தி.மு.க.வின் 10 ஆண்டு தொலைநோக்குத் திட்டம் 7 உறுதிமொழிகளை அளித்தார் தளபதி மு.க.ஸ்டாலின்

சென்னை, மார்ச்திருச்சி சிறுகனூரில் சுமார் 750 ஏக்கர் பரப் பளவில் திமுக பொதுக் கூட்டம் நேற்று (7.3.2021) நடந்ததுதிமுக தலைவர் தளபதி மு..ஸ்டாலின்,  'மு..ஸ்டாலின் 7 உறுதிமொழிகள்' என்று பெயர் சூட்டிய 10 ஆண்டு தொலை நோக்கு திட்டத்தை வெளி யிட்டு பேசினார். மு..ஸ்டாலின் அறிவித்த 7 தலைப்பிலான உறுதி மொழிகள் வருமாறு:

வளரும் வாய்ப்புகள்,

வளமான தமிழ்நாடு:

* ரூ.35 லட்சம் கோடியை தாண்டும் இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சி.

* தனிநபர் வருமானத்தை ஆண் டுக்கு 4 லட்சத்துக்கும் மேலாக உயர்த்துதல்

* ஆண்டுக்கு 10 லட்சம் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கி வேலைவாய்ப்பின்மை விகிதத்தை சரிபாதியாக குறைத்தல்

* கடும் வறுமையில் வாடும் ஒரு கோடி பேரை மீட்டெடுத்து, வறுமைக் கோட்டுக்கு கீழ் ஒருவரும் இல்லாத முதல் மாநிலமாகத் தமிழகத்தை முன்னெடுத்தல்.

மகசூல் பெருக்கம்,

மகிழும் விவசாயி

* தமிழ்நாட்டின் நிகர பயிரிடும் பரப்பு இப்போது 60 விழுக்காடாக இருக்கிறது. கூடுதலாக 11.75 லட்சம் ஹெக்டேர் பயிரிட செய்து இதனை 75 விழுக்காடாக உயர்த்துதல்

* தமிழ்நாட்டில் இப்போது இரு போகநிலங்களாக 10 லட்சம் ஹெக் டேர் உள்ளது. இதனை 20 லட்சம் ஹெக்டேராக உயர்த்துதல்

* உணவு, தானியங்கள் மற்றும் தேங்காய், கரும்பு, பருத்தி, சூரியகாந்தி ஆகிய பணப்பயிர்களுக்கான வேளாண் ஆக்கத்திறனில் முதல் மூன்று இடங்களுக்கு தமிழகத்தை இடம் பெற செய்தல்

குடிமக்கள் அனைவருக்கும் குறையாத தண்ணீர் :

* தனிநபர் பயன்பாட்டுக்கான தண்ணீர் இருப்பை ஆண்டுக்கு 9 லட்சம் லிட்டரில் இருந்து 10 லட்சம் லிட்டராக உயர்த்துதல்

* நாளொன்றுக்கு வீணாகும் தண் ணீர் அளவினை 50 விழுக்காட்டில் இருந்து 15 விழுக்காடாக குறைத்தல்

* மறுசுழற்சி செய்து பயன்படுத்தப் படும் நீரின் விகிதத்தை 5 விழுக்காட் டில் இருந்து 20 விழுக்காடாக உயர்த்துதல்

* பசுமைப் பரப்பளவை 20.27 விழுக்காட்டில் இருந்து 25 விழுக் காடாக உயர்த்துவதற்கு 7.5 லட்சம் ஹெக்டேர் நிலங்களை கூடுதலாக இணைத்தல்

அனைவருக்கும் உயர்தரக்கல்வி மற்றும் உயர்ந்த மருத்துவம்:

* கல்வி (1.9 சதவீதத்தில் இருந்து 6 சதவீதம்) மற்றும் சுகாதாரத்திற்காக (0.75 சதவீதத்தில் இருந்து 2 சதவீதம்) மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இருந்து செலவிடப்படும் நிதியளவை மூன்று மடங்கு உயர்த்துதல்

* கற்றல் வெளிப்பாட்டுக்கான அளவீட்டில் முதல் 10 இடங்களுக்குள் தமிழகத்தை இடம் பெறச்செய்தல் (தற்போது 17ஆவது இடம்)

* பள்ளிக் கல்வியில் மாணவர்களின் ஒட்டு மொத்த இடைநிற்றல் விகிதத்தை 16 விழுக்காட்டில் இருந்து 5 விழுக்காட்டிற்கும் கீழாக குறைத்தல்

* அனைத்து ஊராட்சி ஒன்றி யங்களிலும் முன்மாதிரிப் பள்ளி களையும், மருத்துவமனைகளையும் அமைத்தல்

* மருத்துவர்கள்-செவிலியர்கள்-துணை மருத்துவர்கள் மற்றும் பிற தொழில்கல்விப் பட்டதாரிகளின் எண்ணிக்கையை இரட்டித்தல்

அனைவருக்கும்

அனைத்துமான தமிழகம் :

* குடும்பத்தலைவிகள் அனைவருக் கும் மாதம்தோறும் ரூ.1000 உரிமைத் தொகை வழங்குதல்

* தாழ்த்தப்பட்டவர் - பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட் டோருக்கான கல்வி உதவித் தொகையை இருமடங்கு உயர்த்தி வழங்குதல்

* மனிதக் கழிவுகளை மனிதரே அகற்றும் இழிவை முற்றிலுமாக ஒழித்தல்

எழில்மிகு மாநகரங்களின்

மாநிலம் :

* கூடுதலாக 36 லட்சம் வீடுகளுக்குக் குடிநீர்க் குழாய் இணைப்பு வழங்கு வதன் மூலம் குடிநீர் இணைப்பு பெற்ற நகர்ப்புற வீடுகளின் அளவை 35 விழுக்காட்டில் இருந்து 75 விழுக்காடாக உயர்த்துதல்

* அனைத்து நகர்ப்புறப் பகுதிகளி லும் திடக்கழிவு மேலாண்மை அமைப்பினை செயலுறச் செய்தல்

* புதிதாக 9.75 லட்சம் கான்கிரீட் வீடுகளை கட்டித் தருவதன் மூலம் குடிசைவாழ் மக்களின் அளவை 16.6 விழுக்காட்டில் இருந்து 5 விழுக்காட்டுக்கும் கீழாக குறைத்தல்

* நாட்டின் தலைசிறந்த 50 மாநக ரங் களின் பட்டியலில் தமிழ்நாட்டில் இருந்து 15 மாநகரங்களை இடம் பெறச்செய்தல் (தற்போது 11 உள்ளன)

உயர்தர ஊரகக் கட்டமைப்பு, உயர்ந்த வாழ்க்கைத் தரம்:

* தமிழ்நாட்டின் ஊரகப்பகுதி களில் இப்போது 57 விழுக்காடு கான்கிரீட் வீடுகள் உள்ளது. 20 லட்சம் கான்கிரீட் வீடுகளை புதிதாக் கட்டித்தந்து இதனை 85 விழுக்காட்டுக்கு உயர்த்துதல்

* கிராமங்களில் உள்ள ஒவ்வொரு வீட்டுக்கும் குடிநீர் குழாய் இணைப்பு வழங்குதல்

* எந்த வானிலைக்கும் அசைந்து கொடுக்காத சாலை இணைப்புகளை யும், வடிகால் அமைப்புகளையும் கட்டமைத்தல்

* எல்லா கிராமங்களிலும் அகன்ற அலைக்கற்றை இணைய வசதி ஏற் படுத்துதல்

* குறைந்தபட்சம் 50 விழுக்காடு கிராமங்களில் திடக்கழிவு மேலாண்மை அமைப்பினை செய லுறச் செய்தல் இவ்வாறு அறிவிப்புக்களை வெளியிட்டார். குடும் பத் தலைவிகள் அனைவருக்கும் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். ஆண்டுக்கு 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புகள், வறுமையில் வாடும் ஒரு கோடி பேரை மீட்டெடுப்பது, கல்வி உதவித் தொகை இரு மடங்காக உயர்த்தி வழங்குவது, கிராமங்களில் உள்ள ஒவ்வொரு வீட்டுக்கும் குடிநீர்க் குழாய் இணைப்பு வழங்குதல் ஆகிய வாக்குறுதிகள் பொதுமக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன.

Comments