தமிழகமெங்கும் அன்னை மணியம்மையார் 102ஆம் பிறந்தநாள் விழா (10.3.2021)

சென்னை, மார்ச் 11- தமிழகமெங்கும் அன்னை மணியம்மையார் 102ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா வெகு விமர் சையாக கொண்டாடப்பட்டது. அதன் விவரம் வருமாறு:

ஈரோடு

அன்னை மணியம்மையாரின் 102ஆவது பிறந்த நாளை முன்னிட்டு ஈரோடு பெரியார் மன்றத்தில் மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் கு.சிற்றரசு தலைமையில் அன்னை மணியம்மையார் படத்திற்கு மலர்மாலை அணிவித்து மரி யாதை செய்யப்பட்டது.

இந்நிகழ்வில் மாநில அமைப்புச் செய லாளர் ஈரோடு .சண்முகம், பொதுக்குழு உறுப்பினர் கோ.பாலகிருஷ்ணன், மாவட் டச் செயலாளர் மா.மணிமாறன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் தே. காமராஜ், மாநகர கழகச் செயலாளர் வீ.தேவராஜ், ஈரோடு ஒன்றிய கழகச் செயலாளர் து.நல்லசிவம், மண்டல இளைஞரணிச் செயலாளர் சா.ஜெபராஜ் செல்லத்துரை, மற்றும் நல்லையன் பாண் டியன் ஆகியோர் கலந்து கொண்டனர். அன்னை மணியம்மையாரின் பிறந்த நாளை முன்னிட்டு ஈரோடு மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் குருதிக்கொடை வழங்கப்பட்டது மாநில கழக அமைப்புச் செயலாளர் ஈரோடு .சண்முகம், மாவட் டத் தலைவர் கு.சிற்றரசு, மாவட்ட செய லாளர் மா.மணிமாறன், மண்டல இளை ஞரணி செயலாளர் சா.ஜெபராஜ் செல்லத் துரை, மற்றும் ஈரோடு பெரியார் புத்தக நிலையம் சீனு மதிவாணன், ஆகியோர் குருதிக்கொடை வழங்கினர்.

கோவை - சுந்தராபுரம்

திராவிடர் கழகம் சார்பில் அன்னை .வெ.ரா மணியம்மையார் பிறந்தநாள் விழா சுந்தராபுரம் பெரியார் சிலை முன்பு மண்டல மகளிரணி செயளாலர் .கலைச் செல்வி தலைமையில் நடைபெற்றது.

நிகழ்வில் பேராசிரியர் தவமணி, மாவட்ட மகளிரணி கவிதா, முத்துமணி, வ.ராஜேஸ்வரி, தக யாழினி, ரா.அன்புமதி, கல்பனா, பாக்கியா, விமலா, சித்ரா, மற்றும் மண்டல செயலாளர் ச.சிற்றரசு, மாவட்ட தலைவர் ம.சந்திரசேகர், மாவட்ட செயலா ளர் திக செந்தில் நாதன், தமிழ் முரசு, மாநகர செயலாளர் புலியகுளம் க.வீரமணி, தோழர் வெங்கிடு, வெற்றி செல்வன், இலைக்கடை செல்வம், திக ஆனந்த், தொழிலாளரணி செயலாளர் த.செல்வ குமார், வடிவேல், ஹாரிஸ், மதிமுக ஈஸ் வரன், உள்ளிட்ட தோழர்கள் பங்கேற்றனர்

வெள்ளலூர்

கோவை மாவட்டம் வெள்ளலூர் பகுதியில் அமைந்துள்ள தந்தை பெரியார் பகுத்தறிவு படிப்பகத்தில் அன்னை மணி யம்மையார் அவர்களின் 102ஆவது பிறந்த நாள் விழாவை அவரது உருவ படத்திற்கு கோவை மாவட்ட துணை செயலாளர் திக. காளிமுத்து, வெள்ளலூர் நகர அமைப்பா ளர்  சுந்தரராஜன், நகர துணை செயலாளர் ஆறுச்சாமி, மதுக்கரை ஒன்றிய செயலாளர்  பொன்ராஜ், அடுக்குமாடி குடியிருப்பு பகுதி பொறுப்பாளர் ரவி ஆகியோர் மலர்தூவி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி சிறப்பாக கொண்டாடினர்

திண்டிவனம்

தந்தை பெரியார் படிப்பகத்தில் அன்னை மணியம்மையார் அவர்களின் 102ஆவது பிறந்த நாள் விழா கொண்டாடப் பட்டது. அன்னை மணியம்மையார் படத் திற்கு மாலை அணிவித்து உறுதிமொழி ஏற்கப்பட்டது.

சேலம்

சேலம் மாவட்டம் சார்பில் அன்னை மணியம்மையாரின் 102ஆவது பிறந்த நாளை முன்னிட்டு சேலம் மாவட்ட தலைவர்

. ஜவகர், மண்டலத் தலைவர் சி.சுப்ர மணியம், சேலம் மாவட்ட செயலாளர் சேலம் இளவழகன், பொதுக்குழு உறுப் பினர் பழனி புள்ளையண்ணன், ஓமலூர் சவுந்தரராஜன் மற்றும் சேலம் மாவட்ட அமைப்பாளர் .வெளி. இராவணபூபதி சுஜாதா, பெரியார் பிஞ்சு .அட்சயா தமிழ் செல்வன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

போடி

அன்னை மணியம்மையார் 102 வது பிறந்த நாள் போடி நகர திராவிடர் கழகத்தின் சார்பில் கொண்டாடப்பட்டது.மாவட்டத் தலைவர் இரகுநாகநாதன்,போடி சுருளிராசு, பன்னாட்டு மனித உரிமை கழகத்தின் நகர செயலர் கனகராஜ்  மற்றும்  பொதுமக்கள் பங்கேற்றனர்.

தருமபுரி

அன்னை மணியம்மையார் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது தருமபுரியில் மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் தந்தை பெரியார் சிலை அருகில் அன்னை மணியம்மையார் உருவ படத்திற்கு மாலை அணிவித்து அன்னை மணியம்மையாரின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்விற்கு மாவட்ட தலைவர்வீ. சிவாஜி தலைமை தாங்கினார். கழகப் பொறுப்பாளர்கள், பொமக்கள் கலந்து கொண்டனர்.Comments