நீதிக்கட்சி
உருவாவதற்கு முக்கிய காரணமாகத் திகழ்ந்த டாக்டர் நடேசனார் 1875 ஆம் ஆண்டு சென்னையில்
பிறந்தவர்ஆவார். சென்னை பல்கலைக் கழகத்தில் பட்டப் படிப்பு படித்து பட்டம் பெற்றவர் என்பதோடு மட்டுமன்றி, மிகச் சிறந்த மருத்துவர், மருத்துவ நிபுணர், 'கைராசிக்காரர்' என்று மக்களால் வாயார மனதாரப் பாராட்டப் பெற்றவர். நீதிக்கட்சியின் தலைவர், சீரிய சிந்தனையாளர், சிறந்த பேச்சாளர், எழுத்தாளர் என்று பன்முகத் தன்மை கொண்ட மனிதநேயப் பண்பாளர் நடேசனார் அவர்கள்.
அப்போதைய
சென்னை ராஜதானியில் இருந்த அரசியல் உயர் நிலைப் பொறுப்புகள் அனைத்தையும் பார்ப்பனர்களே ஆக்கிரமித்து இருந்தனர். ஆங் கிலேயர் ஆட்சியில் பார்ப்பனர்கள் முழுமையாக அங்கம் வகித்ததோடு மட்டுமல்லாமல், அவர்கள் ஏராளமான சலுகைகளை அனுபவித்து உண்டு கொழுத்து வந்தனர். இக்கொடுமைகளைக் கண்ட நடேசனார் அவர்கள், பார்ப்பனர் அல்லாத மக்கள் கல்வி வேலை வாய்ப்பின்றி மிகவும் ஏழ்மை நிலையில்
உழன்று வருவதைக் கண்டு வெகுண் டெழுந்தார். இதன் காரணமாக திராவிட இன மக் களுக்கு
உதவிக்கரம் நீட்ட வேண்டும் என்ற உயரிய எண்ணத்தின் வெளிப்பாடாக 1912இல் 'சென்னை திராவிடர் சங்கம்' என்ற
புதிய அமைப்பை உருவாக்கி திராவிட இன மக்களின் விடியலுக்கு
வித்திட்டார் என்பது திராவிட இயக்க வரலாற்றில் பொன் எழுத்துக் களால் பொறிக்கப்பட வேண்டிய ஓர் முக்கிய நிகழ்வாகும்.
நடேசனார்
அவர்களால் உருவாக்கப்பட்ட 'சென்னை
திராவிடர் சங்கம்' பார்ப்பனர் அல்லாத மக்களின் நலனுக்கான அமைப்பாக, வெகு மக்களின் ஆதரவோடு வெற்றிகரமாக இயங்கி வந்தது. ஆங்கிலேயர் அரசில் மிகச் சொற்ப எண்ணிக்கையில் கடைநிலை ஊழியர்களாக பணியாற்றி வந்த பார்ப்பனர் அல்லாத ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் மாலை நேரத்தில் திராவிடர் சங்கத்தில் ஒன்றுகூடி சமுதாயத்தில் தங்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளைச் சுட்டிக்காட்டி அதற்கான தீர்வுகளைக் களைய முற்படுவர். இதனால் இச்சங்கம் திராவிட இன மக்களுக்கு ஒரு
திருப்பு முனையாக அமைந்தது.
மேலும்
இச்சங்கத்தில் சிந்தனைச் சிற்பி சிங்கார வேலர், பேராசிரியர் லட்சுமி நரசு, எல்.டி.சாமிக்கண்ணு, திரு.வி.க. போன்ற
அறிஞர்களின் அறிவார்ந்த உரை யாடல்கள், சொற்பொழிவுகள் ஆகியவை அவ்வப் போது நடைபெற்று வந்தன என்பது பெருமைப்படத் தக்க இனிய செய்தியாகும்.
இவ்வாறு
தொய்வின்றி தொடர்ந்து நடைபெற்ற திராவிடர் சங்கத்தின் சீர்மிகு பணிகளேதான் பின் னாளில் நீதிக்கட்சி என்ற அரசியல் கட்சி துவங்குவ தற்கு அடித்தளமாக அமைந்தது. திராவிட மாண வர்களின் வறுமை நிலையைக் கண்டு வருந்திய நடேசனார், தமது இன மாணவர்கள் படிப்பதற்கு
ஏதுவாக சென்னையில் 'திராவிடர்
இல்லம் ' என்ற மாணவர் விடுதியை துவக்கி அவ்வில்லத்தில் மாண வர்கள் இலவசமாக தங்குவதற்கும், படிப்பதற்கும், உணவு அருந்துவதற்கும் வழிவகை செய்தார். டாக்டர்
நடேசனார் அவர்களின் சீரிய சிந்தனையால், மனிதநேயத்தால் திராவிட
மாணவர்களின் கல்விக் கண் திறக்கப்பட்டது. இதன் பயனாய் ஆர்.கே. சண்முகம் செட்டியார் போன்ற பெருமக்களை உரு வாக்கி நாட்டிற்கு நற்பணி ஆற்ற வைத்த பெருமை டாக்டர் நடேசனாரையேச் சாரும்.
நடேசனார்
அவர்களின் பெரு முயற்சியால் - உழைப்பால் 1916 -ஆம் ஆண்டு நவம்பர் 20 அன்று நீதிக்கட்சி என்ற பார்ப்பனர் அல்லாதார் இயக்கம் துவக்கப்பட்டது. திராவிட இன மக்களிடையே விழிப்புணர்வை
ஏற்படுத்தும் நோக்கில் நடேசனார் தனது பொன்னையும், பொருளையும் பெருமளவு செலவழித்து எண்ணற்ற பொதுக் கூட்டங்களையும், மாநாடுகளையும் நாடு முழுவதும் நடத்தி அறியா மையில் மூழ்கிக் கிடந்த திராவிட இன மக்களைத் தட்டி
எழுப்பி எழுச்சி பெறச் செய்தார். ஆற்காடு ராமசாமி முதலியார் நீதிக்கட்சியின் மூளையாக இருந்து செயல்பட்டார் என்றால், நடேசனார் அக்கட்சி யின் இதயமாக விளங்கினார் என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.
திராவிட
இன மக்களின் இழிநிலையைத் துடைத் தெறிய நீதிக்கட்சி அயராது போராடியதின் பயனாய் 1919-இல் மாண்டேகு செம்ஸ்போர்டில் சில சீர்திருத் தங்கள் செய்யப்பட்டன. அதன் விளைவாக, சட்டமன் றத்தில் வகுப்புவாரி முறையில் முதன்முதலாக பார்ப் பனர் அல்லாதார் இடம் பெற வழி ஏற்பட்டது. இத் தகைய சமூகப் பாதுகாப்பு கிடைத்ததின் பயனாய், நீதிக்கட்சி ஆக்கமும் ஊக்கமும் பெற்று வீறுகொண்டு எழுந்தது. இதனைத் தொடர்ந்து அரசு சார்ந்த வாரியங் களிலும், நிர்வாகத்திலும், சென்னைப் பல்கலைக்கழக ஆட்சி மன்றக் குழு போன்ற முக்கிய அமைப்புகளிலும் வகுப்புவாரி பிரதிநிதித்துவ முறையைக் கொண்டு வந்து அதனை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று ஆங்கிலேய அரசிடம் நீதிக்கட்சி கோரிக்கை வைத்தது.
இவ்வாறு
ஒடுக்கப்பட்ட மக்களுக்காக இரவு - பகல் பாராமல் ஓய்வின்றி, சலிப்பின்றி ஓயாது உழைத்
ததின் பயனாய் 1920 - ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் நீதிக்கட்சி சார்பில் போட்டி யிட்ட நடேசனார் அவர்கள் முதல் சட்டமன்றத் தேர்தலிலேயே சென்னை மாநகரத்தில் அதிக வாக் குகள் பெற்று வெற்றி பெற்றவர் என்ற பெருமைக் குரியவர் ஆவார். நீதிக்கட்சி 1920 - ஆம் ஆண்டு டிசம்பர் - 17 அன்று பெருவாரியான மக்கள் ஆதர வோடு ஆட்சி அமைத்தது. மேலும்,
1920 முதல் 1937 வரை நடேசனாரின் சட்டமன்றப் பணிகள், செயல் பாடுகள், மக்கள் பணிகள் ஆகியவை தொய்வின்றி தொடர்ந்து நடைபெற்றன. சட்டமன்றத்தில் நீதிக் கட்சியின் செயல் திட்டங்களுக்காகவும், வகுப்புரிமைக் காகவும் வாதாடி - போராடி திராவிட இன மக்களின் உரிமைகளை
மீட்டெடுத்த 'மகத்தான மா மனிதர் '
டாக்டர் நடேசனார் அவர்கள் ஆவார். இவரது முயற் சியால் நிறைவேறிய சட்டமன்றத் தீர்மானங்களிலேயே ஆகச் சிறந்தது 'பார்ப்பனர்
அல்லாதார் யார்?' என்
பதைப் பற்றிய வரைவுதான் என்று இன்றளவும் வெகுவாகப் பேசப்படுகின்ற ஓர் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த சட்டமன்றத் தீர்மானமாகும்.
திராவிட
இன மக்கள் மேம்படவும், கல்வி - வேலை வாய்ப்பில் சிறந்து விளங்க வேண்டும் என்ப தற்காகவும் அல்லும் - பகலும் அயராது பாடுபட்ட நடேசனார் அவர்களின் ஓயாத உழைப்பும், தன்ன லமற்ற தொண்டும் அளப்பரியதாகும். எனவேதான், டாக்டர் நடேசனார் மறைவின்போது 'குடி அரசு' இதழில் தந்தை பெரியார் அவர்கள் எழுதிய இரங்கல் அறிக்கையில் நடேசனாரின் கள்ளங் கபடமற்ற தன்மையை, ஈகை குணத்தை வள்ளல் தன்மையை, மனிதநேயத்தை முத்தாய்ப்பாக குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு
திராவிட இன மக்களுக்காக தன்னை
முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டு செயற்கரிய செயல் ஆற்றிய டாக்டர் சி. நடேசனார் அவர்களின் நினைவு நாளான இன்று (பிப்ரவரி-18) அவரது
உயரிய குறிக்கோளை - லட்சியத்தை வென்றெடுக்கும் வகையில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் தலைமையில் திராவிட இன மக்கள்
அனைவரும் ஒன்றிணைந்து சமூகநீதி - இட ஒதுக்கீடு, கல்வி
- வேலை வாய்ப்பிற்கு ஏற்பட்டுள்ள சவால் களை, இன்னல்களை, கேடுகளைக் களைந்தெறிந்து சமூகநீதிக் கொடியை வானளாவ உயர்த்திப் பிடிப் போம் என்று உறுதியேற்போம்!
வாழ்க
நடேசனார் புகழ்! வெல்க சமூகநீதி!
- சீ. இலட்சுமிபதி, தாம்பரம்.