அமெரிக்காவில் ஆளுக்கு ரூ.1 லட்சம் கரோனா நிதி: மசோதாவில் கையெழுத்திட்டார் ஜோ பைடன்


வாசிங்டன், மார்ச் 14 அமெரிக் காவில் கரோனா நிவாரண நிதியாக ஆளுக்கு ரூ.1 லட்சம் வழங்க வகை செய்யும் மசோதாவில் அதிபர் ஜோ பைடன் கையெழுத்திட்டார்.

 அமெரிக்காவில் இதுவரை 2 கோடியே 91 லட்சத்து 52 ஆயிரத் துக்கும் மேற்பட்டோரை இந்த கொடிய வைரஸ் தாக்கி உள்ளது.

அத்துடன் 5 லட்சத்து 29 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த வைரசின் பிடியில் இருந்து மீள ஒரு வழியின்றி மரணம் அடைந்துள்ளனர்.

அமெரிக்காவில் ஊரடங்கு, பொது முடக்கத்தால் பொருளா தாரமும், வர்த்தகமும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின. லட்சக்கணக் கானோர் வேலை இழந்தனர். நிறுவனங்கள் மூடப்பட்டன.

இந்த நிலையில் அங்கு இப்போது ஆட்சி மாற்றம் நடந்து அதிபர் ஜோ பைடன் தலைமையிலான நிர்வாகம் அதிகாரத்துக்கு வந்துள்ளது.

இந்த தருணத்தில் அங்கு கரோனா தாக்கத்தை சமாளிப்பதற்காக 1.4 டிரில்லியன் டாலர் (சுமார் ரூ.102 லட்சம் கோடி) மதிப்பிலான நிவா ரண மசோதா, நாடாளுமன்ற செனட் சபையில் தாக்கல் செய்யப் பட்டது.

அங்கு இந்த மசோதா நிறைவேறி விட்டது.

அதையடுத்து அந்த மசோதா பிரதிநிதித்துவ சபையின் ஒப்புதலுக் காக அனுப்பி வைக்கப்பட்டது. இதனையடுத்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் 1.9 டிரில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான கரோனா நிவாரண மசோதாவில் கையெழுத்திட்டார், இது திட்ட மிட்டதை விட ஒரு நாள் முன்னதாக கையெழுத்திட்டுள்ளார்.

இந்த நிதி மசோதா, அமெரிக்க மக்கள் பெரும்பாலோருக்கு தலா 1,400 டாலர் (சுமார் ரூ.1 லட்சத்து 2 ஆயிரம்) கரோனா நிதி நேரடியாக கிடைக்க வழி செய்துள்ளது.

மேலும் வேலையை இழந்தவர்கள் செப்டம்பர் மாதம் வரையில் மாதம் 300 டாலர் (சுமார் ரூ.22 ஆயிரம்) நிதி உதவி பெறவும் வழி வகுத்துள்ளது.

மேலும், அமெரிக்க மாகாண மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு 350 பில்லியன் டாலர், பள்ளிகளை திறப்பதற்காக 130 பில்லியன் டாலர், கரோனா பரிசோதனை, ஆராய்ச்சி விரிவாக்கத்துக்கு 49 பில் லியன் டாலர், தடுப்பூசி வினியோகத் துக்கு 14 பில்லியன் டாலர் (1 பில்லியன் என்பது 100 கோடி ஆகும்) வழங்கவும் உதவி உள்ளது.

Comments