பெரியார் மருந்தியல் கல்லூரியில் தொண்டறத் தாய் அன்னை மணியம்மையார் அவர்களின் 102ஆவது பிறந்தநாள்

திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரியில் தொண்டறத்தாய் அன்னை மணியம்மையார் அவர்களின் 102ஆவது பிறந்த நாளான 10.03.2021 காலை 9 மணியளவில் அன்னையார் அவர்களின் உருவப்படத்திற்கு கல்லூரியின் முதல்வர் முனைவர் இரா. செந்தாமரை அவர்கள் மாலை அணிவித்து அம்மா அவர்களின் தொண்டறப்பணிகள் குறித்து பணியாளர்கள் மத்தியில் உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் பேராசிரியர் முனைவர் .மு. இஸ்மாயில், துணை முதல்வர் முனைவர் கோ. கிருஷ்ணமூர்த்தி, பேராசிரியர்கள் மற்றும் பணித்தோழர்கள் கலந்து கொண்டு அன்னை மணியம்மையார் அவர்களுக்கு வீரவணக்கத்தை தெரிவித்துக் கொண்டனர்.

Comments