சிங்கப்பூர், மார்ச் 30- சிங்கப்பூ ரில் வசித்து வரும் இந்திய வம்சாவளியை சேர்ந்த தேவ ராஜ் தமிழ்செல்வன் என்ப வர், தனது தோழியை தாக்கி யதற்காக காவல்துறையினர் அவரை கடந்த செப்டம்பர் மாதம் கைது செய்தனர். அப் போது அவருக்கு மூச்சுத்திண றல் ஏற்படவே அங்குள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு காவல்துறையினர் மற்றும் மருத்துவமனை ஊழி யர்கள் எச்சரித்தும் கேட்கா மல் தனது முகக்கவசத்தை அகற்றி, காவலரை நோக்கி வேண்டுமென்றே இருமி தகாத வார்த்தைகளும் பேசினார்.
இது தொடர்பாக அவர் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட் டது. இந்த வழக்கை விசாரித்த மாவட்ட நீதிபதி செங் தியாம், தேவராஜ் தமிழ்செல்வனுக்கு 14 வாரம் சிறைத்தண்டனை விதித்து உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.