'திராவிடம் வெல்லும்' தெருமுனை பிரச்சாரக் கூட்டம்

குடந்தை, பிப். 16- குடந்தை கழக மாவட்டம் வலங்கை மான் ஒன்றிய கழகம் சார்பில் திராவிடம் வெல்லும் தெரு முனை பிரச்சார கூட்டம்

11-.2.-2021 வியாழன்,மாலை 6 மணியளவில் வலங்கைமான் கடைவீதியில் ஒன்றிய தலை வர் நா.சந்திரசேகரன் தலை மையில் எழுச்சியுடன் நடை பெற்றது.

நிகழ்ச்சிக்கு மாவட்ட து.தலைவர் வே.கோவிந்தன் ஒன்றிய அமைப்பாளர் இரா.ஜெயபால் ஆகியோர் முன் னிலை ஏற்றனர். நிகழ்ச்சியில் கழக பேச்சாளர் தஞ்சை இரா.பெரியார்செல்வன் சிறப்புரையாற்றினார்.

நிகழ்ச்சியில் தஞ்சை மண்டல செயலாளர் .குரு சாமி, மாவட்ட தலைவர் கு.நிம்மதி மாவட்ட செயலா ளர் சு.துரைராஜ், குடந்தை பெருநகர தலைவர் தலைவர்  கு.கவுதமன், பெருநகர செய லாளர் பீ.இரமேஷ், மாவட்ட மகளிரணி துணைச் செயலா ளர் எம். திரிபுரசுந்தரி ஆகி யோர் கலந்து கொண்டு உரை யாற்றினார்.

மேலும் திருவிடைமருதூர்  (தெ) ஒன்றிய செயலாளர் .சங்கர் திருவிடைமருதூர் ஒன்றிய துணைச் செயலாளர்  வே.குணசேகரன் நாச்சியார் கோயில  சுதன்ராஜ் ஆகி யோர் கலந்து கொண்டனர்

நிகழ்ச்சியில் வலங்கை மான் பகுதியை சேர்ந்த இளைஞர்கள் .வினோத், இரா.நவீன், .அஜய், .பாவேந் தன், தே.சிறீகாந்த், .கார்த்தி கேயன், இரா.ரஞ்சித், விமல், சரவணன் ஆகியோர் கலந்து கொண்டு திராவிடர் கழக இளைஞரணியில் இணைந்து செயல்பட விருப்பம் தெரித் தனர்.

கழகப் பொறுப்பாளர்கள் அவர்களுக்கு இரா.பெரியார் செல்வன் மூலம் தந்தை பெரியார், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் எழுதிய புத்தகங்களை பரிசளித்து வரவேற்றனர்.

நிகழ்ச்சிக்கு வருகை தந் தோரை ஒன்றிய துணைச் செயலாளர் சி. ராமச்சந்திரன் வரவேற்றும் மாவட்ட இளை ஞரணி துணை தலைவர் நா.பெரியார்  தினேஷ் நன்றி கூறியும் உரையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments