அன்னை மணியம்மையார் 102ஆவது பிறந்த நாள் விழா

அன்னை மணியம்மையார் சிலைக்கு மாலை அணிவிப்புகழக மகளிர் அணி, மகளிர் பாசறை சார்பில் நடைபெற்ற நன்றி பெருவிழா

சென்னை,மார்ச்10- அன்னை மணியம்மையார் 102ஆவது பிறந்த நாள் விழா இன்று (10.3.2021) காலை சென்னை வேப்பேரி பெரியார் திடலில் திராவிடர் கழக மகளிரணி, மகளிர் பாசறையினரால் வெகு சிறப்பாக கொண்டா டப்பட்டது.

பெரியார் .வெ.ரா. நெடுஞ் சாலையில் அமைந்துள்ள அன்னை மணியம்மையார்  முழு உருவச்சிலைக்கு மாலை அணிவித்து, மகளிர் தோழர் களால் எழுச்சி முழக்கங்கள் முழங்கப்பட்டன.

பெரியார் திடலில் அமைந் துள்ள தந்தை பெரியார் 21 அடி உயர உருவச்சிலை அருகில் கழகப்பொறுப்பா ளர்கள், மகளிர் தோழர்கள் கூடி மலர் வளையம் வைத்து தந்தைபெரியார் வாழ்க, அன்னை மணியம்யை£ர் வாழ்கவென முழக்கமிட்ட னர்.

அன்னை மணியம்மையார் நினைவிடம், தந்தைபெரியார் நினைவிடம், சுயமரியாதைச் சுடரொளிகள் நினைவிடத் தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தி, தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் உறுதிகூற அனைவரும் அவ ரைத் தொடர்ந்து சூளுரை ஏற்றனர்.

கழகத்துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், செய லவைத் தலைவர் சு.அறி வுக்கரசு, பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், பொருளாளர் வீ.குமரேசன், வெளியுறவு செயலாளர் கோ.கருணாநிதி, பிரச்சாரச் செயலாளர் வழக் குரைஞர் .அருள்மொழி, கழக வழக்குரைஞரணி அமைப்பாளர் .வீரமர்த் தினி, மகளிரணி மாநில செய லாளர் தகடூர் தமிழ்செல்வி, மோகனா வீரமணி, மருத் துவர் மீனாம்பாள்,  .பார்வதி, சி.வெற்றிச்செல்வி, பெரியார் புத்தக நிலைய மேலாளர் ..நடராசன், திராவிடர் வரலாற்று ஆய்வு மய்ய செயலாளர் பேராசி ரியர் ..மங்களமுருகேசன், அமைப்புச் செயலாளர் வி.பன்னீர்செல்வம், வெ.ஞானசேகரன், மாணவர் கழக மாநில செயலாளர் .பிரின்சு என்னாரெசு பெரியார், சென்னை மண்டல செயலாளர் தே.செ.கோபால், பெரியார் சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் பசும்பொன்செந்தில்குமாரி, மகளிர் பாசறை மாநில செய லாளர் வழக்குரைஞர் பா.மணியம்மை, அமைப்பாளர் வழக்குரைஞர் சே.மெ.மதி வதனி, டெய்சிமணியம்மை, பெரியார் களம் இறைவி, பூவை செல்வி, பெரியார் மாணாக்கன், ஆடிட்டர் இராமச்சந்திரன், தென் சென்னை மாவட்டத் தலை வர் இரா.வில்வநாதன்,  தாம் பரம் மாவட்டத் தலைவர் .முத்தையன், சோழிங்க நல்லூர் மாவட்டத் தலைவர் ஆர்.டி.வீரபத்திரன், ஆவடி மாவட்டத் தலைவர்பா.தென்னரசு, வடசென்னை மாவட்டச் செயலாளர்தி.செ.கணேசன், உடுமலை வடிவேல், புரசை சு.அன்புச் செல்வன், .வெங்கடேசன் மற்றும் திராவிடர் கழக மகளிர் அணி, மகளிர் பாசறை பொறுப்பாளர்கள் பெருந்தி ரளாக அன்னை மணியம் மையார் பிறந்த நாள்விழாவில் எழுச்சியுடன் பங்கேற்றனர்.

கருத்தரங்கம்

திராவிடர் கழக மகளி ரணி, மகளிர் பாசறை சார்பில் நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் அன்னை மணி யம்மையார் 102ஆவது பிறந்த நாள் கருத்தரங்கம் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

வழக்குரைஞர் .வீரமர்த் தினி வரவேற்புரை ஆற்றி னார்.

 மகளிருக்கு தேவை 50% இடஒதுக்கீடே! எனும் தலைப்பில்தகடூர் தமிழ்ச்செல்வி, “லவ் ஜிகாத்?”தலைப்பில் வழக்கு ரைஞர் சே.மெ.மதிவதனி, மதங்களும் மகளிரும் தலைப் பில் வழக்குரைஞர் பா.மணி யம்மை, திராவிடர்  இயக்க மும் மகளிரும் தலைப்பில் வழக்குரைஞர் .அருள் மொழி ஆகியோர் கருத்தரங்க உரையாற்றினார்கள்.

இறைவி இணைப்புரை வழங்கினார். கருத்தரங்கத் தின் முடிவில் .சுமதி நன்றி கூறினார்.


Comments