பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில்மார்ச்-14 இல் 28ஆவது பட்டமளிப்பு விழா

வல்லம், மார்ச்11, கல்விப் பணியில் 33 ஆண்டுகளை நிறைவு செய்து, இந்தியாவின் தலைசிறந்த  முதன்மைப் பல்கலைக்கழக விருது பெற் றும்அதனைத் தொடர்ந்து முற்றிலும் மாணவியர்களால் தயாரித்த "மணியம்மையார் சாட்" எனும் செயற்கைக் கோளினை  விண்ணில் செலுத்தி சாதனை படைத்து  "ஆசியன் புக் ஆஃப் ரெக் கார்டு" சாதனைப் பட்டியலில் இடம்பெற்றுள்ள பெருமைக் குரிய மக்கள் பல்கலைக் கழகமாம்  பெரியார் மணி யம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவன நிகர் நிலைப் பல்கலைக்கழகத்தின் 28ஆம் பட்டமளிப்பு விழா எதிர்வரும் மார்ச் 14-ஆம் நாள் காலை 10.30  மணிக்கு பல்கலைக்கழக பல்நோக்கு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது.

சிறப்பு வாய்ந்த இந் நிகழ்ச்சிக்கு இப்பல்கலைக் கழகத்தின்  வேந்தர் டாக்டர் கி.வீரமணி அவர்கள் தலைமை வகித்திடவும், அகில இந்திய அளவில் ஆதிவாசிப்  பழங்குடி இன மக்களுக்கான சமூகப் போ ராளியும்; பழங்குடியினர் வகுப்பிலிருந்து கல்விப் பணியில் துணைவேந்தர் நிலைக்கு உயர்ந்து திறம்பட பணியாற்றும்; ஜார்கண்ட் மாநிலத்தின் எஸ்.கே.எம். பல்கலைக்கழகத்தின்  துணைவேந்தர் பேராசிரியர் சோனாஜாரியா மின்ஸ் அவர்கள் சிறப்பு விருந்தின ராகக் கலந்துகொண்டு பட்ட மளிப்பு விழாச் சிறப்புரை நிகழ்த்தவும்  உள்ளார்கள்.

இந்தப் பட்டமளிப்பு விழாவில் கட்டட எழிற்கலை, பொறியியல் தொழில் நுட்பம், கணினி அறிவியல் பொறியியல், கலை-அறிவியல் மற்றும் மேலாண்மைப் புலங் களின்   பல்வேறு துறைகளைச் சார்ந்த மொத்தம் 1172 மாண வர்களுக்கு  (இதில் 748 மாண வர்கள், 424 மாணவியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது)  பட்டம் அளிக்கப்பட உள் ளது. இதில் 26 மாணவர்கள் முனைவர் பட்டமும், 6 மாணவர்கள் ஆய்வு நிறைஞர் பட்டமும் பெற உள்ள னர்.மேலும், இவ்வாண்டில் தரவரிசையில் தகுதி பெறு பவர்களின் எண்ணிக்கை  72 ஆகும். இதில் 24 தங்கப் பதக்கமும், 21 வெள்ளிப் பதக்கமும், 19 வெண்கலப் பதக்கமும் விழா மேடையில் பெற உள்ளனர்.

பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் செ. வேலுசாமி வரவேற்புரை யாற்றிடவும், ஆட்சிமன்றக் குழு உறுப்பினர்கள் வீ.அன்பு ராஜ், இந்திய தொழில்நுட்பக் கழகப் பேராசிரியர் எஸ். மோகன், பாரதிதாசன் பல் கலைக்கழக மேனாள் துணைவேந்தர் பேராசிரியர் பெ.ஜெகதீசன், தமிழக காவல் துறை மேனாள் இயக்குநர்  .எக்ஸ். அலெக்சாண்டர் .கா.. மற்றும் சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர்  முரளிகுமரன் ஆகியோர் முன்னிலை வகித்துச் சிறப் பிக்கவும்  உள்ளனர்.

பல்கலைக்கழக இணை துணைவேந்தர் மற்றும் பதி வாளர் (பொறுப்பு) பேரா சிரியர் எஸ்.தேவதாஸ், தேர்வுக் கட்டுப்பாட்டு நெறி யாளர் பேராசிரியர்  சு.அசோகன் உள்ளிட்ட அனைத்து  புல முதன்மை யர்கள், மய்ய இயக்குநர்கள், துறைத் தலைவர்கள், பேரா சிரியர்கள்,  பணியாளர்கள் மற்றும் பெருமளவில் பெற் றோர்களும், மாணவர்களும் பங்கேற்க உள்ளனர்.

அனை வரும் முகக் கவசம் அணிந்து வருவதும்; சமூக இடைவெளி கடைப்பிடித்து பங்கேற்றுக்  கட்டுப்பாடு காத் திடவும் அறிவுறுத்தப்பட்டுள் ளது.  


Comments