அன்னை மணியம்மையார் அவர்களின்பிறந்த (10-3-1920) இந்நாளில்,


 10-03-1628 - நுண்ணிய உடற் கூறியல், ஹிஸ்டோலஜி, உடலியல் மற்றும் கருவியல் தந்தை என அழைக்கப்படும் மார்செல்லோ மால்பிகி அவர்களின் பிறந்த நாள்.

10-3-1801 - பிரிட்டனில் முதலாவது மக்கள் தொகைக் கணக் கெடுப்பு இடம்பெற்ற நாள்.

10-3-1876 - அலெக்சாண்டர் கிரகாம் பெல் உலகின் முதல் தொலை பேசி அழைப்பை மேற்கொண்ட நாள்.

10-3-1897 - சமூக சீர்திருத்தவாதியும், கவிஞரும், இந்தியாவின் முதல் பெண் ஆசிரியருமான சாவித்திரிபாய் புலே நினைவு நாள்.

(இவர் தன் கணவர் மகாத்மா ஜோதிராவ் புலேயுடன் இணைந்து, ஆங்கிலேயர் காலத்தில் பெண் உரிமைக்காகவும், கல்விக்காகவும் பாடுபட்டவர். பெண்கள் படிக்கவே கூடாது என்றிருந்த காலகட்டத் தில், இவர்கள் பெண் கல்விக்காக முதல் பள்ளியை பூனாவிற்கருகி லுள்ள பிடெ வாடாவில் 1848 ஆம் ஆண்டு நிறுவினார்)

10-3-1948 - இந்திய தேசிய முஸ்லிம் லீக் கட்சி துவங்கப்பட்ட நாள்.

10-3-1977 - யுரேனஸ் கோளைச் சுற்றி வளையங்களை வானியலா ளர்கள் கண்டுபிடித்த நாள்.

10-3-1978- முன்னாள் நீதிக்கட்சியின் தலைவர்களில் ஒருவரும், முன்னாள் சென்னை மாகாணத்தின் முதல்வரும், பின்னாளில் இந்திய அரசமைப்பு சட்ட ஆணையத்தின் உறுப்பினராகவும், ஆந்திர சட்டமன்ற உறுப்பினராகவும், பிறகு ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் பொப்பிலி சமஸ்தானத்தின் மன்னராக இருந்தவருமான ராமகிருஷ்ண ரங்கா ராவ் என்னும் இயற்பெயர் கொண்ட பொபிலி அரசர் அவர்களின் நினைவு நாள்.

Comments