அமெரிக்க பெரியார் பன்னாட்டு மய்யம், திணை அமெரிக்கா, கலாட்டா நெட்டிசன் அமைப்புகளின் சார்பில் அன்னை மணியம்மையாரின் 102ஆவது பிறந்தநாள் சிறப்பு காணொலி

அமெரிக்காவில் தொண்டறச் செம்மல் அன்னை மணியம்மையாரின் 102ஆவது பிறந்தநாள்,  இணையவழி சிறப்பு காணொலி நிகழ்ச்சியாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சி ஒன்றரை மணி நேரத்திற்கு மிகச்சிறப்பாக நடந்தது.

இந்நிகழ்ச்சியில் அறுபதுக்கும் அதிகமான அமெரிக்க தமிழர்களும், கழக தோழர்களும், பெரியார் பற்றாளர்களும், பெரியார் பிஞ்சுகளும் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியை அமெரிக்க பெரியார் பன்னாட்டு மய்யத்தின் தலைவர் மருத் துவர் சோம.இளங்கோவன் மற்றும் அருள்செல்வி ஏற்பாடு செய்தார்கள்.

மருத்துவர் சோம.இளங்கோவன் வரவேற்புரை வழங் கினார். நிகழ்ச்சியின் தொடக்கமாக நாகம்மையார் குழந்தைகள் இல்ல காட்சிப்பதிவு பார்ப்போரின் மனதை நெகிழச்செய்வதாய் அமைந்தது. இதைத் தொடர்ந்து, திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்தின் காப்பாளர் தங்காத்தாள் அவர்களின் நேர்காணல் நிகழ்ந்தது. மருத்துவர் சோம.இளங்கோவன் கேள்விகள் கேட்க, தங்காத்தாள் அம்மா, அன்னை மணியம் மையாருடனான தன்னுடைய நினைவுகளையும், அவர்களது தொண்டறத்தையும், நாகம்மை குழந்தைகள் இல்லத்தின் வரலாற்றையும் பகிர்ந்து கொண்டார். அன்னையாரின் தாயுள் ளத்தின் எடுத்துக்காட்டாக, பச்சிளம் குழந்தைகளை அன்னை மணியம்மையார் அவர்கள் வளர்த்த விதத்தையும், எந்த பொது நிகழ்வுகளுக்கு சென்றாலும் தன்னுடனே அக்குழந்தைகளை தூக்கிச்சென்று பார்த்துக் கொண்டதையும் மற்றும் பல நிகழ் வுகளையும் பகிர்ந்து கொண்டது கேட்போருக்கு நெகிழ்ச்சியாக இருந்தது.

இந்நிகழ்ச்சியின் இரண்டாம் பகுதியாக, இளையோர் நிகழ்ச்சி (6-15 வயது சிறார்கள்) நடைபெற்றது. முதலில் வர்ஜினி யாவிலிருந்து இனியா மற்றும் இலக்கியா எழில்வடிவன் அன்னை மணியம்மையார் பற்றியும், அவரது தொண்டு மற்றும் அவர் வழிநடத்திய போராட்டங்கள் பற்றியும் அருமையாக கலந்துரையாடல் நிகழ்த்தினர்.  அடுத்து நியூ ஜெர்சியிலிருந்து இலக்கியா மற்றும் இளங்கதிர் இளமாறன், அன்னை மணியம் மையாரின் வாழ்க்கை வரலாறு, தொண்டறம், சிறப்புகள் பற்றி அழகாக, கருத்தாழமாக உரையாற்றினர்.  

அடுத்து சிறுவர்களின் சிலம்பம்  சுற்றிய காட்சிப்பதிவு ஒளிபரப்பப்பட்டது. இதனை தொகுத்து உதவி செய்தவர் செந்தில்குமார் ராசன் மற்றும் தமிழ்மணி சோமவேலாயுதம்.  மிகக் குறுகிய காலத்தில் மிகுந்த ஆர்வத்துடன் குழந்தைகள் சிலம்பம் சுற்றியது  அனைவரையும் கவர்ந்தது. இதில் பங்கேற்ற குழந்தைகள் - இனியா எழில்வடிவன், ராகவேந்தர் சுனில்குமார், நிலா இளங்கோ, குகனிதன் செந்தில், நிதின் கோவிந்தராஜ் , மோஹித் குமாரவடிவேல், முகுந்த் திருநாவுக்கரசு, முகுந்த் கிருஷ்ணகுமார், ரோஹித் குமாரவடிவேல், லக்சிதா சரவண குமார், தீக்சா தியாகராஜன், ஸ்ரேயா செந்தில்நாதன், யாழினி ரவிக்குமார், பாலக்ரித்திகா சுனில்குமார், நித்திலன் ரத்தினகுமார், சுஷிதா சுரேஷ், அதிதி கோவிந்தராஜ். இவர்களுடன் பிரதிபா கோவிந்தராஜ், ரவிக்குமார் வைத்தியலிங்கம், அறிவுப்பொன்னி துரை.சந்திரசேகரன் காண்போர் வியக்கும் அளவிற்கு சிலம்பம் சுற்றினர்.

அடுத்து கலந்துரையாடல் நிகழ்ச்சி சிறப்பாக நடந்தேறியது. இதில் திருச்சியிலிருந்து பேராசிரியர் வீரமணி, பேராசிரியர் அன்பழகன் சின்னையா, முனைவர்  இரா.செந்தாமரை, முனைவர் வா.நேரு, சிகாகோ சோம.வேலாயுதம், ஞானசேகரன், சரோஜா இளங்கோவன், அருள்செல்வி, வி.எழில்வடிவன் கலைவாணன், திணை ரவி, கலாட்டா நெட்டிசன் வியன் சில மணித்துளிகள் அன்னை மணியம்மையாரின் சிறப்புகளையும், நிகழ்ச்சியையும் பாராட்டி பேசினர்.

இந்நிகழ்ச்சியின் இரு பகுதிகளையும் மருத்துவர் சோம.இளங்கோவன்  மற்றும் தமிழ்மணி சோமவேலாயுதம் அருமை யாக தொகுத்து வழங்கினர்.

நிகழ்ச்சியின் இறுதியில் சிகாகோ ரவிக்குமார் வைத்திய லிங்கம் நன்றியுரை வழங்க இந்நிகழ்வு இனிதே முடிவுற்றது.

தொகுப்பு: அறிவுப்பொன்னி துரைசந்திரசேகரன்,

பெரியார் பன்னாட்டமைப்பின் செய்தி தொடர்பாளர்

Comments