அய்ந்தில் ஒரு இந்தியருக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு

அய்சிஎம்ஆர் ஆய்வு

 புதுடில்லி, பிப். 7- இந்தியாவின் மக்கள் தொகையில் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் 21 சதவீதம் பேர் இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட் டுள்ளதாக அண்மையில் வெளி யிடப்பட்ட தேசிய ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

18 வயதுக்கும் மேற்பட்ட சுமார் 28,589 பேரிடம் நடத் தப்பட்ட இந்த ஆய்வில் 21.4 சதவீதம் பேருக்கு கரோனா வைரஸ் தொற்று வந்து போயி ருப்பது தெரிய வந்துள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கூறுகிறது.

எனினும், இன்னும் இந்திய மக்கள் தொகையில் பெரும ளவு பேர் கோவிட் தொற்றால் பாதிக்கப்படும் விளிம்பில் இருப் பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா தடுப்பூசி திட்டம் தொடங்கும் முன்பு அதாவது, டிசம்பர் 17 முதல் ஜனவரி 8ஆம் தேதி வரை இந்த ஆய்வு நடத்தப் பட்டிருக்கிறது.

தடுப்பூசி திட்டத்தில் முதல் சுற்றில் இந்தியாவின் முன்களப் பணியாளர்களுக்கு இதுவரை சுமார் 4.5 மில்லி யன் டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டிருக்கின்றன.

அமெரிக்காவுக்கு அடுத்து, கரோனாவால் அதிகம் பேர் பாதிக்கப்பட்ட நாடாக இந் தியா இருக்கிறது. இங்கு ஒரு கோடிக்கும் மேற்பட்டவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட் டுள்ளனர். எனினும், சமீப வாரங்களில் தொற்று பாதிக் கப்பட்டோர் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருகி றது.

10-17 வயதுடைவர்களில் 25.3 சதவீதம் பேருக்கு உடலில் கோவிட் தொற்றுக்கு எதிரான ஆண்டிபாடீஸ் இருப்பது இந்த தேசிய ஆய்வில் தெரிய வந்துள்ளதாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய அய்சிஎம்ஆர் அமைப் பின் இயக்குனர் ஜெனரல் பல்ராம் பார்கவா தெரிவித்தார்.

கோவிட்டுக்கு எதிரான ஆண்டிபாடீஸ், சுகாதாரப் பணியாளர்கள் மத்தியில் அதிகம் காணப்பட்டதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதில் சுமார் 25.7 சதவீதம் பேருக்கு உடலில் கோவிட் டுக்கு எதிராக எதிர்ப்பு சக்தி இருந்துள்ளது. முக்கியமாக மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மத்தியில் 26.6 சதவீதமும், சுகாதார நிர்வாக பணியாளர்கள் மத்தியில் 24.9 சதவீதமும் இருந்துள்ளது.

நகர்ப்புறத்தில் உள்ள குடிசைப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் மத்தியில் 31.7 சதவீதம் பேருக்கு கோவிட் ஆண்டி பாடீஸ் இருப்பதும், குடிசை யற்ற பகுதிகளில் இருப்பவர் களில் 26.2 சதவீதம் பேருக்கு எதிர்ப்புத்திறனும் இருந்துள் ளது.

தலைநகர் டில்லியை பொறுத்தவரை அங்கிருக்கும் மக்கள் தொகையில் பாதி பேருக்கு, அதாவது 56.13 சத வீதம் பேருக்கு கோவிட் எதிர்ப்புத் திறன் வளர்ந்துள் ளதாக ஆய்வு குறிப்பிடுகிறது.

Comments