மராட்டியத்தில் இரவு ஊரடங்கு அமலுக்கு வந்தது மீறனால் ரூ.1000 அபராதம்

 மும்பை, மார்ச் 28 பொது இடங்களில் 5 பேருக்கு மேல் கூட தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த ஊரடங்கை மீறினால் ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும்.

மராட்டியத்தில் 2-ஆவது அலை கரோனா தொற்று அதி தீவிரமாக பரவி வருகிறது. நேற்று முன்தினம் (26.3.2021) 36 ஆயிரத்து 902 பேர் பாதிப்புக்கு ஆளானார்கள். 112 பேர் இந்த கொடிய நோய்க்கு பலியானார்கள்.

இதன் காரணமாக மராட்டியத்தில் இரவு ஊரடங்கு இன்று முதல் அமலுக்கு வரும் என்று அரசு அறிவித்து இருந்த நிலையில், அது நேற்றே (27.3.2021) அமலுக்கு வந்து விட்டது. பொது இடங்களில் 5 பேருக்கு மேல் கூட தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த ஊரடங்கை மீறினால் ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும். மேலும் நேற்று முதல் அரசியல், மத ரீதியான கூட்டங்கள் உள்பட அனைத்து வகையிலான மக்கள் கூடுத லுக்கும் தடை விதிக்கப்படுவதாக அரசு அறிவித்து உள்ளது.

இதற்கிடையே அவசியத்தை பொறுத்து அந்தந்த மாவட் டங்கள் முழு ஊரடங்கை அமல்படுத்தலாம் என்று முதல்-அமைச்சர் உத்தவ் தாக்கரே உத்தரவிட்டார்.

 

கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை  பின்பற்றாத

16 பள்ளிகள்,  4 கல்லூரிகளுக்கு அபராதம்

தஞ்சை, மார்ச் 28 தஞ்சையில் கரோனா வழிகாட்டு நெறி முறைகளை பின்பற்றாததால் 16 பள்ளிகள், 4 கல்லூரிகளுக்கு தலா ரூ.5,000 அபராதம் விதித்து மாவட்ட ஆட்சியர் கோவிந்த ராவ் உத்தரவிட்டுள்ளார்.

தஞ்சை மாவட்டத்தில் கடந்த 2 வாரமாக கரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதி கரித்து வருகிறது. குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவ-மாண விகள், ஆசிரியர்கள் கரோனா தொற்றுக்கு ஆளாகி வருகின் றனர்.  தஞ்சையில் ஏற்கெனவே 14 பள்ளிகளில் 229 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியிருந்தது. இந்நிலையில் நேற்று (27.3.2021) மேலும் 2 பள்ளிகளில் 14 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதையடுத்து தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் அனைவரும் தஞ்சாவூ மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தஞ்சை மாவட்டத்தில் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ள 16 பள்ளிகள் மற்றும் 4 கல்லூரிகளுக்கு தலா ரூ.5,000 அபராதம் விதிக்கப் பட்டுள்ளது. இந்த பள்ளிகள் அரசாங்கம் அறிவித்த கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றவில்லை என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கோவிந்த ராவ் தெரிவித்துள்ளார்.

 

ஓட்டுநர் உரிமம், வாகன பதிவு புதுப்பிக்க கால அவகாசம்

புதுடில்லி. மார்ச். 28 வாகனப் பதிவு, ஓட்டுநர் உரிமம் புதுப்பிக்க மேலும் 3 மாதங்கள் கால அவகாசத்தை மத்திய அரசு வழங்கி உள்ளது. கரோனா வைரஸ் பரவல் காரணமாக, வாகன ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல், வாகனம் பதிவு புதுப்பித்தல் உள்ளிட்டவற்றுக்கு இம்மாதம் 31ஆம் தேதி வரை அவகாசம் கொடுக்கப்பட்டு இருந்தது. ஆனால் கரோனா தொற்று மீண்டும் அதிகரித்துள்ளதால் மேற்கண்டவற்றுக்கு கால அவகாசம் அளிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

இந் நிலையில் வாகனப் பதிவு, ஓட்டுநர் உரிமம் புதுப்பிக்க மேலும் 3 மாதங்கள் கால அவகாசத்தை மத்திய அரசு வழங்கி உள்ளது. அதன்படி, வரும் ஜூன் மாதம் 30ஆம் தேதி  வரை அவகாசம் நீட்டிக்கப்படுவதாக மத்திய நெடுஞ்சாலைகள் துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

பிரதமர் மோடி, மேற்கு வங்கம் குறித்து பேசியது தேர்தல் விதிமீறல்: மம்தா  குற்றச்சாட்டு

சிலிகுரி, மார்ச். 28  வங்கதேசம் சென்ற பிரதமர் மோடி, மேற்கு வங்கம் குறித்து பேசியது தேர்தல் விதிமீறல் என திரிணாமு காங்கிரஸ் தலைவரும், முதலமைச்சருமான மமதா குற்றம்சாட்டி உள்ளார்.

காரக்பூரில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் அவர் பேசியதாவது:  2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலின் போது, எங்களது தேர்தல் பிரச்சாரத்தில் வங்கதே சத்தை சேர்ந்த நடிகர் ஒருவர் கலந்து கொண்டார். இதனை யடுத்து வங்கதேச அரசிடம் பேசிய பாஜக அவரின் விசாவை ரத்து செய்ய வைத்தது. தற் போது, மேற்கு வங்கத்தில் தேர்தல் நடக்கும் போது, குறிப்பிட்ட மக்களின் ஆதரவை பெறுவதற்காக பிரதமர் வங்கதேசம் சென்றார். உங்களின் விசாவை ஏன் ரத்து செய்யக்கூடாது? தேர்தல் நடக்கும் நேரத்தில் வங்கதேசம் சென்ற பிரதமர். மேற்கு வங்கம் குறித்து பேசுகிறார். இது, முற் றிலும் தேர்தல் நடத்தை விதிகளை மீறிய செயல். ஓட்டுக்காக பிரதமர் வங்கதேசம் சென்றுள்ளார் என்று பேசினார்.

 

 

Comments