சென்னையில் 16 தொகுதிகளில் 400 பேர் வேட்புமனு தாக்கல்

சென்னை, மார்ச் 20 சென்னையில் 16 தொகுதி களில் 400 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 6ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12ஆம் தேதி தொடங்கி நேற்றுடன் நிறைவடைந்தது.

 அந்த வகையில் சென்னையில் உள்ள 16 தொகுதிகளில் மொத்தம் 540-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டுள்ளன. நேற்று மட்டும் 100-க்கும் மேற்பட்ட மனுக்கள் தாக்கலாகி இருக்கிறது.

நேற்றிரவு 10 மணி நிலவரப்படி சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் 38 பேரும், பெரம்பூரில் 28 பேரும், கொளத்தூரில் 41 பேரும், வில்லிவாக்கத்தில் 18 பேரும், திரு.வி..நகரில் (தனி) 21 பேரும், எழும்பூரில் (தனி) 14 பேரும், ராயபுரத்தில் 28 பேரும், துறைமுகத்தில் 35 பேரும், சேப்பாக்கம்-திருவல்லிக் கேணியில் 27 பேரும், ஆயிரம் விளக்கில் 8 பேரும், அண்ணாநகரில் 15 பேரும், விருகம்பாக்கத்தில் 22 பேரும், சைதாப்பேட்டையில் 36 பேரும், தியாகராயநகரில் 21 பேரும், மயிலாப்பூரில் 24 பேரும், வேளச்சேரியில் 24 பேரும் போட்டியிட வேட்புமனுவை அளித்துள்ளனர்.

சென்னையில் உள்ள 16 தொகுதிகளில் எத்தனை வேட்பு மனுக்கள் மொத்தம் பெறப்பட்டுள்ளது. இதில் எத்தனை பேர் அளித்துள்ளனர் என்ற பட்டியல் இன்று அதிகாரபூர்வமாக வெளியாகும்.

Comments