மகிழ்ச்சியான நாடுகளில் இந்தியாவுக்கு 139-ஆவது இடம் பின்லாந்துக்கு முதல் இடம்

நியூயார்க், மார்ச் 22 உலகின் மகிழ்ச்சி யான நாடுகளின் பட்டியல் வெளியாகி இருக்கிறது. இதில் இந்தியாவுக்கு 139-ஆவது இடம் கிடைத்துள்ளது.

அய்க்கிய நாடுகள் சபையின், 2021-ஆம் ஆண்டுக்கான மகிழ்ச்சி அறிக்கை வெளியாகி இருக்கிறது. இந்த அறிக்கையின் சிறப்பம்சம், தங்கள் குடிமக்களை 149 உலக நாடுகள் எந்தளவு மகிழ்ச்சியாக வைத்திருக்கின்றன என்பதை அய்.நா. நிலையான வளர்ச்சி தீர்வுகள் நெட்வொர்க் பட்டியலிட்டுள்ளது.

குறிப்பாக, கேலப் உலக வாக்கெடுப்பு கேள்விகளின் அடிப்படையில் மகிழ்ச்சி ஆய்வு, உலக நாடுகளை வரிசைப்படுத் துகிறது. அதன் முடிவுகள், மொத்த உள்நாட்டு உற்பத்தி, சமூக பாதுகாப்பு உள்ளிட்ட பிற காரணிகளுடன் பொருத்திப்பார்த்து பட்டியலி டப்பட்டுள்ளது.

அந்த வகையில் உலகிலேயே மகிழ்ச்சி கரமான நாடாக, இந்த பட்டியலில் முதல் இடத்தை அய்ரோப்பிய நாடான பின்லாந்து பெற்றிருக்கிறது. முதல் 10 மகிழ்ச்சிகரமான நாடுகளின் பட்டியலில் பின்லாந்து, டென் மார்க், சுவிசர் லாந்து, அய்ஸ்லாந்து, நெதர் லாந்து, நார்வே, சுவீடன், லக்சம்பெர்க், நியூசி லாந்து, ஆஸ்தி ரியா ஆகியவை இடம் பெற்றுள்ளன. இந்த மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 139-ஆவது இடம் கிடைத்துள்ளது.

Comments