கடந்த நான்கு மாதங்களில் மட்டும் மானிய சமையல் எரிவாயு விலை ரூ.100 அதிகரிப்பு

கடந்த நான்கு மாதங்களில் மட்டும் மானிய சமையல் எரிவாயு உருளை விலை 100 ரூபாய் அதிகரித்து இருக்கிறது. 2015இல் இருந்து எந்த இடைவெளியும் இன்றி விலை அதிகரித்தே வந்து கொண்டு இருக்கிறது. அதே கால கட்டத்தில் பன்னாட்டு எரிவாயு விலை $880 டாலரில் இருந்து $328 டாலராகக் குறைந்து போயிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பாஜகவின் சென்ற ஆட்சியின் சாதனை களில் ஒன்றாக மானிய சமையல் எரிவாயு ஊரகப் பகுதிகளுக்கு வழங்கியதை குறிப்பிடுவார்கள். 'பிரதான் மந்திரி உஜ்வல் யோஜனா' என்ற இந்த திட்டம் அறிவிக்கப்பட்ட பொழுது பிரதமரை வாழ்த்தி நானும் ஒரு பதிவு எழுதினேன்.

ஆனால் அப்படிப் பெற்ற பயனாளிகளில் பலர் உருளைகள் விலையேற்றம் காரண மாக பாரம்பரிய அடுப்பு முறைகளுக்கு மாறி விட்டிருக்கிறார்கள் என்று தெரி கிறது. 2019இல் மத்திய அரசின் CAG அறிக்கையிலேயே கிட்டத்தட்ட 35% பயனாளிகள் பாராம்பரிய முறைக்கு மாறி விட்டிருக்கிறார்கள் என்று தெரிவிக்கிறது.

பீகார், .பி., .பி., ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் RICE Institute எனும் ஆய்வு நிறுவனம் நடத்திய சர்வே இன்னும் கவலையான நிலவரத்தை காட்டுகிறது. இந்த மாநிலங்களில் 2014இல் இருந்து 2018இல் சமையல் எரிவாயு உருளை பரவல் 44% அதிகரித்து இருந்தாலும், சர்வே எடுத்த மொத்த வீடுகளில் 77% பேர் கரி அல்லது விறகு அடுப்புகளையே தொடர்ந்து பயன்படுத்துகிறார்கள். 

இது மிகவும் கவலைக்குரிய நிலவரம். பாரம்பரிய அடுப்புகளில் சமைக்கும் பெண் களை சுவாசப்பை சம்பந்தமான நோய்கள் தாக்குகின்றன. 

இந்தியாவில் மட்டும் ஆண்டுக்கு சுமார் 13 லட்சம் பெண்கள் இது தொடர்பான பாதிப்புகளில் மரணிக்கிறார்கள்.

மானியத்தை நிறுத்துவதும், விலையை தொடர்ந்து அதிகரிப்பதும் இந்த எண் ணிக்கையை அதிகரிக்கவே வழிவகுக்கும்.

அதுபோலவே போலி குடும்ப பங்கீட்டு அட்டை பிராடுகளை ஒழிக்கிறேன் பேர் வழி என்று இந்தியா முழுக்க 3-4 கோடி குடும்ப பங்கீட்டு அட்டைகளை ரத்து செய்திருந்தது இந்த அரசு. ஆனால் ஆதார் இணைப்பு செய்யப்படவில்லை என்பதே அந்த ரத்துகளுக்கு காரணமாக இருந்தது என்று விமர்சகர்கள் கூறுகிறார்கள். இதன் காரணமாக ஊரகப் பகுதிகளில் பட்டினி சாவுகள் அதிகரித்து விட்டன என்றும் குற்றம் சாட்டுகிறார்கள். இது சம்பந்தமான ஒரு வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலு வையில் இருக்கிறது. அதில் 19.3.2021 அன்று நடந்த விசாரணையில் பட்டினி சாவுகள் குறித்து நீதிமன்றம் கவலை தெரிவித்து இருக்கிறது. குடும்ப பங்கீட்டு அட்டை ரத்துகள் காரணமாக தேசமெங்கும் பட்டினிக் கொடுமைகள் அதிகரிப்பது குறித்து நானும் தொடர்ந்து பதிவுகள் எழுதி வந்திருக்கிறேன். நீதிமன்றத்தின் கண்டனம் என் நிலைப்பாட்டை உறுதி செய்கிறது.

இலவசங்களை ஒழிக்கிறோம், இலவசம்-சம்பந்தமான பிராடுகளை ஒழிக்கிறோம் என்று வாய் கிழியப் பேசும் இவர்களின் அணுகுமுறை இந்த லட்சணத்தில்தான் இருக்கிறது. விறகடுப்பு புகை காரணமாக பெண்கள் இறக்கிறார்கள். ரேஷன் தானியங்கள் கிடைக்காமல் முதியோர், குழந்தைகள் பட்டினியில் வாடுகிறார்கள். இறந்தும் போகிறார்கள். இவை குறித்த எந்த பிரக்ஞையையும் இன்றி இவர்கள் உலவி வருகிறார்கள். தாங்களும் எந்த ஆய் வையும் மேற்கொள்வதில்லை. வெளியில், உள்ளில் இருந்து வரும் எந்தப் புள்ளி விபரத்தையும் கண்டு கொள்வதும் இல்லை.

தேசபக்தி என்பது கற்பனையாக வடிக்கப் பட்ட கொடியின் மீதோ, கற்பனையாக புனையப்பட்ட துர்க்கையைப் போன்ற ஒரு பிம்பத்தின் மீதோ ஆன மத-ரீதியான பக்தியாக இருக்கும் வரை இப்படிப்பட்ட அவலங்கள் தொடரவே செய்யும். இவர் களின் தேசபக்தி கான்செப்ட்டில் தேசத்தின் மக்கள் மீதான உண்மையான அக்கறை இல்லை என்பதையே இவை காட்டுகின்றன.

-Sridhar Subramaniamமுகநூலிலிருந்து

Comments