தமிழகத்தை மோடி ஆட்சிக்கு அடகு வைத்துள்ளார்: எடப்பாடி பழனிசாமி மீது ஆ.இராசா தாக்கு

சென்னை, பிப். 20- சென்னை வடக்கு மாவட்டம் ராயபுரம் மேற்குப்பகுதி சார்பில்வி டி யலை நோக்கி ஸ்டாலின் குரல்என்ற பெயரில் மாபெ ரும் பொதுக்கூட்டம் வண்ணை நகரில்சோலையப்பன் தெருவில் நேற்று முன்தினம் மாலை நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு ராய புரம் மேற்கு பகுதி செயலாளர் சுரேஷ் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக திமுக துணைப் பொதுச் செய லாளர் .இராசா கலந்து கொண்டு சிறப்புரையாற்றி னார். அப்போது அவர் உரை யில் குறிப்பிடுகையில், தனக்கு பதவி கொடுத்த சசிகலாவிற்கே எடப்பாடி நன்றியாக இல்லை. பின்னர் எப்படி தமிழக மக் களுக்கு நன்றியாக இருப்பார். திமுக தலைவர் வாக்குறுதி யாக எதைக் கூறுகிறார் அதை செய்யும் வேலையில் தான் எடப்பாடி உள்ளார். விவ சாய கடன் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் தள்ளுபடி செய் யப்படும் என்று கூறினார். உடனடியாக எடப்பாடி அவசர அவசரமாக விவசாயக் கடன் தள்ளுபடி என்று கூறு கிறார். தமிழகத்தை மோடி ஆட்சிக்கு அடகு வைத்துள் ளார்.  வரும் தேர்தலில் - மக் கள் நீங்கள் இந்த ஆட்சிக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் என்றார்.

Comments