புதுவையில் மத்திய பா.ஜ.க. அரசு நடத்திய ஜனநாயக படுகொலைக்கு அனைத்துக் கட்சித் தலைவர்கள் கண்டனம்

சென்னை, பிப்.23 மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட புதுவை ஆட்சிக்கு நெருக்கடி கொடுத்து ஆட்சிக் கவிழ்ப்பு செய்த மத்திய பா... அரசின் ஜனநாயகப் படுகொலைக்கு அனைத்துக் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

மு..ஸ்டாலின்

திமுக தலைவர் தளபதி மு..ஸ்டாலின்  நேற்று (22.2.2021) விடுத்துள்ள அறிக்கை வருமாறு,

திரைமறைவு அரசியல் பேரம் நடத்தி, ஜனநாயகத் தைப் பட்டப் பகலில் பச்சைப் படுகொலை செய்யும் படுபாதகச் செயலையே இலட்சிய மாகக் கொண்ட மத் திய பா.. அரசு, மீண்டும் அதனைப் புதுச்சேரியில் அரங்கேற்றியிருக்கிறது.

துணை நிலை ஆளுநராக இருந்த கிரண் பேடி யைக் கொண்டு, புதுவை யூனியன் பிரதேசத்தின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் - தி.மு.. கூட்டணி அரசின் உரிமைகளைப் பறித்த துடன், மக்கள் நலத் திட்டங்கள் அனைத்துக்கும் தடை விதிக்கப்பட்டது. அதனை எதிர்த்து முதல மைச்சர் நாராயணசாமி அவர்களும் கூட்டணியி னரும் ஜனநாயக சக்திகளும் தொடர்ந்து போராடி வந்தன.

துணை நிலை ஆளுநர் கிரண்பேடியை மாற்ற வேண்டும் என நீண்டகாலமாகக் கோரிக்கை வைக்கப்பட்டு - போராட்டங்கள் நடத்தப்பட்ட போது அலட்சியமாக இருந்து, புதுச்சேரி மக்களை வஞ்சித்த மத்திய பா... அரசு, சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், பிற மாநிலங்களில் செய்தது போலவே சட்டமன்ற உறுப்பினர்களை விலை பேசும் குதிரை பேரம் நடத்தி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிக்கு நெருக்கடி கொடுத்ததுடன், துணை நிலை ஆளுநர் கிரண் பேடியை மாற்றிவிட்டு, தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராசனை   துணை நிலை ஆளுநர் கூடுதல் பொறுப்பாக நியமித்த போதே இதன் உள்நோக்கத்தைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டேன்.

மிகவும் மோசமான - அரசியல் நாகரிகமற்ற அந்த உள்நோக்கத்தின் அடிப்படையில், குதிரை பேரம் நடத்தியும், மக்களால் தேர்ந்தெடுக்கப்படாமல் தாங்களாகவே நியமித்துக்கொண்ட உறுப்பினர் களுக்குப் பேரவையில் வாக்குரிமை உண்டு எனச் சொல்லியும், புதுச்சேரியில் மக்கள் நலன் காத்த முதலமைச்சர்   நாராயணசாமி தலைமையிலான அரசைக் கவிழ்த்திருக்கிறது பா...

பா...வின் மக்கள் விரோத செயல்பாடுகளையும்   சட்ட அத்துமீறல்களையும் பேரவையில் எடுத்து ரைத்து, தனது முதலமைச்சர் பதவியிலிருந்து விலகியிருக்கிறார் நாராயணசாமி.

ஜனநாயகம் காப்பதில் அவருடைய துணிச் சலான செயல்பாட்டை வாழ்த்துகிறேன்.

தமிழகத்துடன் இணைந்து புதுச்சேரியும் சட்டப்பேரவைத் தேர்தலைச் சந்திக்க உள்ள நிலையில் ஜனநாயகப் படுகொலையை நடத்தியிருக் கிறது மத்திய பா.. அரசு. தமிழ்நாட்டில் ஒரு சட்டமன்ற உறுப்பினர்கூட இல்லாவிட்டாலும், அடிமை .தி.மு..வை கைப்பாவையாக்கி ஆட்சி நடத்துவதுபோல, புதுச்சேரியில்  தேர்தலைத் தள்ளிவைத்து, துணை நிலை ஆளுநர் மூலம் மறைமுக ஆட்சி நடத்திட முயற்சித்தால் அதனை நீதிமன்றத்தில் சட்டரீதியாக எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகளில் தி.மு.கழகம் துணை நிற்கும்.

அதிகார அத்துமீறல் செய்து சட்டமன்றங்களில் சடுகுடு ஆடலாம். ஆனால், மக்கள் மன்றம் வேடிக்கை பார்த்துக் கொண்டு அமைதியாக இருக் காது. அதனால், இந்த ஜனநாயகப் படுகொலையை எதிர்த்து தி.மு.. - காங்கிரஸ் கூட்டணி மக்கள் மன்றம் செல்லும்!

இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வைகோ

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

பாரதிய ஜனதா கட்சி ஆட்சிப் பொறுப்பு ஏற்ற 2014-ஆம் ஆண்டு முதல், மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில அரசுகளைக் கவிழ்த்து வருகின்றது. அருணாசலப் பிரதேசம், கோவா, நாகாலாந்து, கருநாடகம் மற்றும் மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில், பெரும் பான்மை பலத்துடன் நடைபெற்ற எதிர்க்கட்சி அரசுகளை, சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கிக் கவிழ்த்தனர்; பாஜக அரசு அமைத்தனர். இத்தகைய கேடு கெட்ட அரசிய லுக்கு, ஆளுநர்கள் உறுதுணையாக இருந்து, அரசு அமைப்புச் சட்ட நெறிகளைக் குழிதோண்டிப் புதைத்து வருகின்றனர்

அந்த வரிசையில், புதுச்சேரி மாநிலத்தில், தி.மு. கழக ஆதரவுடன், பெரும்பான்மை பலத்துடன் இயங்கி  வந்த நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசை, மிகக் கேவலமான முறையில் கவிழ்த்து ஜனநாயகப் படுகொலை நடத்தி இருப்பது கடும் கண்டனத்துக்கு உரியதாகும்.

புதுச்சேரியின் துணைநிலை ஆளுநராக இருந்த கிரண் பேடி பொறுப்பு ஏற்ற நாள் முதல், நாராய ணசாமி அரசுக்கு நாள்தோறும் தொல்லைகள் கொடுத்து வந்தார். மக்கள் ஆட்சிக் கோட்பாட் டைக் குழிதோண்டிப் புதைத்தார். அதனால், புதுச்சேரி மக்களின் கடுங்கோபத்திற்கும், வெறுப் புக்கும் ஆளான கிரண் பேடியை நீக்குவது போல ஒரு நாடகத்தை நடத்தி, சட்டப்பேரவை உறுப் பினர்களை விலைக்கு வாங்கிஆட்சியைக் கவிழ்க்கும் வேலையையும் செய்து முடித்து இருக்கின்றனர்.

இரண்டு மாதங்களில் சட்டப்பேரவைத் தேர் தல் நடைபெற இருக்கின்ற நிலையில், மக்களைச் சந்தித்து, அவர்களுடைய நம்பிக்கையைப் பெறு வதைக் கைவிட்டு விட்டு, சட்டமன்ற உறுப்பி னர்களை கட்சி தாவச் செய்து பாஜகவில் சேர்த் துக்கொண்டு, இந்த ஜனநாயகப் படுகொலையை அரங்கேற்றி இருக்கின்றார்கள். அடிமை .. .தி.மு.., கை கட்டி, வாய்பொத்திச் சேவகம் செய்கின்றது. அவர்களுடைய கூட்டணிக்கு, நடை பெற இருக்கின்ற தேர்தலில், மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள். இவ்வாறு கூறியுள்ளார்.

கே.பாலகிருஷ்ணன்

இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு,

புதுச்சேரியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை துணை நிலை ஆளுநரை பயன்படுத்தி கடந்த 4 1/2 ஆண்டுகளாக முடக்கம் செய்து மக்களுக்கான திட்டங்களை நிறைவேற்ற முடியாத நிலைமையை மத்திய பாஜக அரசு ஏற்படுத்தி வந்தது. புதுச்சேரியில் பாஜகவின் நியமனச் சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவோடு ஆட்சியைப் பிடிக்கக் கீழ்த்தரமான, சட்டவிரோதச் செயலில் பாஜக இறங்கியிருக்கிறது.

ஆட்சி முடிவுறும் நிலையில் தனது அதிகார பலம், பண பலத்தை பயன்படுத்தி சில சட்டமன்ற உறுப்பினர்களை பதவி விலக வைத்து அரசியல் அலங்கோலத்தை அரங்கேற்றியுள்ளது.

இதன் தொடர்ச்சியாக பிப்ரவரி 22ஆம் தேதி அன்று காங்கிரஸ், திமுக கூட்டணி அரசு சட்ட மன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண் டும் என  துணைநிலை ஆளுநர் உத்தரவிட்டிருந்தார்.

அதற்குள்ளாக மேலும் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி அவர்களது சட்டமன்ற உறுப்பினர் பதவிகளை விலக வைத்து புதுச்சேரியில் பாஜக நிறைவேற்றியுள்ள ஜன நாயகப் படுகொலையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.

இதைத்தான் பாஜக கட்சி கோவா, மத்திய பிர தேசம், கருநாடகா, மணிப்பூர் அருணாச்சல பிர தேசம், ஆகிய மாநிலங்களில் செய்தது. தற்போது புதுச்சேரியிலும் செய்துவருகிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை செயல்பட அனு மதிக்காததும், கவிழ்ப்பதும் பாஜகவின் கைவந்த கலையாக உள்ளது என்பது மீண்டும், மீண்டும் நிரூபிக்கப்பட்டு வருகிறது.

பாஜகவின் ஜனநாயக விரோத, அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரான செயல்களுக்கும் இதற்கு துணைபோகும் மற்றும் விலைபோகும் கட்சிமாறி களையும், அரசியல் வியாபாரிகளையும், வரும் சட்டமன்ற தேர்தலில் புறக்கணித்து புதுச்சேரி மக்கள் அவர்களுக்கு சரியான பாடத்தை புகட்டிட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சி கேட்டுக்கொள்கிறது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில நிர்வாகக்குழுக் கூட்டம் நேற்று 22.2.2021 அன்று சென்னையில் உள்ள மாநிலக் கட்சி அலுவலகத்தில் டி.மணிவாசகம் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் மூத்த தலைவர் இரா.நல்லகண்ணு, மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், நாடாளு மன்ற உறுப்பினர்கள் கே.சுப்பராயன், எம்.செல்வராசு, தேசிய நிர்வாகக்குழு உறுப்பினர் சி.மகேந்திரன், துணைச் செயலாளர் மு.வீரபாண்டியன், பொருளாளர் எம்.ஆறுமுகம் உட்பட நிர்வாகக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.

எதிர்கட்சிகள் அதிகாரத்தில் உள்ள மாநிலங்களில் குறுக்குவழியில் நுழைந்து ஜனநாயக விரோத முறையில் அதிகாரத்தைக் கைப்பற்றி வருவதன் தொடர்ச்சியாக பாஜக புதுச்சேரியிலும் சட்டவிரோதச் செயலில் ஆதாயம் தேடி தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களை விலைகொடுத்து வாங்கிவிட்டது.

புதுச்சேரியில் காங்கிரஸ் அரசை வீழ்த்திவிட ஆளுநர் மாளிகை வழியாக பல்வேறு அரசியல் சதிவேலைகளை தொடர்ந்து அரங்கேற்றி வந்தது. தற்போது மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஆட் சியை செயல்படவிடாமல் முடக்குவதில் வெற்றி பெற்று விட்டது.

அரசியல் அமைப்பு சட்டத்தின் அடிப்படை களை தகர்த்து, மக்கள் உணர்வுகளை நிராகரித்து, ஜனநாயக நெறிமுறைகளை சிறுமைப்படுத்தி பாஜக மத்திய அரசு புதுச்சேரியில் அரங்கேற்றியுள்ள ஜனநாயகப் படுகொலையை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. பாஜகவின் ஜனநாயக விரோத, அதிகார அத்துமீறலுக்கு எதிராக ஜனநாயக சக்தி ஒருமுகமாகத் திரண்டு போராடி முறியடிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறது.

தி.வேல்முருகன்

தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது,

நாட்டில் பெட்ரோல், டீசல், எரிவாயு மற்றும் அத்தியாவசியப் பொருட் கள் நாளுக்கு நாள் உயர்த்து வருகிறது. புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து விவ சாயிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

புதிய கல்விக் கொள்கை திட்டம், சி.. உள்ளிட்ட பல்வேறு மோசமான சட்டத்தின் மூல மாக, நாட்டு மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். நாட்டின் பொருளாதார வளர்ச்சி என்பது மிகவும் பின் தங்கியுள்ளது. இதில் எல்லாம் கவனம் செலுத்தாத பாசிச மோடி அரசு, ஆட்சிக் கவிழ்ப்பில் ஈடுபடுவதிலேயே தொடர்ந்து அதிக ஆர்வம் காட்டி வருகிறது.

பாசிச பாஜகவின் சர்வாதிகார போக்கு ஜனநாயகத்திற்கு எதிராக முடியும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி எச்சரிக்கை விடுக்கிறது.

அருணாச்சலப் பிரதேசம், மணிப்பூர் ,கோவா, மேகாலயா, கருநாடகா, மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில், ஆட்சி கவிழ்ப்பு செய்து குறுக்கு வழியில் தனது ஆட்சியை நிறுவியுள்ள பாஜக அரசு, தற்போது, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கியும், மிரட்டியும் தனது ஆட்சியை  அமைக்க திட்ட மிட்டுள்ளது. இதற்காக, மக்களால் தேர்ந்தெடுக் கப்பட்ட நாராயணசாமி ஆட்சியை திட்டமிட்டு கவிழ்த்துள்ளது பாஜக. பாசிச மோடி அரசின் மோசடியான செயலுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறது.

இது நாட்டின் ஜன நாயகத்தை அவமானப் படுத்துவதோடு, வாக்க ளித்த ஒட்டுமொத்த மக் களையும் இழிவுப்படுத்தும் செயலாகும் என்பதையும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சுட்டிக்காட்டுகிறது.

எனவே, வரும் தேர்தல் களில் தமிழகத்திலும், புதுச் சேரியிலும் எம் அறிவார்ந்த தமிழ் மக்கள், பாஜகவிற்கும், அதற்கு துணைபோகும் அதிமுக அரசுக்கும் தக்க பாடம் புகட்டுவார்கள் என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் நினைவுப் படுத்துகிறேன்.

இவ்வாறு அனைத்துக் கட்சித்தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Comments