சட்டப் பேரவைத் தேர்தல் : சென்னையில் விதி மீறல்களை கண்காணிக்க 12 தனிப்படைகள் அமைப்பு

 சென்னை, மார்ச் 10 தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த சட்டமன்ற தேர்தலில் விதிமுறைகளை மீறி பிரச்சார பேனர், சுவரொட்டிகள், சின்னம் வரைவது மற்றும் நிர்ணயித்த கால அளவை விட அதிக நேரம் பேசுவது  உள்பட பல்வேறு விதிமீறல்களை கண் காணிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் மாநகர காவல் துறையினருக்கு உத்தரவிடப்பட்  டுள்ளது.

இதையடுத்து காவல்துறை ஆணையர் மகேஷ்குமார் உத்தரவுப் படி மாநகர காவல் எல்லையில் உள்ள 12  காவல் மாவட்டங்களுக்கு ஒரு தனிப்படை வீதம் 12 தனிப் படைகள் அமைக்கப்பட்டுள்ளது. காவல்துறை ஆணையர் அலுவ லகத்தில் உள்ள தேர்தல் கட்டுப் பாட்டு அறையை கண்காணிக்கும் காவல்துறை துணை ஆணையர் தலைமையில் இந்த 12 தனிப்படைகள்  இயங்கும் என்று உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அரசியல் கட்சிகள் நடத்து பொதுக்கூட்டம் மற்றும் தேர்தல் பிரச்சாரம் செய்யும் பகுதிகளில் இந்த தனிப்படைகள் கண்காணிப்பு பணிகளில் ஈடு படுவார்கள்.

இந்த தனிப்படையுடன் தேர்தல் அலுவலர் ஒருவரும் உடன் இருப்பார். தேர்தல் விதிகளை மீறும் அரசியல் கட்சிகள்மீது தனிப்படையினர் அளிக்கும் அறிக்கையின்படி சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரி காவல் நிலையத்தில் புகார் அளிப்பார். 

அதன்படி காவல்துறையினர் விதிகளை மீறிய அரசியல் கட்சிகள் மற்றும் கட்சி நிர்வாகிகள்மீது  வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுப் பார்கள் என  காவல்துறை உயரதி காரிகள் தெரிவித்துள்ளனர்.

Comments