்தில் வாக்காளர்களுக்கு அள்ளி வீசும் .தி.மு..வின் புதிய வாக்குறுதிகள் அசல் ஏமாற்றுத் தந்திரமே! வாக்காளப் பெருமக்கள் ஏமாறக் கூடாது.

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையில் உறுதி செய்யப்பட்ட சோசலிசம் என்பதற்கு நேர் விரோதமாக அரசுத் துறைகளைக் கார்ப்பரேட்டுகளுக்குத் தாரை வார்ப்பது - அதன்மூலம் இட ஒதுக்கீட்டிற்கே இடமில்லாமல் செய்வது இன்னோரன்ன செயல்பாடு களால் மத்திய பா... அரசு மக்கள்முன் மிகப்பெரிய தோல்வியைக் கண்டு இருக்கிறது. அதன் தவறான அனைத்து நடவடிக்கைகளுக்கும் கண்ணை மூடிக் கொண்டு துணை போவது தமிழ்நாட்டை ஆளும் ...தி.மு.. அரசே!

இந்த நிலையில், ...தி.மு.. அதனோடு கூட்டுச் சேர்ந்த பா... உள்ளிட்ட கட்சிகளையும் நடக்க இருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் படுதோல்வியை அடையச் செய்யவேண்டும் என்று தமிழக வாக்காளர்ப் பெருமக்களை இப்பொதுக்குழு ஒருமனதாகக் கேட்டுக் கொள்கிறது. .தி.மு.. வெற்றி பெற்றால் ஆட்சியில், அமைச்சரவையில் பா... பங்கு ஏற்கும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ள கருத்து அபாயகரமானது என்பதை தமிழ்ப் பெருமக்கள் உணரவேண்டும்.

தனது கடந்த கால ஆட்சியின்போது அளப்பரிய சாதனைகளை நாட்டு மக்களுக்குச் செய்து வரலாறு படைத்தது தி.மு.. ஆட்சியேயாகும்.

மேலும் பத்தாண்டு நோக்கு என்ற முறையில், தி.மு.. தலைவர் தளபதி மு..ஸ்டாலின் அவர்களால் கடந்த 7 ஆம் தேதி திருச்சி சிறுகனூரில் அறிவிக்கப்பட்ட தொலைநோக்கு திட்டங்கள் என்பது - இந்தியத் துணைக் கண்டத்திற்கே வழிகாட்டக் கூடிய உன்னதமான மக்கள் வளர்ச்சிக் கண்ணோட்டத்தில் அறிவிக்கப்பட்ட- மிகவும் வரவேற்கத்தக்க ஒன்றாகும்.

எதிர்க்கட்சியாகவும் கடந்த 10 ஆண்டுகாலம் தி.மு.. மிகச் சிறந்த முறையில் பணியாற்றி இருக்கிறது. தமிழ் நாட்டு உரிமைகளுக்காக ஏராளமான களங்களை அமைத்துப் போராடிப் போராடி புத்தெழுச்சியை ஏற்படுத்தியிருப்பதும் தி.மு..வே!

அதன் தலைமையில் அமைந்துள்ள காங்கிரஸ், இடதுசாரிகள் மற்றும் பல்வேறு முற்போக்குக் கட்சிகள், அமைப்புகள் மதச்சார்பின்மையிலும், சமூகநீதியிலும், தமிழ்நாட்டு மக்களின் வளர்ச்சியிலும் அக்கறையும், ஆர்வமும் கொண்ட ஜனநாயக முற்பாக்குச் சக்திகள் என்பதால், நடக்க இருக்கும் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.. தலைமையிலான கூட்டணியை மிகப்பெரிய அளவில் வெற்றி பெறச் செய்வதற்கு  தமிழ்நாட்டு வாக்காளர்ப் பெருமக்கள் பேராதரவைத் தருமாறு திராவிடர் கழகப் பொதுக்குழு கனிவுடன் கேட்டுக்கொள்கிறது.

நடக்கவிருக்கும் தேர்தல் என்பது வெறும் பொரு ளாதாரப் பிரச்சினையை மய்யப்படுத்துவது மட்டுமல்ல; அதைவிட முக்கியமாக காலங்காலமாய்ப் போராடிப் பெற்ற சமூகநீதிக் காப்பு - மதச்சார்பின்மையைக் காக்கும் ஓர் அணி  - மதச்சார்பு - சமூக அநீதி எனும் மற்றொரு அணி என்ற இந்த இரு அணிகளுக்கிடையிலான சித்தாந்தப் போராட்டம் என்பதையும் மனதிற்கொள்ள வேண்டும் என்றும், சமதர்ம, சமூகநீதி, மதச்சார்பின்மை - நாட்டு வளர்ச்சி உள்ளிட்ட கொள்கை வெற்றி பெற தி.மு.. அணிக்கே வாக்களிக்க வேண்டுமாய் இப்பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது.

மண்ணின் மைந்தர்களான மக்களை மத ரீதியாக, ஜாதி ரீதியாக பிரித்து, சிறுபான்மையினர் குடியுரிமையின்றியும் வாழவேண்டும் என்ற கொள்கையுடைய ஆர்.எஸ்.எஸ். - சங் பரிவார் - பா... உள்ளிட்ட  வெறுப்பை வளர்க்கும் சக்திகளான இந்தப் பிற்போக்குச் சக்திகள், கட்சிகள் தமிழ் மண்ணில் தலையெடுக்க அனுமதிக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருக்க வேண்டுமாயும் இவற்றிற்குத் துணை போகும் ...தி. மு..வையும் அதன் கூட்டணியையும் படுதோல்வியுறச் செய்யவேண்டும்; அதற்கு ஆக்கப்பூர்வ மாற்று தி.மு.. கூட்டணியே என்பது அதன் கொள்கை திட்டங்களே சான்றாகும். தி.மு.. அணியின் வெற்றி என்பது வெகு மக்கள் நலவாழ்வின் வெற்றி என்பதையும் மனதிற் கொண்டு வாக்களிக்குமாறு இப்பொதுக் குழு தமிழக வாக்காளர்ப் பெருமக்களை முக்கியமாகக் கேட்டுக் கொள்கிறது.

ஆட்சி மாற்றம் தேவை என்பது வெறும் காட்சி மாற்றத்திற்காக அல்ல; நம் இனத்தின் மீட்சிக்கான மாற்றாக - விடியலாக அமையவேண்டும் என்ற பொறுப் புணர்ச்சி காரணமாகவே இந்த வேண்டுகோளை வாக்காளப் பெருமக்கள் முன் வைக்கிறோம்.

வெல்லட்டும் திராவிடம்!

() புதுச்சேரியில் நான்கே முக்கால் ஆண்டுகாலம் நடைபெற்ற ஒரு நிலையான நல்லாட்சியைக் குறுக்கு வழியில் கவிழ்த்த பா...வுக்கும் நீண்ட காலம் பதவிகளை அனுபவித்துவிட்டுக் கடைசி நேரத்தில், முதுகில் குத்தி கட்சிக்குத் துரோகம் இழைத்தவர்களுக்கும் தக்க பாடம் கற்பிக்கும் வகையில் புதுச்சேரி மாநிலத்தில் காங்கிரஸ் - தி.மு.. கூட்டணியைப் பெரு வெற்றி பெறச் செய்யவேண்டுமாய் புதுச்சேரி மாநில வாக்காளப் பெரு மக்களை இப்பொதுக்குழு கனிவுடன் கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் எண் 3

மத்திய - மாநில அரசுகளின்மோசமான செயல்பாடுகள்!

1. நீட் மற்றும் நெக்ஸ்ட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும்.

2. மருத்துவப் படிப்பில் அகில இந்திய தொகுப்பு இடங்கள் தமிழ்நாடு அளிப்பதை நிறுத்திட வேண்டும்.

3. அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும், மருத்துவப் படிப்பில் சேர 7.5 சதவிகித உள் ஒதுக்கீடு தேவை.

4. அண்ணா பல்கலைக் கழகம் உள்ளிட்ட தமிழ்நாடு அரசின் அதிகாரத்திற்கு உட்பட்ட பல்கலைக் கழகங் களில் அனைத்துப் படிப்புகளிலும் 69 சதவிகித இட ஒதுக்கீடு உறுதி செய்திடவேண்டும்.

5. தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளில் தமிழ்நாட்டவர்க்கே வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும்.

6. பொதுத் துறை வங்கிகளில் கிளார்க் பதவிக்கான தேர்வில் தமிழ் எழுதப் படிக்கத் தெரிந்திருப்பது கட்டாயம் என்பதை உறுதி செய்யவேண்டும். தற்போது முன்னுரிமை என்ற பெயரில் வெளிமாநிலத்தவர் சேரும் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

7. மாநிலத்தில் உள்ள மத்திய அரசு  / பொதுத் துறை நிறுவனங்களில் குரூப் பி மற்றும் சி பதவிகளுக்கு அந்தந்த மாநில மக்களுக்கு முழு உரிமை அளிக்கும் விதத்தில் சட்டம் இயற்றப்படவேண்டும்.

8. யு.பி.எஸ்.சி., எஸ்.எஸ்.சி., போன்ற மத்திய அரசு மற்றும் வங்கி உள்ளிட்ட பொதுத் துறை நிறுவனங்களில் உள்ள பதவிகளுக்கான தேர்வுகள் அனைத்தும், அரசமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் கூறப்பட்டுள்ள தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகள் அனைத்திலும் நடத்தப்படவேண்டும்.

9. மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை முற்றிலும் விலக்கிக் கொள்ளப்படவேண்டும்.

10. முத்தமிழ் அறிஞர் கலைஞர் கொண்டு வந்த அனைவரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டத்தின்படி, தற்போது பணிக்காக காத்திருக்கும் தேர்வு பெற்றவர்கள் அனைவருக்கும் அர்ச்சகர் பணி அளிக்கப்படவேண்டும்.

11. 2006 இல் முத்தமிழ் அறிஞர் கலைஞர் தலைமையில் நடைபெற்ற ஆட்சியில் சென்னை பல்கலைக் கழகத்தில் செயல்பட்டு வந்த சமூக சீர்திருத்த ஆய்வு மய்ய மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

12. திராவிடர் இயக்க வரலாறு, நீதிகட்சிச் சாதனைகள், வைக்கம் போராட்ட வரலாறு, வகுப்புவாரி உரிமை குலக்கல்வித் திட்டம் ரத்துக்கான போராட்டம், 1957 சட்ட எரிப்புப் போராட்டம் குறித்து கல்லூரி மற்றும் பள்ளிப் பாடங்களில் இடம்பெறவேண்டும்.

13. மாவட்டம் தோறும், அரசுப் பணி தேர்வுக்கான பயிற்சி மய்யங்கள், தொழில் முனைவோர்க்கான வழிக்காட்டு மய்யங்கள் உருவாக்கி, பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோருக்கு அரசு இலவச பயிற்சி அளிக்க வேண்டும்.

14. விவசாயிகளின் விளைபொருட்கள் வீணாகாத வண்ணம், தென் மாவட்டங்களில் குளிர் சாதனக் கிடங்குகளை அமைக்கவேண்டும்.

15. நீதித்துறையில் சமூகநீதியை நிலை நாட்டும் விதமாக, உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றங்களில் நிய மனங்களில் இட ஒதுக்கீடு அளிக்கப்படவேண்டும்.

16. உயர்ஜாதியினரில் பொருளாதார அடிப்படையில் நலிந்தோருக்கு10 சதவிகித இட ஒதுக்கீடு எனும் சட்ட விரோத நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு விரோத சட்டத்தை மத்தியஅரசு ரத்து செய்யவேண்டும்.

17. நீதிமன்றங்களிலும் மற்றும் சட்டமன்றம், நாடாளு மன்றத்திலும் பெண்களுக்கான உள் ஒதுக்கீட்டுடன் இட ஒதுக்கீடு சட்டத்திருத்தம் நிறைவேற்றப்பட வேண்டும்.

18. தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு / பொதுத் துறை நிறுவனங்களில் இட ஒதுக்கீடு முறை சரியாகப்  பின் பற்றப்படுகிறதா? என்பதை கண்டறிந்து உரிய அறி வுறுத்தல்களைத் தந்திட தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் ஆணையத்திற்கு உரிய அதிகாரம் வழங்கிட சட்டம் இயற்றப்படவேண்டும்.

மேற்கண்ட முக்கிய விழுமியங்களை மத்திய, மாநில அரசுகள் கவனத்தில் கொண்டு செயல்படவேண்டும் என்று இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண் 4 ()

மூடநம்பிக்கைகள் முறியடிக்கப்பட...

மதம், ஜோதிட நம்பிக்கைகளால் பெற்ற மகன், மகள்களையே கொலை செய்யும், நரபலி கொடுக்கும் கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படவேண்டும் - அறிவியலுக்குப் புறம்பான இவற்றைப்பற்றி பாடத் திட்டங்களில் மாணவர்களுக்குக் கற்பிக்கப்படவேண்டும்.

இந்திய அரசமைப்புச் சட்டம் 51-(எச்) மக்களிடத்தில் விஞ்ஞான மனப்பான்மையையும், சீர்திருத்த உணர் வையும் பரப்புதல் ஒவ்வொரு குடிமகனின் கடமை என்று கூறப்பட்டாலும், இது குறித்து அரசு அளவில் எந்த செயல்பாடும் இல்லை என்பதை இப்பொதுக்குழு சுட்டிக்காட்டுகிறது. அரசு சார்பில் அறிவியல், பகுத்தறிவுச் சிந்தனையாளர்கள் அடங்கிய குழு ஒன்றை மத்திய - மாநில அரசுகளே ஏற்படுத்தி, பிரச்சாரப் பணியில் ஈடுபட வைக்க வேண்டும் என்றும், இந்தப் பணியை மேற்கொள்ளும் சமூக சீர்திருத்த இயக்கங்களுக்கு அரசு தேவையான உதவிகளைச் செய்யவேண்டும் என்றும், குறிப்பாகக் காவல்துறை இத்தகைய பிரச்சாரங்களுக்கு முட்டுக்கட்டை போடக்கூடாது என்றும் இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.

தீர்மானம் 4 ()

மதச்சார்புக்குச் சாவுமணி!

மதச்சார்பற்ற அரசின் மத்திய - மாநில அமைச்சர்கள் மத விழாக்களில் கலந்துகொள்வதும், நடவடிக்கைகளில் ஈடுபடுவதும், அவர்கள் பதவிப் பிரமாணம் ஏற்றுக்கொண் டுள்ள இந்திய அரசமைப்புச் சட்டத்தின் மதச்சார் பின்மைக்கு முற்றிலும் விரோதம் என்பதை இப் பொதுக்குழு சுட்டிக்காட்டுவதுடன், இதுபோன்ற நிகழ்ச் சிகளில் கலந்துகொள்வதை முற்றிலும் தவிர்க்கவேண்டும் என்றும், அரசு கட்டடங்களுக்குப் பூமி பூஜை என்ற பெயரால் மதச் சடங்குகள் நடத்துவதும், அவற்றில் அமைச்சர் - அரசு அதிகாரிகள் கலந்துகொள்வது சட்ட விரோதம் என்றும் இப்பொதுக்குழு சுட்டிக்காட்டுகிறது. அதுபோலவே அரசு அலுவலக வளாகங்களுக்குள் கோவில் முதலிய வழிபாட்டு நிலையங்களைக் கட்டுவது சட்ட விரோதம் என்றும் இப்பொதுக்குழு திட்டவட்ட மாகத் தெரிவித்துக் கொள்கிறது. குறிப்பாக கும்பகோணம் புதிய நகராட்சி அலுவலக வளாகத்தில் கோவில் எழுப் பப்படுவதை உடனடியாகக் கைவிடவேண்டும் என்றும் இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது. இல்லையேல் சட்ட நடவடிக்கைகளிலும், போராட்ட நடவடிக்கைகளிலும் ஈடுபட நேரும் என்றும் இப்பொதுக்குழு தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம் 5 ()

அழிபழி வழக்குகளை ரத்து செய்க!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் என்று கூறப்படுவோர் கடந்த 29 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் நிலையில், உச்சநீதிமன்றமும், தமிழ்நாடு அரசும் அவர்களை விடுதலை செய்ய ஒப்புதல் அளித் தும், மத்திய பா... அரசு அவர்களை விடுதலை செய்யாமல் இருப்பது சட்ட விரோதமும், மனித உரிமை விரோதமும், நியாய விரோதமும் ஆகும். மேலும் காலதாமதம் செய்யாமல் அவர்களைவிடுதலை' செய்யவேண்டும் என்றும், குறிப்பாக தன்னை விடுதலை செய்யவேண்டும் என்று கோரி பேரறிவாளன் தாக்கல் செய்த மனுவின்மீது உரிய கவனம் செலுத்தப்பட்டு விரைந்து விடுதலை செய்யுமாறு இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் 5 ()

ஸ்டெர்லைட் எதிர்ப்பு, குடியுரிமைச் சட்டம் எதிர்ப்பு, அணு உலை எதிர்ப்பு, ஹைட்ரோ கார்பன் எதிர்ப்பு, நியூட்ரினோ எதிர்ப்பு, தாது மணல் கடத்தல் எதிர்ப்பு, தமிழீழ இனப் படுகொலை எதிர்ப்பு, கெயில் குழாய் எதிர்ப்பு, முல்லை பெரியாறு உரிமை மீட்பு, எட்டுவழிச் சாலை எதிர்ப்பு, ஜாதி வன்கொடுமைக்கு எதிரான போராட்டம் - புதிய கல்விக் கொள்கை எதிர்ப்பு, பெரியார் சிலைக்கு மாலை அணிவித்ததற்கான வழக்கு என்ற வகையில், தேச துரோகச் சட்டம், தேசிய பாதுகாப்புச் சட்டம், குண்டர் சட்டம், ரவுடிப் பட்டியல், தடா, பொடா சட்டம், .பா முதலிய பிரிவுகளில் விருப்பு - வெறுப்பின் அடிப்படையில் வழக்குப் புனையப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருக்கக் கூடியவர்களைச் சீர்தூக்கி விடுவித்தும், புனையப்பட்ட வழக்குகளை ரத்து செய்தும்,  நீண்ட காலமாக விசாரணைக் கைதிகள் என்ற பெயரால் அடைபட்டுக் கிடப்போரை விடுதலை செய்து மனித உரிமையைக் கட்டிக் காக்குமாறு மத்திய - மாநில அரசுகளை இப்பொதுக் குழு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.


Comments