புதுச்சேரியில்1 முதல் 11ஆம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி

புதுச்சேரி, மார்ச் 14 புதுவை, காரைக்கால் பகுதியில் பள்ளிக் கல்வியை பொறுத்தவரை தமிழக கல்வி வாரியத்தின் பாடத்திட்டமே மாணவர்களுக்கு கற்பிக்கப்படுகிறது.

புதுவையில் இந்த ஆண்டும் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு 1 முதல் 11ஆம் வகுப்பு வரையிலான அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் அறிவித்துள்ளார்.

ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் 11.3.2021 அன்று செய்திக்குறிப்பை வெளியிட்டார்.

அதில் கூறியிருப்பதாவது:-

புதுச்சேரி, காரைக்கால் பிராந்தியத்தில் உள்ள 1ஆம் வகுப்பு முதல் 9-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுகிறார்கள்.

இதேபோல் புதுவை காரைக் காலில் 10, 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் தமிழக கல்வி வாரியத்தின் வழிகாட்டுதலின் பேரில் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுகிறது.

மாகி, ஏனாம் பிராந்தியங்களில் படிக்கும் மாணவர்கள் கேரளா மற்றும் ஆந்திரா கல்வி வாரியத்தின் அடிப்படையில் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுகிறார்கள்.

இனிமேல் வாரத்தில் 5 நாட்கள் மட்டும் தான் பள்ளிகள் இயங்கும். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை விடப்படும்.

1ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு வருகிற 31ஆம் தேதி வரை மட்டுமே பள்ளிகள் இயங்கும்.

அடுத்த மாதம் (ஏப்ரல்) 1ஆம் தேதி முதல் கோடை விடுமுறை தொடங்கும்.

இருப்பினும் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் அந்தந்த மாநில வாரியங்களின் கால அட்டவணைப்படி நடத்தப் படும்.

இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

Comments