அமெரிக்க நாடாளுமன்றத்தில் புதிய குடியேற்ற மசோதா தாக்கல்

வாசிங்டன்,பிப்.20- அமெரிக் காவின் 46ஆவது அதிபராக கடந்த மாதம் பதவியேற்ற ஜோ பைடன், முன்னாள் அதிபரான டிரம்ப் நிர்வாகத்தால் கொண்டுவரப்பட்ட சர்ச்சைக்குரிய திட்டங்கள் மற்றும் மோசமான கொள்கைகளை அதிர டியாக மாற்றியமைத்து வருகிறார்.

அந்த வகையில் டிரம்ப் கொண்டு வந்த கடுமையான குடி யேற்ற கொள்கைகளில் சீர்திருத்தம் செய்து புதிய குடியேற்ற சட்டம் அமல்படுத்தப்படும் என ஜோ பைடன் சூளுரைத்தார். இது தொடர்பாக அவர் பல நிர்வாக உத்தரவுகளையும் பிறப்பித்தார்.

இந்நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் நிர்வாகம்அமெரிக்க குடியுரிமை சட்டம் 2021' என்ற சட்ட மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது.‌

இந்த குடியேற்ற மசோதாவின் முக்கிய நோக்கம் முறையான ஆவ ணங்கள் இல்லாமல் அமெரிக் காவில் வேலை பார்த்து வரும் 1 கோடியே 10 லட்சம் பேருக்கு குடியுரிமை வழங்குவதாகும்.

அத்துடன் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு நிரந்தர குடியுரிமைக்காக வழங்கப்படும் கிரீன் கார்டு வழங்குவதில் உள்ள சிக்கல்களை களைவது மற்றும் எச்1 பி விசாதாரர்களுக்கு பணி அங்கீ காரம் வழங்குவது ஆகியவையும் இந்த மசோதாவின் முக்கிய அம்ச மாகும்.

இந்த மசோதா சட்டமானால் அமெரிக்காவில் வேலை பார்த்து வரும் லட்சக்கணக்கான இந்தி யர்கள் மற்றும் அவர்களின் குடும் பத்தினர் பயனடைவார்கள். குறிப் பாக, அய்.டி. எனப்படும் தொழில் நுட்பத் துறையில் பணியாற்றி வரும் பல்லாயிரக்கணக்கான இந்தி யர்களுக்கு இந்த சட்டம் மிகப் பெரும் வரப்பிரசாதமாக அமையும்.

இந்த மசோதாவை இயற்றிய ஜனநாயகக் கட்சி எம்.பி‌.க்கள் பாப் மெனண்டெஸ் மற்றும் லிண்டா சான்செஸ் ஆகிய இருவரும் மசோதா குறித்து பத்திரிகையா ளர்களிடம் கூறுகையில், ‘‘அமெ ரிக்க குடியுரிமை சட்டம் 2021, தார்மீக மற்றும் பொருளாதார கட்டாயத்தையும் குடியேற்ற சீர்தி ருத்தத்தின் விரிவான பார்வையும் உள்ளடக்கியது’’ என்றனர்.

இதுகுறித்து அவர்கள் மேலும் கூறுகையில் ‘‘புலம்பெயர்ந்தோர் நம் நாட்டுக்கும் சமூகத்துக்கும் பெரிதும் பங்களிப்பு செய்கிறார்கள். அவர்கள் வணிகங்களை வைத்திருக் கிறார்கள், வரி செலுத்துகிறார்கள்.

நமது குழந்தைகளுக்கு கற்பிக் கிறார்கள்.‌ அவர்கள் நமது சக ஊழியர்கள், அண்டை நபர்கள் மற்றும் நண்பர்கள் ஆவர். எவரை யும் பின்னுக்கு தள்ளாத குடி யேற்றத்திற்கான மூல காரணங் களை நிவர்த்தி செய்யும் மற்றும் நம் நாட்டின் தேசிய பாதுகாப்பினை பாதுகாக்கும் தைரியமான குடி யேற்ற சீர்திருத்தத்தை இறுதியாக செயல்படுத்த நமக்கு ஒரு வரலாற்று வாய்ப்பு உள்ளது. இதை முறைப்படி செய்து முடிக்க நமக்கு தார்மீகப் பொறுப்பு உள்ளது’’ எனக் கூறினர்.

 

Comments