வழிகாட்டும் மேற்கு வங்கம் 100 பெண்களுக்கு வாய்ப்பளிக்கும் மம்தா

கொல்கத்தா, மார்ச்.5  மேற்கு வங்கத் தேர்தலில் முதல் முறையாக 100 பெண்களுக்கு வாய்ப்பு கொடுக்க மம்தா முடிவு செய்துள்ளார். இதில் அதிகமானோர் பட்டதாரிகள் மற்றும் புதுமுகங்கள் ஆவார்கள்.

 தமிழகம், புதுவை, கேரளா, அசாம் மாநிலத்தின் தேர்தலோடு மேற்கு வங்கத்திற்கும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

8 கட்டங்களாக நடக்கும் மேற்குவங்கத் தேர்தலில் கடந்த முறை அதிக இளைஞர்களுக்கு அதிகம் வாய்ப்பு கொடுத்த மம்தா தனது திரிணாமுல் கட்சியின் சார்பில் 100 பெண்களுக்கு இம்முறை வாய்ப்பு கொடுத்துள்ளார்.

இதில் பெரும்பாலானோர் புதுமுகம் மற்றும் பட்டதாரிகள் என்பதோடு பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமாக திகழும் மேற்குவங்கம் என்ற பெருமையை தக்கவைத்துகொண்டதாக முதல்வர் மம்தா தெரிவித்துள்ளார்.

Comments