நோய்த்தொற்றிலிருந்து கரோனா தடுப்பூசிகள் 10 மாதங்கள் வரை பாதுகாப்பு வழங்கும் எய்ம்ஸ் இயக்குநர் உறுதி

புதுடில்லி, மார்ச் 21- இந்தியா வில் கரோனா தடுப்பூசி போடும் பணிகள் வேகமாக நடந்து வரும் நிலையில், இந்த தடுப்பூசியின் பாதுகாப்பு அம்சங்களை எய்ம்ஸ் மருத் துவனை இயக்குநர் ரந்தீப் குலேரியா நேற்று (20.3.2021) விளக்கினார்.

இதுகுறித்து அவர் கூறும் போது, ‘கரோனா தடுப்பூசி கள் 8 முதல் 10 மாதங்கள் வரை தொற்றில் இருந்து பாதுகாக்கும். ஒருவேளை இன்னும் அதிகமும் இருக் கலாம்என்று கூறினார்.

நாட்டில் மீண்டும் கரோனா தொற்று வேக மெடுத்து வருவதற்கு பல காரணங்கள் இருந்தாலும், பொதுமக்களிடம் அதன் மீதான அச்சம் மற்றும் கரோனா முடிந்து விட்டது என்ற எண்ணமே பிரதான காரணம் என்றும் அவர் கூறினார். எனவே, மக்கள் அவசியமற்ற பயணங்களை இன்னும் கொஞ்ச காலம் தவிர்க்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

இந்த கருத்தை நிதி ஆயோக் உறுப்பினர் (சுகா தாரம்) வி.கே.பாலும் ஆமோ தித்தார்.

60 வயதுக்கு மேற்பட்ட வர்கள் மற்றும் இணை நோயாளர்களிடமே அதிக உயிரிழப்பு காணப்படுவதாக கூறிய அவர், எனவே இந்த பிரிவினர் தடுப்பூசி போடு வதை தாமதிக்கக்கூடாது எனவும் அறிவுறுத்தினார்.

Comments