பிரபல பல் மருத்துவர் C.K.தனசேகரனுக்கு நமது வீரவணக்கம்

தமிழகத்தின் முதல், தலைசிறந்த முக அறுவை சிகிச்சை மருத்துவர் - டாக்டர் C.K. தனசேகரன் அவர்கள் தனது 89ஆவது வயதில் நேற்று (13.2.2021) கோட்டூர்புரம் கார்டனில் உள்ள தனது இல்லத்தில் காலமானார் என்பதை அறிந்து மிகவும் வருந்துகிறோம்.

பல் மருத்துவ துறையில் நீண்ட அனுபவமும், திறமையும், தனித்தன்மையான ஆற்றலுடன் திகழ்ந்த இவர் பேராசிரியர்களுக்கெல்லாம் பேராசிரியராக அத் துறையில் திகழ்ந்தவர்.

திராவிடர் இயக்கமான நீதிக்கட்சியின் நிறுவனத் தலைவர்களில் மிக முக்கியமான டாக்டர் சி.நடேசனாரின் கொள்ளுப் பேரன் என்பதும் நாம் இவரிடம் மிகுந்த மரியாதை கொள்ள ஒரு முக்கிய காரணமாகும்.

சென்னை பல் மருத்துவமனையில்டீன்'ஆக பல ஆண்டுகள் பணியாற்றிய பல் மருத்துவ மேதை.

லிபியா நாட்டு அதிபர் கடாபி அமெரிக்கா சென்று நடத்திக் கொள்ள வேண்டிய அறுவை சிகிச்சையை லிபியாவில் அப்போது பணியாற்றிய பேராசிரியர் C.K.D.  அவர்கள் அங்கேயே வெற்றிகரமாகச் செய்து பெரும் புகழ் ஈட்டியவர்.

இவரைப் பார்ப்பனர்கள் பணிக்காலத்தில் பழிவாங்க முயற்சித்தபோது, அதைத் தடுத்தாட் கொண்டவர் தந்தை பெரியார். இவர் பணியின் மேன்மையால் பலர் உருவாகக் காரணமான ஆற்றலாளர்.

பண்புடன் பழகியவர்; நமக்குப் பலமுறை பல் சிகிச்சைக்கு உதவிய மனிதநேயரும் கூட!

அவரது மறைவால் வாடும் அவரது செல்வங்களுக்கும், துணைவியாருக்கும், அனைவருக்கும் நமது ஆழ்ந்த இரங்கலும், ஆறுதலும்.

அவருக்கு நமது வீரவணக்கம்.

அவரது இறுதி நிகழ்ச்சி இன்று (14.2.2021) நடைபெறும்.

 

கிவீரமணி

தலைவர்

திராவிடர் கழகம்

சென்னை

14-2-2021

Comments